மனாத்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்


மனாத், (Manāt) (அரபு மொழி: مناة‎  அரபு பலுக்கல்: [maˈnaː(h)] கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர், இசுலாமிற்கு முந்தைய அரேபியத் தீபகற்பத்தின், ஹெஜாஸ் பகுதிகளில், செமிடிக் மொழிகள் பேசிய மக்களால் வழிபட்ட தெய்வங்களில் ஒன்றாகும். [1]இப்பண் தெய்வத்தின் கணவர் ஹுபல் ஆவர்.

மனாத்
அல்-லாத் தெய்வத்தின் இருபுறங்களில் மனாத் மற்றும் அல்-உஸ்ஸா தெய்வங்கள், கிபி இரண்டாம் நூற்றாண்டு சிற்பம், ஹத்ரா, நினிவே ஆளுநனரகம், ஈராக்
அதிபதிவிதி, இறப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நேரத்தின் தெய்வம்
இடம்அல்-மூசாலால்
துணைஹுபல்
சகோதரன்/சகோதரிஅல்-லாத், அல்-உஸ்ஸா
சமயம்அரேபியத் தீபகற்பம்

மெக்காவின் மூன்று பெண் சகோதரி தெய்வங்களில் மனாத் தெய்வம் தலைமையானர் ஆவார். மற்ற இரண்டு பெண் தெய்வங்கள் அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா ஆவார். [2][3]

மனாத் பெண் தெய்வம் விதி, இறப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நேரத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். [3][4]

மனாத் பெண் தெய்வம், அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா ஆகிய பெண் தெய்வங்களுக்கு மூத்தவராவர். [5]

கிபி ஏழாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் இசுலாம் வளர்ந்த பிறகு மெக்காவில் இருந்த மனாத் பெண் தெய்வத்தின் உருவச்சிலை அழிக்கப்பட்டு, மனாத் வழிபாடும் நின்று போனது.

வழிபாடு

தொகு

மனாத் தெய்வத்தின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலம், அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியில் அமைந்த மெக்காவிற்கும், மதீனாவிற்கும் இடையே, செங்கடலை ஒட்டி இருந்தது. [6] [7]

அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியின் பானு அவ்ஸ் மற்றும் பானு கஷ்ராஜ் பழங்குடி மக்கள் மனாத் தெய்வத்தை வழிபட்டனர்.[7] [2]}}இம்மக்கள் மனாத் தெய்வத்தின் மரசிற்பத்தை இரத்தத்தால் பூசித்து வழிபட்டனர்.[3]

இம்மக்கள், மனாத் தெய்வத்தின் கல் உருவச்சிலையை மூசால்லால் பகுதியில் எழுப்பி வழிபட்டனர்.[7] இசுலாம் தோன்றுவதற்கு முன்னர், புனித யாத்திரையாக, மூசல்லால் பகுதியில் உள்ள மனாத் தெய்வத்தை வழிபடச் செல்லும் அரேபியர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு, மனாத் தெய்வத்தின் உருவச் சிலை முன் நின்று வழிபட்டனர். [2] மனாத் தெய்வத்தின் சிலையை வழிபடாது, தங்களின் புனித யாத்திரை நிறைவடையாது என்று இம்மக்கள் கருதினர்.[2]

காபாவில் இருந்த 360 தெய்வ உருவச் சிலைகளில் மனாத் தெய்வத்தின் சிலையும் ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய வரலாற்று அறிஞரான (கிபி 737 - 819) இசம் - இபின் - கல்பி, [8], காபாவை சுற்றி வரும் வழிபாட்டாளர்கள், ஆசிர்வாதம் வேண்டி மனாத் தெய்வத்தின் பெயருடன் அவரது சகோதரிகளின் பெயர்களையும் உச்சரிப்பர் என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார். [9]

மனாத் கோயிலின் இடிப்பு

தொகு

முகமது நபியின் ஆனையின் படி, சாத் பி சையித் அல்-அஷ்ஹாலி என்பவரின் தலைமையில் 20 குதிரை வீரர்கள் அடங்கிய படைக்குழு, [10]முசால்லாலில் உள்ள, அரேபிய பழங்குடிகள் வழிபட்ட மனாத் தெய்வத்தின் கருங்கல்லிலால் ஆன உருளை வடிவச் சிற்பத்தையும், கோயிலையும் அழித்தனர்.[11][12][13][14]

சோமநாதர் கோயில்

தொகு

மனாத் தெய்வத்தின் கல் சிற்பத்தை, அன்றைய பழமைவாத அரேபியர்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்ப பகுதியின் சோமநாதபுரத்தில் வைத்து வழிப்பட்டிருக்கலாம் என்ற செய்தியால், கிபி 1024-இல் கஜினி முகமது, சோமநாதபுரக் கோயில் கருங்கல் உருளை வடிவ லிங்கத்தை உடைத்து, அதனை கசினி நகரத்தின் மசூதியின் படிக்கற்களாக அமைத்தார். [15]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Manāt, ARABIAN GODDESS
  2. 2.0 2.1 2.2 2.3 Al-Kalbi 2015, ப. 13.
  3. 3.0 3.1 3.2 Tate 2005, ப. 170.
  4. Andrae 2012, ப. 17.
  5. Al-Kalbi 2015, ப. 12.
  6. Jordan 2014, ப. 187.
  7. 7.0 7.1 7.2 Papaconstantinou 2016, ப. 253.
  8. <Hisham ibn al-Kalbi
  9. Al-Kalbi 2015, ப. 17.
  10. Abu Khalil, Shawqi (1 March 2004). Atlas of the Prophet's biography: places, nations, landmarks. Dar-us-Salam. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-897-71-4.
  11. "Obligation to destroy idols - islamqa.info". பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
  12. "List of Battles of Muhammad". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-10.
  13. "The Sealed Nectar". பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
  14. "Sa‘d bin Zaid Al-Ashhali was also sent", Witness-Pioneer.com பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
  15. Akbar, M. J. (2003-12-31). The Shade of Swords: Jihad and the Conflict between Islam and Christianity. Roli Books Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351940944.

ஆதார நூற்பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனாத்&oldid=3851121" இலிருந்து மீள்விக்கப்பட்டது