மரைக்காயர்பட்டினம்

மரைகாயர்பட்டினம் (ஆங்கிலம்:Maraikayarpattinam) இது இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்[4]. கிராமதின் தெற்கே இந்திய பெருங்கடலும் வடக்கே வங்கால விரிகுடாவும் சூழ அமைந்துள்ளது. 1950 வரை இவ்வூர்வாசிகள் கடல் வணிகம் செய்துவந்தனர். இலங்கையில் கொழும்பு,சிலாபம்,யாழ்ப்பாணம்,திரிகோணமலை,புத்தளம்,கல்முனை போன்ற துறைமுகங்கள் மற்றும் பர்மா-இன்றைய மியான்மரின் ரங்கூன்,வங்காளதேசதின் டாக்கா, போன்ற துறைமுகங்கள் இவர்களின் காலடிதடங்களையும் மரக்கலங்களையும் அதிகம் வரவேற்றவை. இதுபோக பாரசீகம் என அழைக்ககப்பட்ட ஈரான், அதையடுத்த ஈராக்,குவைத், மேலும் எத்தியோப்பியா,எகிப்து,நாடுகளின் துறைமுக நகரங்களையும் அவ்வப்போது அடைந்து வணிகத்தில் ஈடுபட்டனர்.ஆஸ்திரேலியா கண்டுபிடிக்கப்ப்டாத காலத்திலேயே அங்கு காலடி பதித்தவர்கள் என்பது சுவையான செய்தியாகும். நியூசிலாந்து கடலில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட "முகைதீன் வக்காஸ் கப்பல் மணி" என்ற பெயர் பொறிக்கப்பட்ட நங்கூர மணியே இதற்கு சான்றாகும். மரம்+கலம்+ராயர் - மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்) ன் உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது. மரக்காயார்கள் மட்டுமே உள்ள ஊர் என்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

மரைக்காயர்பட்டினம்
மரைக்காயர்பட்டினம்
இருப்பிடம்: மரைக்காயர்பட்டினம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°16′30″N 79°07′48″E / 9.275°N 79.130°E / 9.275; 79.130ஆள்கூறுகள்: 9°16′30″N 79°07′48″E / 9.275°N 79.130°E / 9.275; 79.130
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/district.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரைக்காயர்பட்டினம்&oldid=2193622" இருந்து மீள்விக்கப்பட்டது