மயிம் பியாலிக்

அமெரிக்க நடிகை, எழுத்தாளர் மற்றும் நரம்பியல் அறிவியலாளர்

மயிம் சாயா பியாலிக் ( Mayim Bialik, டிசம்பர் 12, 1975 ) ஓர் அமெரிக்க நடிகையும், எழுத்தாளரும், நரம்பியல் அறிவியலாளரும் ஆவார். 1991 முதல் 1995 வரை இவர் என்.பி.சி சிட்காமின் பிளாசம் தொலைக்காட்சித் தொடரில் முதன்மைக் கதைமாந்தராக நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சி.பி. எஸ் சிட்காமின் தி பிக் பேங் தியரி தொடரில் ஆமி பாராஹ் ஃபோவ்லர் என்ற பெயரில் ஒரு நரம்பியல் விஞ்ஞானியாக நடித்தார். இதற்காக நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகைக்கான பிரைம்டைம் எம்மி விருதுக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார் [1] 2015 மற்றும் 2016 இல் ஒரு நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகைக்கான விமர்சகர் விருது பெற்றார்.

மயிம் பியாலிக்
2013- இல் மயிம் பியாலிக்
பிறப்புமயிம் சாயா பியாலிக்
திசம்பர் 12, 1975 (1975-12-12) (அகவை 48)
சான் டியேகோ, கலிபோர்னியா, U.S.
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) (BS, PhD)
பணிநடிகை, நரம்பியலாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்பொழுதுவரை
தொலைக்காட்சிபிளாசம் தொலைக்காட்சித் தொடர்
தி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)
வாழ்க்கைத்
துணை
மைக்கேல் ஸ்டோன்
(தி. 2003; மணவிலக்க் 2012)
பிள்ளைகள்2
அறிவியல் பணி
துறைநரம்பணுவியல்
ஆய்வேடுHypothalamic regulation in relation to maladaptive, obsessive-compulsive, affiliative, and satiety behaviors in Prader-Willi syndrome (2007)
ஆய்வு நெறியாளர்James T. McCracken
வலைத்தளம்
mayimbialik.net
groknation.com

மயிம் பியாலிக் [2] சான் டியாகோ, கலிஃபோர்னியாவில்[3][4] 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை பேரி, தாயார் பிவெர்லி பியாலிக் ஆவார்.[5][6][7] இவரது குடும்பத்தினர் தி நியூயார்க் நகரத்தில் பிரான்க்சு எனுமிடத்தில் வசித்து வந்த யூதக் குடியேறிகள் ஆவர்.[8] மயிம் பியாலிக்கின் நான்கு தாத்தா பாட்டிகளில் மூவர் போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்த யூத குடியேறியாவார்கள்.[9][10][11][12] பியாலிக் ஒரு சீர்திருத்த யூதராக வளர்க்கப்பட்டார்,[9][13] ஆனால் இப்போது தன்னை நவீன தற்கால மரபுவழி யூதராகக் கருதுகிறார்.[14][15][16] தன்னை அவர் ஒரு "உறுதியான சியோனிஸ்ட் " என்று விவரிக்கிறார்.[9] அவரது பெயரான மயிம் என்பதற்கு எபிரேய மொழியில் நீர் என்பது பொருளாகும். இது அவருடடைய கொள்ளுப்பாட்டியின் பெயரான மிரியம் எனத் தவறாக உச்சரிக்கப்படுகிறது.[17][18] புகழ்பெற்ற எபிரேயக் கவிஞரான ஹயிம் நஹ்மான் பியாலிக் இவரது பாட்டன்மார் வழி உறவினர் ஆவார்.[19]

பியாலிக் வால்டர் ரீட் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் (தற்போது வால்டர் ரீட் நடுநிலைப்பள்ளி ) படித்தார். 1993 ஆம் ஆண்டில் வட ஹாலிவுட் , கலிஃபோர்னியாவின் வடக்கு ஹாலிவுட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[20] இவருக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) கலந்து கொள்வதற்காக நடிப்பு ஒத்திவைக்கப்பட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. பியாலிக் எப்பொழுதும் பெற்றோருடன் நெருக்கமாக இருக்க விரும்பியதாகவும் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைக்குச் செல்ல விரும்பவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

பியாலிக், நரம்பியல் விஞ்ஞானத்தில் இளங்கலை அறிவியல் பட்டமும் , எபிரேய மற்றும் யூத ஆய்வுகளிலும் பட்டம் பெற்றார்.[21][22] நரம்பியல் விஞ்ஞானத்தில் முனைவர் கல்வி பயிலச் சென்றார். ஆனால் 2005 ஆம் ஆண்டில் நடிப்புக்குத் திரும்பியதால், இவரது கல்வி தடைபட்டது.[23] பின்னர் மீண்டும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) இல் சேர்ந்து நரம்பியல் விஞ்ஞானத்தில் தனது முனைவர் பட்டத்தை 2007 ஆம் ஆண்டு பெற்றார்.[24] இவரது ஆய்வுத்தலைப்பு பிராடர் – வில்லி கூட்டறிகுறி உள்ள நோயாளிகளுக்கு ஐப்போதாலமசு செயற்பாடு பற்றியதாகும்."[2][25][26]

