ம. ஞா. மு. குழும நிறுவனங்கள்
ம. ஞா. மு குழும நிறுவனங்கள் (MGM Group of Companies) என்பது தமிழ் நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பல வகைப்பட்டக் கூட்டு நிறுவனங்களின் குழுவாகும். இக்குழும நிறுவனத்தை 1963 ஆம் ஆண்டு மனுவேல் ஞான முத்து என்பவரால் தொடங்கப்பட்டது.[1]
வகை | தனியார் |
---|---|
தமிழ் | ம. ஞா. மு. குழும நிறுவனங்கள் |
ஆங்கில மொழி | MGM Group of Companies |
நிறுவனர்(கள்) | மனுவேல் ஞான முத்து |
தலைமையகம் | சென்னை தமிழ் நாடு இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா சிங்கப்பூர் மலேசியா |
முதன்மை நபர்கள் | ம. ஞா. மு. ஆனந்த் ம. ஞா. மு. நேசமணிமாரன் |
தொழில்துறை | குழுமம் |
உற்பத்திகள் | மதுபானம் துறைமுகம் பெயர்ச்சியியல்கள் கேளிக்கைப் பூங்காக்கள் நுகர்வோர் உற்பத்திப் பொருட்கள் இன்னும் பல. |
வருமானம் | ₹2,500 கோடி (US$310 மில்லியன்) |
பணியாளர் | 1000+ |
இணையத்தளம் | ம. ஞா. மு. குழும நிறுவனங்கள் |
வரலாற்றுச் சுருக்கம்
தொகுஇந்நிறுவனத்தின் நிறுவனர் மனுவேல் ஞான முத்து, நாடார் இனத்தில் கிறிசுதவக் குடும்பத்தில் பிறந்த, இவர் அதிக கல்வியறிவு இல்லாமல், மனுவேல் ஞான முத்து அவர்கள் சென்னை துறைமுகத்தில் கூலிப்பணி செய்யத் தொடங்கினார். இவரின் கடின உழைப்புக்குப் பின் பொருள் இடப்பெயர்வு, மதுபான தொழிற்சாலைகள், விருந்தோம்பல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தொழில் வணிகங்கள் ஆகிய நிறுவனங்களின் மிகப்பெரும் குழுமத்தைக் கட்டியெழுப்பினார்.[2] மேலும் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான எம்.ஜி.எம். டிஸ்னி வேல்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.ஜி.எம் செல்வீ வேல்ட் என்னும் பொழுதுபோக்கு பூங்காக்கள் இக்குழுமத்தால் நிர்வாகிக்கப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "MGM theme park inaugurated". தி இந்து. 17 May 2003 இம் மூலத்தில் இருந்து 6 November 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031106214034/http://www.hindu.com/thehindu/2003/05/17/stories/2003051706020300.htm.
- ↑ "MGM Group to acquire Aruna Hotel". The Hindu Business Line. 16 November 2005. http://www.thehindubusinessline.com/2005/11/16/stories/2005111602601300.htm.
- ↑ MUTTUKADU: Snow in summer