மனீஷ் பாண்டே
மனீஷ் கிருஷ்ணானந்த் பாண்டே (Manish Krishnanand Pandey, பிறப்பு: 10 செப்டம்பர் 1989) என்பவர் இந்தியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலது-கை நடுவரிசை மட்டையாளரான இவர் உள்ளூர்ப் போட்டிகளில் கர்நாடகத் துடுப்பாட்ட அணியிலும், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் விளையாடி வருகிறார்.[1] இவர் தனது முன்னாள் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க மட்டையாளராக 2009 இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய போது ஐபிஎல் வரலாற்றில் நூறு எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.[2].
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மனீஷ் கிருஷ்ணானந்த் பாண்டே | |||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 10 செப்டம்பர் 1989 நைனித்தால், உத்தரகாண்ட், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.73 m (5 அடி 8 அங்) | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | அஷ்ரிதா ஷெட்டி (மனைவி) (தி. 2019) | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 206) | 14 ஜூலை 2015 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 பிப்ரவரி 2020 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 21 | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 52) | 17 ஜூலை 2015 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 2 பிப்ரவரி 2020 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 21 | |||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
2006/07–தற்போது | கர்நாடகா | |||||||||||||||||||||||||||||||||||
2008 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
2009–2010 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | புனே வாரியர்ஸ் இந்தியா (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||
2014–2017 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 9 (முன்பு 1)) | |||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போது | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 10) | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 11 பிப்ரவரி 2019 |
தொடக்கக் காலம்
தொகுமனிஷ் பாண்டே மூன்றாம் வகுப்பு படித்தபோது துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். பெங்களூரில் உள்ள கேந்திரியா வித்யாலயா ஏஎஸ்சி மையத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கர்நாடக மாநில துடுப்பாட்ட மன்றத்தில் சேர்ந்தார்.[3] மலேசியாவில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஐபிஎல்
தொகுஇந்தியன் பிரீமியர் லீக்கின் 2008 பருவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடும்போது, ஐபிஎல்லில் நூறு எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் 2009-10 ஆம் ஆண்டில் அரையிறுதியில் சொந்த அரங்கில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர் 2014இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இறுதிப்போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக 94 ஓட்டங்கள் எடுத்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார், மேலும் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இவர் 2014 (16 போட்டிகளில் 401 ரன்கள்) மற்றும் 2017 (13 போட்டிகளில் 396 ரன்கள்) ஆகிய பருவங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் முதல் 10 பட்டியலில் இடம்பெற்றார். 2018ஆம் ஆண்டில், இவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ₹ 11 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
பன்னாட்டுப் போட்டிகள்
தொகுசிம்பாப்வேக்கு எதிராக 14 ஜூலை 2015 அன்று இந்தியாவுக்காக பாண்டே தனது ஒருநாள் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். கேதார் ஜாதவ் உடனான 144 ஓட்ட கூட்டணியை உள்ளடக்கிய ஒரு வெற்றிகரமான அறிமுகத்தை அவர் பெற்றார். 4 வீரர்கள் இழப்புக்கு இந்தியா 82 ரன்களில் சிரமப்பட்டபோது, பாண்டே ஜாதவுடன் இணைந்தார், தனது முதல் அரைநூறை எடுத்து 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதே சுற்றுப்பயணத்தில், ஜூலை 17, 2015 அன்று, இந்தியாவுக்காக இருபது-20 பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார். ஜனவரி 2016 இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில், ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியை மட்டும் இந்தியா வென்றது.
இந்தியாவுக்கான 2016 உலக இ20 போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக இவர் தேர்வு செய்யப்பட்டார். ஜூன் 2017 இல் சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட அணியில் இவர் இடம் பெற்றார். இருப்பினும், ஐபிஎல் போது அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார், இதனால் இந்தியாவுக்கான ஐசிசி போட்டி வாய்ப்பைத் தவறவிட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபாண்டே, நடிகை அஷ்ரிதா ஷெட்டியை 2 டிசம்பர் 2019 அன்று மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.[4][5]
பன்னாட்டு நூறுகள்
தொகுஒருநாள் நூறு
தொகுமனீஷ் பாண்டேயின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நகரம் | அரங்கு | ஆண்டு | முடிவு |
1 | 104* | 4 | ஆத்திரேலியா | சிட்னி, ஆத்திரேலியா | சிட்னி கிரிக்கெட் மைதானம் | 2016 | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manish Pandey Profile". iplt20.com. Archived from the original on 9 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "IPL 2009: Manish Pandey becomes first Indian centurion in the tournament". Cricketcountry. 24 August 2014. Archived from the original on 27 February 2018.
- ↑ "Manish Pandey". 99Uttatrakhand. Archived from the original on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Manish Pandey ties knot with Tamil actress Ashrita Shetty hours after winning Syed Mushtaq Ali Trophy" (in en). Hindustan Times. 2 December 2019. https://www.hindustantimes.com/cricket/manish-pandey-gets-married-to-tamil-actress-ashrita-shetty/story-8IUgc106BJ34Lvc9tSJYIK.html. பார்த்த நாள்: 2 December 2019.
- ↑ "Manish Pandey Marries Actress Ashrita Shetty In Mumbai | Cricket News" (in en). NDTVSports.com. 2 December 2019. https://sports.ndtv.com/cricket/manish-pandey-marries-actress-ashrita-shetty-in-mumbai-2142090. பார்த்த நாள்: 2 December 2019.
வெளி இணைப்புகள்
தொகு- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: மனீஷ் பாண்டே
- Player Profile: மனீஷ் பாண்டே கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- Manish Pandey பரணிடப்பட்டது 2015-04-18 at the வந்தவழி இயந்திரம்'s profile page on Wisden