மத்திய தில்லி மாவட்டம்
மத்திய தில்லி மாவட்டம், தில்லியின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்று. இங்கு 644,005 பேர் வாழ்கின்றனர். இது 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. சதுர கிலோமீட்டருக்குள் 25, 759 பேர் வாழ்கின்றனர். மக்கள் நெருக்கடி மிகுந்த மாவட்டங்களில் ஒன்று. முகலாயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய நகரமாக விளங்கிய பழைய தில்லி எனும் ஷாஜகானாபாத், இந்த மாவட்டத்தில் உள்ளது. இங்கு, செங்கோட்டை, ஜும்மா மசூதி, சாந்தினி சவுக், சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார், திகம்பர சமணக் கோயில் ஆகியன உள்ளன.
மத்திய தில்லி
மத்திய டெல்லி | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
அரசு | |
• நிர்வாகம் | தில்லி மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
ஆட்சி மையம் | தில்லி மாநகராட்சி |
இது மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: தர்யா கஞ்சு, பகார் கஞ்சு மற்றும் கரோல் பாக்
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 578,671 மக்கள் வாழ்ந்தனர்.[1] சதுர கிலோமீட்டருக்கு 25, 759 பேர் வாழ்கின்றனர்.[1] பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 892 பெண்கள் உள்ளனர்.[1] இங்கு வாழ்வோரில் 85.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.