மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம்
கூட்டரசு மலாயா சட்டமன்றம் (மலாய்: Majlis Perundangan Persekutuan Tanah Melayu; ஆங்கிலம்: Federal Legislative Council; சீனம்: 马来亚联合邦立法会); என்பது மலாயா கூட்டமைப்பு மற்றும் மலேசிய நாடாளுமன்றத்தின் முன்னோடியான சட்டமன்ற அமைப்பாகும்.
மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம் Legislative Council of Federation of Malaya Majlis Perundangan Persekutuan Tanah Melayu | |
---|---|
வகை | |
வகை | ஒற்றுமை அமைப்பு |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1948 |
செயலிழப்பு | 1959 |
பின்பு | மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் (1959-1963) மலேசிய நாடாளுமன்றம் (1963 - தற்போது வரையில்) |
தலைமை | |
சட்டமன்றத் தலைவர் | ராஜா துன் ஊடா ராஜா முகமது, கட்சி உறுப்பினர் இல்லை |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 98 |
அரசியல் குழுக்கள் | |
ஆட்சிக்காலம் | 1955-1959 |
தேர்தல்கள் | |
52 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 48 நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
அண்மைய தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1955 |
அடுத்த தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
கூடும் இடம் | |
மலாயா கூட்டமைப்பு, கோலாலம்பூர் |
1948-ஆம் ஆண்டில் மலாயா ஒன்றியம் அகற்றப்பட்டு, மலாயா கூட்டமைப்பு உருவானது. அதன் பிறகு கூட்டரசு மலாயா சட்டமன்றம் எனும் அமைப்பு புதிதாக உருவாக்கக்கப்பட்டது. மலாயா மக்களுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் வாக்குறுதியின் ஒரு பகுதியாக இந்த அமைப்பு உருவானது. முதல் சட்டமன்றக் கூட்டம் கோலாலம்பூரில் கூடியது.
பொது
தொகுதொடக்கக் காலத்தில் இந்தச் சட்டமன்றம் மலாய்க்காரர், சீனர் மற்றும் இந்தியர் சமூகங்களின் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. அனைத்துப் பிரதிநிதிகளும் மலாயாவுக்கான ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர்.
1955-இல் முதன்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. 52 இடங்கள் போட்டியிடப்பட்ட. பெரும்பான்மையைப் பெறும் கட்சி மேலும் ஏழு பேரை நியமிக்கும் உரிமையைப் பெற்றது.[1] 1955-ஆம் ஆண்டு முதல் தேர்தலில், மலேசிய கூட்டணி கட்சி அனைத்து 52 இடங்களிலும் போட்டியிட்டு 51 இடங்களைக் கைப்பற்றியது. மலேசிய இசுலாமிய கட்சி ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
மலேசிய அரசியலமைப்பு
தொகுதேர்தலைத் தொடர்ந்து, தற்போதைய மலேசிய மக்களவையின் [[மலேசிய மக்களவைத் தலைவர்மலேசிய மக்களவைத் தலைவரைப் போலவே ராஜா துன் ஊடா ராஜா முகமது என்பவர் கூட்டரசு மலாயா சட்டமன்றத்தின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957 ஆகஸ்டு 15-இல், கூட்டரசு மலாயா சட்டமன்றம், மலேசியாவின் முதல் அரசியலமைப்பை நிறைவேற்றியது. பின்னர், இந்த அரசியலமைப்பு மலேசிய அரசியலமைப்பு என மாற்றம் கண்டது. 1957 ஆகஸ்டு 31-இல், மலாயா விடுதலை பெற்றது. 1959-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தல் நடைபெற்று புதிய நாடாளுமன்ற மக்களவையினர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், கூட்டரசு மலாயா சட்டமன்றம் தொடர்ந்து செயல்பட்டது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ Tun Omar Yoke-Lin Ong - The Last Independence Fighter பரணிடப்பட்டது 2010-08-06 at the வந்தவழி இயந்திரம்
- Barbara Watson Andaya dan Leonard Y. Andaya. A History of Malaysia, The MacMlllan Press Ltd. (1982). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-27673-6.
- The World Book Encyclopedia, World Book International (1994). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7166-6694-4.