மன்னங்காடு
மன்னங்காடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[4][5].
மன்னங்காடு | |
— சிற்றூர் — | |
ஆள்கூறு | 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] |
ஊராட்சி மன்ற தலைவர் | நா.வைத்திலிங்கம் |
மக்கள் தொகை | 2,619 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.mannankadu.org |
அமைவிடம்
தொகுமன்னங்காடு[5] அமைந்துள்ள பட்டுக்கோட்டை வட்டத்தின் தலைநகரான பட்டுக்கோட்டை நகரம் இவ்வூருக்கு மிக அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாகும். தஞ்சாவூர் மாவட்டம் உள்ளடக்கிய எட்டு வருவாய்க் கோட்டங்களில் பட்டுக்கோட்டை வட்டம் ஒன்றாகும். மன்னங்காடு பட்டுக்கோட்டை நகரில் இருந்து நேராக கிழக்குத் திசையில் சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பல்வேறு தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து வாழும் இவ்வூரில் பள்ளி, தபால், சாலை, குடிநீர், தகவல் தொடர்பு மற்றும் அனைத்து வசதிகளையும் பெற்றிருக்கிறது. மாநில நெடுஞ்சாலை இல. 66 இக்கிராமத்தின் நடுவில் வடக்கு தெற்கில் செல்கிறது.
அயல் கிராமங்கள்
தொகுகடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 25 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மன்னங்காடு கிராமம் தஞ்சை மாவட்டத்தின் தென் கோடியில் புவி வரைபடத்தில் 10º25’ வடக்கு & 79º23’ கிழக்கு எனும் அட்ச, தீர்க்கக் கோடுகள் இணையுமிடத்தில் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி பல வளமான கிராமங்கள் அமைந்துள்ளன. அவை, வடக்கிலிருந்து வலப்புற வரிசையில், காசாங்காடு, தெற்கு வாட்டாகுடி, அத்திவெட்டி, பிச்சினிக்காடு, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, கள்ளிக்காடு ஆகும். காட்டாறும் மற்றும் நீர்நிலைகளும் மன்னங்காடு கிராமத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளதால் அப்பக்கங்களில் உள்ள கிராமங்களுக்கு நேரடி சாலை வழிகள் இல்லை. ஆயினும், வடக்கில் காசாங்காடு, தெற்கில் துவரங்குறிச்சி ஆகியவற்றுடன் சாலைத் தொடர்புகள் உள்ளன.
பரப்பளவு
தொகுமன்னங்காடு கிராமத்தின் மொத்தப் பரப்பளவு, அரசு மதிப்பீட்டின்படி 620.4 எக்டேர் (1533 ஏக்கர், அல்லது உள்ளூர் வழக்கப்படி, 227.5 வேலி பரப்பளவு) ஆகும்.
மக்கள்தொகை
தொகு2001 அரசு கணக்கெடுப்பின்படி மன்னங்காடு 2619 மக்களைக் கொண்டிருந்தது.
தொழில்
தொகுவேளாண்மையை முதன்மையாகக் கொண்ட இக்கிராமம் வளமான வண்டலும், நிலத்தடி நீரும், இயற்கை வடிகாலும் அமையப் பெற்றது. கிணறு, நீர்நிலைகளுடன் இணைந்து செயற்கையாக அமைக்கப்பட்ட வாய்க்கால் வழிகளும் பாசனம் மற்றும் உயிரினங்களுக்குத் தேவையான நீரையும் வழங்குகின்றன. இக்கிராமத்தின் மேட்டுப்பகுதிகளில் மக்கள் குடியிருப்பும், தாழ்வுப் பகுதிகளில் நீர்நிலைகளும், விளைநிலங்களும் உள்ளன. மக்கள் வசிக்கும் மேட்டுப்பகுதிகளில் தென்னை, மா, பலா, புளி, வாழை, எலுமிச்சை போன்ற புஞ்சை பயிர்களும், சுற்றியுள்ள நிலங்களில் நெல், வேர்க்கடலை, உளுந்து, சோளம் போன்ற நஞ்சை பயிர்களும் பருவதிர்க் கேற்றாற்போல் விளைவிக்கப்படுகின்றன.
மேற்கோள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Official TN Government Map of Pattukottai Taluk". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
- ↑ 5.0 5.1 http://www.mannankadu.org/home
வெளி இணையதளம்
தொகுஇச்சிற்றூரைப் பற்றிய மேல்விவரங்களுக்கு அனுகவும் www.mannankadu.org