கஞ்சில் சருகுமான்

ஒரு பாலூட்டி இனம்

Eugnathostomata

கஞ்சில் சருகுமான் ( lesser mouse-deer, lesser Malay chevrotain, or kanchil ) என்பது டிரகுலிடே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பியான சருகுமான் இனமாகும்.

கஞ்சில் சருகுமான்
Lesser mouse-deer
கஞ்சில் சருகுமான் ஒரு ஜெர்மனி விலங்கு காட்சியகத்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சருகுமான்
பேரினம்:
இனம்:
T. kanchil
இருசொற் பெயரீடு
Tragulus kanchil
இராஃபிள்சு, 1821

பரவல் தொகு

கஞ்சில் சருகுமான்கள் தென்கிழக்காசியாவில் பரவலாக இந்தோசீனா, மியான்மர் ( கிரா பூசந்தி ), புரூணை, கம்போடியா, சீனா (தெற்கு யுன்னான் ), இந்தோனேசியா ( கலிமந்தான், சுமாத்திரா மற்றும் பல சிறிய தீவுகள்), லாவோஸ், மலேசியா (தீபகற்ப மலேசியா, சரவாக் ), சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறன்றன.

விளக்கம் தொகு

இதுவரை அறியப்பட்ட குளம்புடைய பாலூட்டிகளில் இவை மிகச்சிறியவைகளில் ஒன்றாகும். இவற்றில் வளர்ந்தவை அளவு 45  செமீ (18 அங்குலம்) உள்ளன. இவற்றின் எடை 2 கிலோ (4.4 பவுண்டு) இருக்கும். இவை சிறிய சாவக சருகுமான்களுடன் தொடர்புடவை. இவை காட்டு நாய்களால் வேட்டையாடப்படுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

 
சிங்கப்பூரிலிருந்து வந்த சருகு மான் குட்டி

துவக்கத்தில் இவை இரவாடிகள் என்று நம்பப்பட்டன. ஆனால் இவற்றை மேலும் ஆராய்ந்ததில் இவை பகலில் செயல்படுவதாக கண்டுபிடறியப்பட்டுள்ளன. குசுதாவால் கண்டுபிடிக்கப்பட்டபடி, இவை பெரும்பாலும் மே, நவம்பர் அல்லது திசம்பர் மாதங்களில் குட்டிகளை ஈன்றாலும். பெண் சருகுமான்கள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியன என கண்டறியப்பட்டுள்ளது (குசுதா மற்றும் பலர்).

குறிப்புகள் தொகு

  1. Timmins, R.; Duckworth, J.W. (2015). "Tragulus kanchil". IUCN Red List of Threatened Species 2015: e.T136297A61978576. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T136297A61978576.en. https://www.iucnredlist.org/species/136297/61978576. பார்த்த நாள்: 19 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சில்_சருகுமான்&oldid=3928454" இலிருந்து மீள்விக்கப்பட்டது