மரியம் சகாரியா

மரியம் சகாரியா (Maryam Zakaria) சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுவீடிஷ் - ஈரானிய நடிகை. தற்பொழுது பாலிவுட் மற்றும் அவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1][2] இவர் பாலிவுட் படங்களான "ஏஜெண்ட் வினோத்" (2012), மற்றும் "கிராண்ட் மஸ்தி"யில் நடித்ததின் மூலம் அறியப்படுகிறார்.

மரியம் சகாரியா
பிறப்புமரியம் சகாரியா
தெகுரான், ஈரான்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009 முதல்

தொழில் வாழ்க்கை தொகு

சகாரியா, சுவீடனில் விளம்பர நடிகை, நடன ஆசிரியர் மற்றும் நடன இயக்குநராக பணிபுரிந்தார். பிறகு "இன்டிஸ்க் டான்ஸ் ஸ்டூடியோ" என்கிற பாலிவுட் நடனப் பள்ளியை நிறுவினார். இதில் பாலிவுட் படங்களுக்கான அனைத்து விதமான நடனங்களும் கற்பிக்கப்பட்டன..[3] 2009இல் மும்பை வந்து பாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.[3][4] இவர் இம்ரான் கானுடன் 'கொக்க-கோலா' விளம்பரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் பட இயக்குநர் சுந்தர் சி., இவரது நடன காணொளியை யூடியூப்பில் பார்த்து "நகரம்" (2010) திரைப்படத்துக்கான குத்தாட்டப் பாடல் காட்சிகளுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.[5][6] இவர் பங்குபெற்று, 2011இல் வெளிவந்த "100%லவ்" என்கிற படத்தில் "டியாலோ டியாலா" பாடல் காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.[7] அதைத் தொடர்ந்து அல்லரி நரேஷ்[3] உடன் இணைந்து நடித்த "மததா கஜா" மற்றும் "அர்ஜுனா" படத்திலும் நடித்துள்ளார். பின்னர் "டில்லி கி பில்லி" மற்றும் "சடா அடா" போன்ற படங்களில் நடித்துள்ளார்.[8]

சாயிப் அலி கானின் "ஏஜெண்ட் வினோத்" படத்தில் கரீனா கபூர் உடன் இவர் நடித்த "தில் மேரா" எனத் தொடங்கும் பாடல் இவருக்கு பாலிவுட்டில் புகழைத் தந்தது. 2013இல் வெளிவந்த இந்திரகுமாரின் படமான "கிராண்ட் மஸ்தி"யில் இவர் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இந்தியாவில் அதிக வருவாயை பெற்றுத் தந்த படமாகும் ,

திரைப்படங்கள் தொகு

Films
வருடம் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2009 பேயிங் கெஸ்ட்ஸ் இந்தி சிறப்பு தோற்றம்
2010 நகரம் தமிழ் சிறப்பு தோற்றம்
2011 100% லவ் தெலுங்கு சிறப்பு தோற்றம்
பிராமிகடி கதா தெலுங்கு சிறப்பு தோற்றம்
மததா கஜா பிரியா தெலுங்கு
2012 சடா அடா இந்தி சிறப்பு தோற்றம்
ஏஜெண்ட் வினோத் ஃபரா ஃபாகேஷ் இந்தி
நா இஷ்டம் தெலுங்கு சிறப்பு தோற்றம்
தம்மு தெலுங்கு சிறப்பு தோற்றம்
சக்ரதார் இந்தி சிறப்பு தோற்றம்
ரௌடி ராத்தோர் இந்தி சிறப்பு தோற்றம்
2013 டி - டே இந்தி சிறப்பு தோற்றம்
பஜதே ரஹோ இந்தி "நாகின் நடனம்"
கிராண்ட் மஸ்தி ரோஸ் இந்தி
அர்ஜுனா சுருதி தெலுங்கு தயாரிப்பிற்குப் பின்; தாமதமாக
2014 அஞ்சான் (2014 படம்) தமிழ் சிறப்பு தோற்றம்
2017 ஃபிராங்கி இந்தி பாடல் காட்சியில் சிறப்பு தோற்றம்
இசை காணொளிகள்
வருடம் பெயர் பாடியவர் குறிப்புகள்
2007 "கோலி" சயீத் ஷேஸ்டேஹ்
2007 "மேன் சலெகரம்" சயீத் ஷேஸ்டேஹ்
2007 "அஹாரின் காசம்" சயீத் ஷேஸ்டேஹ்
2008 "குர்பானி" சயீத் ஷேஸ்டேஹ்
2009 "ஜட் டி ஜமீன்" ப்ரீத் ஹர்பல்
2009 "டொசட் டரம்" சயீத் ஷேஸ்டேஹ்
2009 "ஆக் லத்டே" ஜஸ்விந்தர் டஹிமா
2009 "மஸ்ட் மலங்க" சனோஜ் குமார்
2010 "கோஷ்கெலே" சயீத் ஷேஸ்டேஹ்
2010 "அழாரம் பெடி" சயீத் ஷேஸ்டேஹ்
2011 "ஜா ஜா வெ வெ" ரிஷி சிங் & ராஜ்வீர் தில்லான்

மேற்கோள்கள் தொகு

  1. "Swedish Sizzle". இந்தியா டுடே. 30 April 2011. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
  2. "Maryam Zakaria". பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
  3. 3.0 3.1 3.2 "Set Wet commercial girl Mushtaq Ahmed in Tollywood". தி டெக்கன் குரோனிக்கள். 29 September 2011. Archived from the original on 4 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
  4. Itsy bitsy – Balancing act பரணிடப்பட்டது 2012-07-19 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 11 February 2012
  5. Sizzling item number in Nagaram. Sify.com (2010-11-17). Retrieved on 2012-03-30.
  6. Where are all the item girls? – Times Of India பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம். Articles.timesofindia.indiatimes.com (2010-12-19). Retrieved on 2012-03-30.
  7. The girl who follows her dreams. Postnoon. Retrieved on 2012-03-30.
  8. "Swedish Model Dances To Dilli Ki Bill". என்டிடிவி Movies. 20 April 2011. Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_சகாரியா&oldid=3566589" இலிருந்து மீள்விக்கப்பட்டது