மனநல ஆராய்ச்சி அறக்கட்டளை
மனநல ஆராய்ச்சி அறக்கட்டளை (Schizophrenia Research Foundation) என்பது 1984-ல் சென்னையில் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். இது கடுமையான மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளை திருவேற்காடு மற்றும் மகாபலிபுரத்தில் இரண்டு குடியிருப்பு மறுவாழ்வு மையங்களுடன், சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள மனநல மையத்தையும் கொண்டுள்ளது.
சுருக்கம் | SCARF |
---|---|
உருவாக்கம் | 1984 |
வகை | அரசு சார்பற்ற அமைப்பு |
நோக்கம் | மனநலம் & ஆராய்ச்சி |
தலைமையகம் | |
சேவை பகுதி | தென்னிந்தியா |
தலைவர் | ஆர். சேசாயி |
துணைத் தலைவர் | தாரா இரங்கசாமி |
இயக்குநர் | ஆர். பத்மாவதி |
முக்கிய நபர்கள் | எம். சாரதா மேனன் (நிறுவனர்) |
சார்புகள் | உலக சுகாதார அமைப்பு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
வலைத்தளம் | www |
ஆராய்ச்சி
தொகுஉலக சுகாதார நிறுவனத்தால் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் இந்த அறக்கட்டளை பங்கெடுத்துள்ளது. உலக மனநல சங்கம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், கிங்ஸ் கல்லூரிஇலண்டன், ஆக்ஸ்பாம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், நிம்கன்சு மற்றும் டாட்டா சமூக அறிவியல் கழகம் ஆகிய மனநல ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பயணிக்கின்றது.[1] தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், 'மனநலம் மற்றும் சமூக அறிவியலில்' முனைவர் பட்டப் படிப்புகளுக்கான மையமாக இந்த அறக்கட்டளை நிறுவனத்தினை அங்கீகரித்துள்ளது.[2] அறக்கட்டளையின் மாநாடு (ICONS) இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் உலகம் உலகம் முழுவதிலுமிருந்துலும் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
கல்வியாளர்கள்
தொகுதேசிய தேர்வு வாரியம் 2009 முதல் மனநல மருத்துவத்தில் முதுநிலை படிப்பின் பயிற்சிக்கான மையமாக இதனை அங்கீகரித்துள்ளது. மனநல ஆராய்ச்சி அறக்கட்டளை உளவியல், சமூகப் பணி, செவிலியம், மற்றும் தொழில்சார் சிகிச்சை ஆகியவற்றில் பல்வேறு பயிற்சி மற்றும் பட்டறைகளை வழங்குகிறது. இது தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்துடன் இணைந்து 'மனநலப் பராமரிப்பு மற்றும் ஆலோசனையில்' ஒரு வருட பட்டயப்படிப்பினையும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மனநலத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் வழங்குகிறது.
விழிப்புணர்வு
தொகுமனநல ஆராய்ச்சி அறக்கட்டளை, மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான நலன்களுக்காகப் பரப்புரை செய்வதில் ஈடுபட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வை மேம்படுத்தவும், களங்கத்தைச் சமாளிக்கவும் ஒரு சர்வதேச திரைப்பட விழா, ஃபிரேம் ஆஃப் மைண்ட் ஒன்றை நடத்தியது. இந்த அறக்கட்டளை மனநலம் குறித்து எழுதும் பத்திரிகையாளர்களுக்கான ஊடக விருதையும் தொடங்கியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Research".
- ↑ "Scarf: Overcoming a stigma". The Hindu. 2004-02-18. Archived from the original on 2004-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.