மேற்கோள்கள் தொகு

  1. Russo, G. (2012). "Turning point: Mayim Bialik. Actress makes the shift from television to neuroscience and then back again". Nature 485 (7400): 669–669. doi:10.1038/nj7400-669a. 
  2. 2.0 2.1 பைலிக், மாயிம் சயா. "பிராடெர்-வில்லி நோய்க்குறித் தீங்கு விளைவிக்கும், துன்புறுத்தல்-நிர்பந்தமான, உறவினர், சத்தத்து நடத்தை தொடர்பான ஹைப்போதாலமிக் கட்டுப்பாடு" (PhD Diss., UCLA, 2007).
  3. Davis, Nicola (September 11, 2015). "Mayim Bialik: Big Bang Theory is changing the way people think of nerds and geeks". The Guardian. பார்க்கப்பட்ட நாள் May 23, 2018. Born in San Diego, California to first-generation Jewish-American parents.
  4. "Mayim Bialik". பார்க்கப்பட்ட நாள் January 9, 2017.
  5. "Mayim Bialik: Mourning My Father's Death". Kveller. பார்க்கப்பட்ட நாள் March 24, 2016.
  6. "Obituaries - Obituaries". Jewish Journal. பார்க்கப்பட்ட நாள் March 24, 2016.
  7. Berkman, Meredith (March 8, 1991). "Mayim Bialik: the young feminist". Entertainment Weekly. http://www.ew.com/article/1991/03/08/mayim-bialik-young-feminist. பார்த்த நாள்: 11 February 2015. 
  8. Bialik, Mayim. Interview with Anna Faris. Episode 128: Mayim Bialik. June 26, 2018. Archived from the original on நவம்பர் 12, 2018. Retrieved on மார்ச் 2, 2019.
  9. 9.0 9.1 9.2 Stein, Jason. "Big Bang Theory star thought she was auditioning for a game show". Jewish Telegraph. http://www.jewishtelegraph.com/prof_222.html. பார்த்த நாள்: April 7, 2014. 
  10. Valys, Phillip (May 12, 2015). "'Big Bang Theory' star Mayim Bialik giving talk in Davie". southflorida.com இம் மூலத்தில் இருந்து மே 23, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180523173233/http://www.southflorida.com/events/sf-mayim-bialik-blossom-davie-jcc-20150512-story.html. பார்த்த நாள்: May 23, 2018. "Mayim Bialik: "I grew up in a traditional Jewish home. My grandparents are immigrants"" 
  11. Goldman, Michele (October 10, 2002). "Religion Blossoms for Bialik". Jewish Journal. http://jewishjournal.com/news/los_angeles/la_woman/6806/. பார்த்த நாள்: May 23, 2018. 
  12. "Mayim Bialik: How the Big Bang Theory transformed her slow-burning career". Stuff.co.nz. August 6, 2017. பார்க்கப்பட்ட நாள் May 23, 2018. a very traditional immigrant Jewish family where roles for boys and girls were very different. {{cite web}}: |first= missing |last= (help)
  13. Pfefferman, Naomi (September 19, 2011). "‘Big Bang Theory’ Actress Lives at Intersection of Science, Religion [UPDATE"]. Jewish Journal. http://jewishjournal.com/newspulse/96188/. பார்த்த நாள்: May 23, 2018. 
  14. "Mayim Bialik Discusses Being Orthodox in Hollywood | Religious and Reform". The Jewish Journal. March 20, 2013. http://www.jewishjournal.com/religiousandreform/item/mayim_bialik_discusses_being_orthodox_in_hollywood. பார்த்த நாள்: November 29, 2016. 
  15. Glassman, Marvin (May 11, 2015). "Jewish actress Mayim Bialik to speak". Sun-Sentinel. http://www.sun-sentinel.com/florida-jewish-journal/news/broward/fl-jjbs-mayim-0513-20150511-story.html. பார்த்த நாள்: May 23, 2018. 
  16. Cohen, Marla (May 2012). "Geek Love, Parenting, and Judaism". Jewish Federation of Rockland County. Archived from the original on 2012-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  17. "Mayim Bialik's Big Bang". Haaretz. பார்க்கப்பட்ட நாள் May 27, 2017.
  18. King, Larry (6 May 2014). "Mayim Bialik & Melissa Rauch". Larry King Now. http://www.ora.tv/larrykingnow/mayim-bialik--melissa-rauch-0_5a0iuww97d55. பார்த்த நாள்: 18 October 2014. 
  19. "Mayim Bialik: From 'Blossom' to Brachot - Jewcy". Jewcy. 2009-05-06 இம் மூலத்தில் இருந்து 2018-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181211133240/http://jewcy.com/jewish-arts-and-culture/mayim_bialik_blossom_brachot. பார்த்த நாள்: 2018-04-23. 
  20. . 
  21. Biography பரணிடப்பட்டது சூன் 27, 2012 at the வந்தவழி இயந்திரம் - official website of Mayim Bialik
  22. Jacobson, Judie. "Q&A with Mayim Bialik". Jerusalem Post. Retrieved on 15 March 2016.
  23. "Alumni Stories – Notable Alumni". Uclalumni.net.
  24. "Biography". Mayim Bialik. Archived from the original on 2019-03-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  25. "Hypothalamic regulation in relation to maladaptive, obsessive-compulsive, affiliative, and satiety behaviors in Prader–Willi syndrome (Book, 2007)". [WorldCat.org]. 1999-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.
  26. "Life After Child Stardom – Not by the Numbers". Abcnews.go.com. 2006-11-24. பார்க்கப்பட்ட நாள் March 12, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிம்_பியாலிக்&oldid=3931427" இலிருந்து மீள்விக்கப்பட்டது