மலாக்கா மாநிலத்தின் சின்னம்
மலாக்கா மாநிலச் சின்னம் (ஆங்கிலம்: Coat of arms of Malacca) என்பது மலாக்கா மாநிலத்தின் அதிகாரப்பூர்வமான சின்னம் ஆகும். 1946-ஆம் ஆண்டு, பிரித்தானிய காலனித்துவ காலத்தில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் அமைப்புடன்; நீரிணை குடியேற்ற மாநிலமான மலாக்கா மாநிலம் இணைந்த போது இந்த மாநிலச் சின்னம் அறிமுகமானது. இந்தச் சின்னம் ஐரோப்பிய எரால்டிக் வடிவமைப்புகளை (Heraldic Designs) சார்ந்தது.
மலாக்கா மாநிலச் சின்னம் Coat of arms of Malacca | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | மலாக்கா |
உள்வாங்கப்பட்டது | 1963 - 1965 |
முடி | பிறை; தாரகை |
விருதுமுகம் | அர்கெண்ட், மலாக்கா மரம்; ஐந்து கிரிஸ் கத்திகள் |
ஆதரவு | இரு சருகு மான்கள் |
குறிக்கோளுரை | ஒன்றுபட்டு நிற்போம் (Bersatu Teguh) (United We Stand) (برساتو تڬوه) |
சின்னத்தில் உள்ள சிவப்பு, வெள்ளை, மஞ்சள், நீலம் ஆகிய நான்கு வண்ணங்கள்; மலாக்கா மலேசியாவின் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிக்கிறது. சிகரத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் பிறை, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மதமான இசுலாம் என்பதைக் குறிக்கிறது. ஐந்து கிரிஸ் கத்திகள் பண்டைய மலாக்கா சுல்தானகத்தில் புகழ்பெற்ற ஆங் துவா, ஆங் ஜெபாட், ஆங் கஸ்தூரி, ஆங் லெக்கிர், ஆங் லெக்கியூ எனும் ஐந்து போர்வீரர்களைக் குறிக்கின்றன.
பொது
தொகுமாநிலத்தின் முதல் ஆட்சியாளரான பரமேசுவரா, சிங்கப்பூர் இராச்சியத்தில் இருந்து தம்முடைய பரிவாரங்களுடன் மலாக்கா வந்த போது, தம்முடைய வேட்டை நாய் ஒரு சருகுமான் தாக்கி, அதை ஆறுக்குள் தள்ளியதை நினைவுபடுத்தும் வகையில் இரண்டு கஞ்சில் சருகுமான்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன.
அந்தச் சம்பவத்தை ஒரு நல்ல சகுனமாகக் கருதி, அதன் கீழ் ஓர் இராச்சியத்தை தோற்றுவிக்க பரமேசுவரா முடிவு செய்தார். அவர் அப்போது சாய்ந்த இருந்த மலாக்கா மரத்தின் பெயரையே அந்த இடத்திற்கு பெயரிட முடிவு செய்தார். எனவே அந்த மரம் மலாக்கா சின்னத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று அரசு சின்னங்கள்
தொகுசின்னம் | காலம் | அரசியல் அமைப்பு |
---|---|---|
1874–1942 1945–1946 |
நீரிணை குடியேற்றங்கள் | |
1951–1965 | மலாக்காவில் பிரித்தானிய முடியாட்சி (1951–1957) மலாக்கா மாநிலம் (1957–1965)[1][2] |
மலாக்கா மாநகரச் சின்னம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Commonwealth Relations Office List. London: Her Majesty's Stationery Office. 1960.
- ↑ "The Straits Settlements is Dissolved". National Library Board, Singapore. 1 April 1946. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.