மனுவேல் ஞான முத்து

தமிழகத் தொழிலதிபர்களில் ஒருவர்

மனுவேல் ஞான முத்து (Manuel Gnana Muthu)(1935 – 23 மே 2018)[2] என்பவர் எம். ஜி. முத்து என சுருக்கமாக அறியப்படும் இவர் எம். ஜி. எம் குழும நிறுவனங்களின் நிறுவனரும் மற்றும் முதன்மைத் தலைவருமாவார்.[3]

ம. ஞா. முத்து
MG Muthu
தமிழ்மனுவேல் ஞான முத்து
ஆங்கில மொழிManuel Gnana Muthu
பிறப்புமனுவேல் ஞான முத்து
(1935-04-02)2 ஏப்ரல் 1935 [1]
திசையன்விளை
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ் நாடு
இறப்பு23 மே 2018(2018-05-23) (அகவை 83) [1]
சென்னை
தமிழ்நாடு
இந்தியா
இருப்பிடம்சென்னை தமிழ்நாடு
தேசியம் இந்தியா
இனம்தமிழர்
பணிதொழிலதிபர்
அறியப்படுவதுஎம்.ஜி.எம் குழும நிறுவனர்
சொத்து மதிப்பு2,500 கோடி (US$310 மில்லியன்)
சமயம்கிருத்துவர்
வாழ்க்கைத்
துணை
மேரி முத்து
பிள்ளைகள்எம். ஜி. எம். தமிழ் செல்வி
எம். ஜி. எம். ஆனந்த்
எம். ஜி. எம். நேசமணிமாறன்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்னும் சிற்றூரில் 1935ஆம் ஆண்டு கிருத்துவ நாடார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[4] பின்னர் குடும்ப ஏழ்மையின் காரணமாக 1952ஆம் ஆண்டு தனது சிற்றூரான திசையன்விளையிலிருந்து சென்னைக்கு வந்தார். மேலும் சென்னை துறைமுகத்தில் கூலியாகப் பணிபுரிந்த இவர், ஓரிடத்திலிருந்து சரக்குகளைப் பாதுகாத்து, சேமித்து அவற்றைச் சேரவேண்டிய இடத்தில் பத்திரமாகச் சேர்க்கும் தொழிலான இடப்பெயர்வு (Logistics) என்னும் தொழிலைச் செய்து வந்தார். பின்னர் எம். ஜி. எம். தங்கும் விடுதி, உணவகங்கள், சென்னையில் மிகவும் பிரபலமாக அறியப்படும் எம்.ஜி.எம். டிஸ்னி வேல்ட், கேளிக்கைப் பூங்கா ஆகிய பொழுதுபோக்கு பூங்காக்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கிய மனுவேல் ஞான முத்து எம். ஜி. எம். குழும நிறுவனத்தை நிறுவினார்.[5] மேலும் இவரது வாழ்க்கை வரலாற்றை கந்தலில் இருந்து செல்வங்கள் வரை (Rags To Riches) என்கின்ற தன் சுயசரிதையில் என்னென்ன சிக்கல்களை, இன்னல்களையெல்லாம் எதிர் கொண்டார், எப்படி எம்ஜிஎம் என்கின்ற எம்ஜிஎம் குழும நிறுவனத்தை உருவாக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Prasanna, VK (24 May 2018). "MGM Group founder MG Muthu passed away". Good Returns (in தமிழ் மொழி). பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Prasanna, VK (24 May 2018). "MGM Group founder MG Muthu passed away". Good Returns (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "MGM theme park inaugurated". The Hindu. 17 May 2003 இம் மூலத்தில் இருந்து 6 November 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031106214034/http://www.hindu.com/thehindu/2003/05/17/stories/2003051706020300.htm. 
  4. "MGM Dizzee World website". Archived from the original on 2007-01-11.
  5. "MGM Group to acquire Aruna Hotel". The Hindu Business Line. 16 November 2005 இம் மூலத்தில் இருந்து 27 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090427040924/http://www.thehindubusinessline.com/2005/11/16/stories/2005111602601300.htm. 
  6. Muthu, M. G. (1999). Rags to Riches (in ஆங்கிலம்). Variant Communications.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுவேல்_ஞான_முத்து&oldid=4176101" இலிருந்து மீள்விக்கப்பட்டது