மலாக்கா பிரித்தானிய முடியாட்சி

மலாக்கா பிரித்தானிய முடியாட்சி (ஆங்கிலம்: Crown Colony of Malacca; மலாய்: Jajahan Mahkota Melaka) என்பது 1946-ஆம் ஆண்டில் இருந்து 1957-ஆம் ஆண்டு வரையில் மலாக்கா மாநிலம், பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் இருந்ததைக் குறிப்பிடுவதாகும்.

மலாக்கா பிரித்தானிய முடியாட்சி
Crown Colony of Malacca
Jajahan Mahkota Melaka
1946–1957
கொடி of மலாக்கா
கொடி
நாட்டுப்பண்: பிரித்தானிய நாட்டுப்பண்
மலாக்காஅமைவிடம்
நிலைபிரித்தானிய முடியாட்சி
மலாயா கூட்டமைப்பு
தலைநகரம்மலாக்கா மாநகரம்
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ்
இதர மொழிகள்
அரசாங்கம்பிரித்தானிய முடியாட்சி
(British Crown colony)
பிரித்தானிய அரசர்கள் 
• 1946–1952
ஆறாம் ஜோர்ஜ்
• 1952–1957
இரண்டாம் எலிசபெத்
மலாக்கா பிரித்தானிய ஆளுநர் 
• 1956–1957
மாரிஸ் ஜான் ஏவர்ட்
வரலாறு 
• நீரிணை குடியேற்றங்களின் கலைப்பு
1 ஏப்ரல் 1946
• மலாயா கூட்டரசின் ஒரு பகுதியாக விடுதலை
31 ஆகஸ்டு 1957
நாணயம்மலாயா டாலர்
முந்தையது
பின்னையது
நீரிணை குடியேற்றங்கள்
மலாயா கூட்டமைப்பு
தற்போதைய பகுதிகள்மலேசியா

ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கை, 1824-இன் கீழ் மலாக்கா மாநிலம், பிரித்தானிய இறையாண்மையின் கீழ் வந்தது; 1946-ஆம் ஆண்டு வரை நீரிணை குடியேற்றங்களின் ஒரு பகுதியாகவும் இருந்தது.[1]

பொது

தொகு

இரண்டாம் உலகப் போரின் போது, 1942 முதல் 1945 வரை மலாக்கா பிரித்தானிய முடியாட்சி, ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நீரிணை குடியேற்ற மாநிலங்கள் கலைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பினாங்கு, மலாக்கா முடியாட்சி காலனிகளாக உருவெடுத்தன.

மலாயா கூட்டமைப்புக்குள் இருந்த வெளியேறிய சிங்கப்பூர் மட்டும், மலாயா கூட்டமைப்பு அமைப்பில் இருந்து மாறுபட்ட தனியொரு முடியாட்சி காலனியாக மாறியது.[2]

துங்கு அப்துல் ரகுமான்

தொகு

1955-ஆம் ஆண்டில், மலாக்காவில் பிரித்தானியர்களின் ஆட்சியின் முடிவு குறித்து விவாதிக்க மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் இலண்டனில் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். பிரித்தானிய முடியாட்சி மலாக்காவை மலாயா ஒன்றியத்துடன் இணைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பின்னர் மலாயா ஒன்றியம் கலைக்கப்பட்டு மலாயா கூட்டமைப்பு) என அழைக்கப்பட்டது. 31 ஆகஸ்டு 1957-இல், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து மலாயா சுதந்திரம் பெற்றது. பின்னர் மலாயா கூட்டமைப்பிற்குள் ஒரு பகுதியாக மலாக்கா இணைக்கப்பட்டது. அத்துடன் மலாக்காவின் பிரித்தானிய முடியாட்சித் தகுதியும் ஒரு முடிவிற்கு வந்தது. பின்னர் மலேசியா கூட்டமைப்பு உருவானதும் பிரித்தானிய போர்னியோ பிரதேசங்களுடன் மலேசியக் கூட்டமைப்பில் மலாக்கா சேர்க்கப்பட்டது.

பிரித்தானிய முடியாட்சி ஆளுநர்கள்

தொகு
  • செப்டம்பர் 1945 - 31 மார்ச் 1946; ஜேம்சு கால்டர்
  • 1946 - நவம்பர் 1947; எட்வர்ட் விக்டர் கிரேசு டே
  • 24 நவம்பர் 1947 - 7 மார்ச் 1949; ஜோன் பால்கனர்
  • 1949; வில்லியம் செசில் டெய்லர்
  • 25 அக்டோபர் 1949 - 1954; ஜோர்ஜ் எவன்சு கேமரூன்
  • 20 டிசம்பர் 1950 - 6 சனவரி 1952; ஜோனாதன் எட்கர் மெரிடித்
  • 18 ஏப்ரல் 1952 - 31 ஆகஸ்ட் 1957; அரோல்ட் ஜோர்ஜ் ஆமெட்
  • 28 ஆகஸ்டு 1954 - 15 செப்டம்பர் 1954; புல்வார் ரூபர்ட் கேவன் பவுல்
  • 25 செப்டம்பர் 1956 - பிப்ரவரி 1957; மாரிஸ் ஜோன் ஏவர்ட்
  • 1957; ஆல்பர்ட் வில்லியம் நிக்கல்சன்

மேற்கோள்கள்

தொகு
  1. A. GUTHRIE (of the Straits Settlements, and OTHERS.) (1861). The British Possessions in the Straits of Malacca. [An Address to the Secretary of State for the Colonies, Signed by A. Guthrie and Others, and Dated April 20th, 1861, in Reference to the Transfer of the Administration of the British Possessions in the Straits of Malacca to the Colonial Office.]. pp. 1–.
  2. "The Straits Settlements is Dissolved". National Library Board, Singapore. 1 April 1946. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.

வெளி இணைப்புகள்

தொகு