மதுகிரி
மதுகிரி (Madhugiri) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்தின் தெற்கே அமைந்துள்ள மது-கிரி (தேன்-மலை) என்ற ஒரு மலையிலிருந்து இந்த பெயரைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் 34 கல்வி மாவட்டங்களில் மதுகிரியும் ஒன்றாகும். [2]
மதுகிரி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°40′N 77°13′E / 13.66°N 77.21°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தும்கூர்[1] |
ஏற்றம் | 787 m (2,582 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 29,159 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | |
வாகனப் பதிவு | கேஏ-64 |
3,930 அடி (1,200 மீ) உயரத்தில், மதுகிரி ஒரே மலையாக அமைந்துள்ளது. இதன் செங்குத்தான சரிவுகளில் ஒரு கோட்டை அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பம்சமாக பாறை குவிமாடம் உள்ளது. அந்தரலடா பாகிலு, திட்டி பாகிலு, மைசூர் வாயில் ஆகியவை கோட்டையின் மூன்று நுழைவாயில்கள். தொடர்ச்சியான கதவுகள் மலையை நோக்கி செல்கின்றன. இடிந்துபோன கோபாலகிருஷ்ணர் கோயில் மேலே அமைந்துள்ளது. [3] கோட்டைக்கு ஏறுவது மிகச்சிரமமான நிலை உள்ளது. இதை ஏறுவதற்கு 4 மணிநேரம் ஆகும். [4]
நிலவியல்
தொகுமதுகிரி 13.66 ° வடக்கிலும் 77.21 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [6] இதன் சராசரி உயரம் 787 மீட்டர் (2582 அடி) ஆகும்.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]ப்படி]],[7] மதுகிரியின் மக்கள் தொகை 26,351 என்ற அளவில் இருந்தது. மக்கள்தொகையில் 52% ஆண்களும், 48% பெண்களும் இருந்தனர். மதுகிரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 77%, மற்றும் பெண் கல்வியறிவு 67% ஆகும். மதுகிரியில், 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
வேளாண்மை
தொகுமதுகிரியில் பயிரிடப்படும் பிரதான பயிர்கள் நிலக்கடலை, கேழ்வரகு, மாம்பழம், பட்டுப்புழு வளர்ப்பு, தென்னை, காகடா (மலர்). இது மாதுளை பழத்திற்கும் அறியப்படுகிறது. [8]
போக்குவரத்து
தொகுதும்கூர் தொடர்வண்டி நிலையம் 44 கி.மீ. தொலைவிலுள்ளது. பெங்களூரிலிருந்து மதுகிரியை அடைய சாலையின் மூலம் பல வழிகள் உள்ளன.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://indianexpress.com/article/cities/bangalore/bangalore-is-now-bengaluru/
- ↑ http://ssakarnataka.gov.in/pdfs/aboutus/edn_profile_state.pdf
- ↑ "Madhugiri Pincode". citypincode.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.
- ↑ Madhugiri Trek blog. sakrecubes travel blogs.
- ↑ "Bird's Eye View of Maddagiri, A Flat-Roofed Town in Mysore". Chronicles of the London Missionary Society. 1890. https://archive.org/details/chroniclelondon00unkngoog. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Madhugiri. Fallingrain.com. Retrieved on 2012-09-04.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "TUMKUR DISTRICT TOURIST PLACES".