மலேசியப் பிரதமர் துறை அமைச்சர்
மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister in the Prime Minister's Department; மலாய்: Menteri di Jabatan Perdana Menteri Malaysia) என்பவர் மலேசியப் பிரதமர் துறையின் அமைச்சர் ஆகும். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக உள்ளார்; மற்றும் அவர் பிரதமர் துறையின் மூலமாக ஒரு துறையை நிர்வாகம் செய்கிறார்.
பிரதமர் துறை அமைச்சர் Minister in the Prime Minister's Department Menteri di Jabatan Perdana Menteri | |
---|---|
தற்போது அசுலினா ஒசுமான் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) முகமது நயிம் மொக்தார் (மத விவகாரங்கள்) சலேகா முசுதபா (கூட்டாட்சி பிரதேசம்) | |
மலேசியப் பிரதமர் துறை | |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | பெர்டானா புத்ரா, மத்திய அரசு நிர்வாக மையம், 62502 புத்ராஜாயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | சூலை1957 |
முதலாமவர் | அப்துல் ரகுமான் தாலிப் (துறை இல்லாத அமைச்சர்) |
துணை பிரதமர் துறை அமைச்சர் Minister in the Prime Minister's Department Menteri di Jabatan Perdana Menteri | டாக்டர் சுல்கிப்லி அசான் (மத விவகாரங்கள்) & எம். குலசேகரன் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) |
இணையதளம் | www |
அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் சேவைகளும்; கொள்கை, சட்டம், ஒழுங்குமுறைகள் மூலமாக முறையாகச் செயல்படுத்தப் படுவதைக் கண்காணிப்பது மலேசியப் பிரதமர் துறையின் நோக்கம் ஆகும்.
பொது
தொகுஇந்தத் துறைக்கு மலேசியப் பிரதமர் தலைமை தாங்குகிறார். அவருக்கு உதவியாகப் பிரதமர் துறை அமைச்சர்கள் உள்ளனர்.
மலேசியப் பிரதமர் துறையில்; மலேசியப் பிரதமர் அலுவலகம் (Prime Minister's Office), மலேசிய துணைப் பிரதமர் அலுவலகம் (Deputy Prime Minister's Office) மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிற அரசு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
மலேசியப் பிரதமர் துறை ஜூலை 1957-இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் பெர்டானா புத்ரா (Perdana Putra), புத்ராஜெயாவில் (Putrajaya) உள்ளது.[1]
கட்டமைப்பு
தொகுமலேசியப் பிரதமர் துறை, பிரதமர் துறையின் பொது நிர்வாகம் (General Administration) என முன்பு அழைக்கப்பட்டது.
- புத்தாக்கம் மற்றும் மனிதவள மேலாண்மைப் பிரிவு (Innovation and Human Resource Management Division);
- நிதிப் பிரிவு (Finance Division),
- வளர்ச்சிப் பிரிவு (Development Division),
- கணக்குப் பிரிவு (Accounts Division),
- மேலாண்மைச் சேவைப் பிரிவு (Management Services Division),
- உள் தணிக்கைப் பிரிவு (Internal Audit Division),
- பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு (Corporate Communications Unit),
- நிகழ்வுகள் மேலாண்மைப் பிரிவு (Events Management Division)
- சட்ட ஆலோசகர் அலுவலகம் (Legal Advisor Office Division)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Government Directory: Prime Minister's Department". Office of the Prime Minister of Malaysia. 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Prime Ministers Office (Malaysia) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Prime Minister's Department official portal பரணிடப்பட்டது 2020-12-04 at the வந்தவழி இயந்திரம்