மலேசிய செம்பனை வாரியம்

மலேசிய அரசு நிறுவனம்

மலேசிய செம்பனை வாரியம் (மலாய்: Lembaga Minyak Sawit Malaysia; ஆங்கிலம்: Malaysian Palm Oil Board) (MPOB); என்பது மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும்.

மலேசிய செம்பனை வாரியம்
Malaysian Palm Oil Board
Lembaga Minyak Sawit Malaysia

MPOB

சபா லகாட் டத்துவில் கிளை வளாகம்
துறை மேலோட்டம்
அமைப்பு1 மே 2000; 24 ஆண்டுகள் முன்னர் (2000-05-01)
முன்னிருந்த அமைப்புகள்
  • Palm Oil Research Institute of Malaysia
  • Palm Oil Registration and Licensing Authority
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம் சிலாங்கூர் பண்டார் பாரு பாங்கி
 மலேசியா
2°57′N 101°46′E / 2.950°N 101.767°E / 2.950; 101.767
பொறுப்பான அமைச்சர்கள்
அமைப்பு தலைமை
  • முகமது எல்மி ஒசுமான் பாசா (Mohamad Helmy Othman Basha), தலைமை இயக்குநர்
மூல அமைப்புமலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு
வலைத்தளம்www.mpob.gov.my
கிழக்கு மலேசியாவில் செம்பனைத் தோட்டம் 2010
சபா, கூனாக் மாவட்டம், கூனாக் பகுதியில் செம்பனை நினைவுச்சின்னம், 2014

இந்த நிறுவனம் மலேசியாவில் செம்பனை தொழில்துறையின் நிலை உயர்வு மற்றும் தர உயர்வின் மேம்பாட்டிற்கு பொறுப்பான அரசு நிறுவனமாகச் செயல்படுகிறது.[1]

வரலாறு

தொகு

1998-இல் மலேசிய செம்பனை வாரியச் சட்டம் (Malaysian Palm Oil Board Act) நிறைவேற்றப் பட்டதும்; மலேசிய செம்பனை வாரியம் (MPOB) நிறுவப்பட்டது. ஏற்கனவே இருந்த மலேசிய செம்பனை ஆய்வு நிறுவனம் (Palm Oil Research Institute of Malaysia) (PORIM); மற்றும் செம்பனை பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் (Palm Oil Registration and Licensing Authority) (PORLA) ஆகிய இரண்டு அமைப்புகளும் ஒன்றாக இணைவதற்கு வழிவகுத்தது.

மலேசிய செம்பனை வாரியம் 1 மே 2000-இல் முறைப்படி செயல்படத் தொடங்கியது. மலேசிய செம்பனை வாரியத்தின் முதல் தலைமை இயக்குநராக, 2006-ஆம் ஆண்டு வரை, யூசோப் பாசிரோன் (Yusof Basiron) என்பவர் பணியாற்றினார்.[2]

அதன் பின்னர் சிலர் தலைமை இயக்குநர் பதவியை வகித்துள்ளனர். 31 சூலை 2018-இல் முகமட் பக்கே சாலே என்பவர், இரண்டு வருட காலத்திற்கு தொழில்துறை ஒழுங்குமுறை மற்றும் ஆய்வு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3]

பொது

தொகு

மலேசிய செம்பனை வாரியம் என்பது மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு வாரியமாகும். இந்த வாரியத்திற்கு, செம்பனை எண்ணெய் தொழில் வரிகள் மற்றும் ஆய்வுகளுக்கான அரசாங்க மானியங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. செம்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து வணிகங்களும் மலேசிய செம்பனை வாரியத்தின் வழியாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த வாரியத்தின் தற்போதைய தலைவர் சாரிர் பின் அப்துல் சமாத் (Shahrir bin Abdul Samad); மற்றும் தலைமை இயக்குநர் சூ யூ யென் மே (Choo Yuen May).[4]

இந்த வாரியத்தின் தலைமையகம் சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கியில் உள்ளது. இந்த வாரியத்திற்கு மலேசியாவின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. மேலும் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளிலும்; பிரசல்ஸ் நகரத்திலும் அலுவலகங்கள் உள்ளன.[5][6]

செயல்பாடுகள்

தொகு

இந்த வாரியத்தின் செயல்பாடுகளில் ஆய்வுகள், பதிப்பு வெளியீடுகள், மேம்பாட்டு விதிமுறைகளைச் செயல்படுத்துதல் மற்றும் மலேசியாவில் செம்பனை எண்ணெய் தொழிலை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[7]

மலேசியாவில் செம்பனை எண்ணெய் உற்பத்தியின் அனைத்து நிலைகளையும்; நடவு முதல் ஏற்றுமதி வரை மலேசிய செம்பனை வாரியம் மேற்பார்வையிடுகிறது. அத்துடன் செம்பனை ஆய்வு (Journal of Oil Palm Research) எனும் ஆய்விதழ் உட்பட பல இதழ்களை இந்த வாரியம் வெளியிடுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Palm oil board officially comes into being May 1". Malaysia Economic News. 29 April 2000. http://w3.nexis.com/new/docview/getDocForCuiReq?lni=405K-G2F0-00KM-D3V6&csi=210555&oc=00240&perma=true. 
  2. "Tan Sri Dr Yusof Basiron". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2014-12-27.
  3. "Sime Darby Plantations' Salleh named chairman of Malaysia Palm Oil Board" (in en). The Business Times. https://www.businesstimes.com.sg/energy-commodities/sime-darby-plantations-salleh-named-chairman-of-malaysia-palm-oil-board. 
  4. "Foreword from the Director General Malaysian Palm Oil Board". mpob.gov.my. Malaysian Palm Oil Board. Archived from the original on 27 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
  5. "Local". mpob.gov.my. Malaysian Palm Oil Board. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013.
  6. "International". mpob.gov.my. Malaysian Palm Oil Board. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013.
  7. Ghani, Patimang Abdul (26 February 2013). "MPOB Approves 2,432 Applications From Smallholders To Start Oil Palm Planting in Sabah". Bernama. http://www.bernama.com.my/bernama/v7/po/newspolitics.php?id=930551. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_செம்பனை_வாரியம்&oldid=4166798" இலிருந்து மீள்விக்கப்பட்டது