மலாய் மொழி
மலாய் மொழி (Malay, /məˈleɪ/;[1] Bahasa Melayu, மலாயு மொழி; சாவி எழுத்துமுறை: بهاس ملايو) என்பது ஆத்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி ஆகும். இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.
15ஆம், 16ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், இந்தப் பகுதிகளை ஆட்சி செய்த மலாக்கா சுல்தான்களின் ஆளுமையில் இந்த மொழி செல்வாக்குப் பெற்று இருந்தது.
பொது
தொகுஇந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் மக்கள், தங்களின் பூர்வீக மொழியாக பேசி வருகின்றனர்.
இருப்பினும், சுமத்திரா, சரவாக், போர்னியோ தீவின் மேற்கு கலிமந்தான் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மலாய் மொழியைப் பேசி வருவதால், அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 215 மில்லியனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[2]
மலாய் மொழிக்கு வேறு பல அதிகாரப்பூர்வ பெயர்களும் உள்ளன. பகாசா கெபாங்சான், பகாசா நேசனல் என்று சில மலேசிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர், புருணையில் பகாசா மலாயு என்றும்; மலேசியாவில் பகாசா மலேசியா என்றும்; இந்தோனேசியாவில் பகாசா இந்தோனேசியா என்றும்; அழைக்கப்படுகின்றது.
மொழி பிறப்பிடம்
தொகுமலாய் மொழியின் பிறப்பிடம் சுமத்திரா தீவாகும். அந்த மொழியின் மற்ற உறவு மொழிகளான மினாங்கபாவ் மொழியும் இங்குதான் தோன்றியது. தென் சுமத்திராவின் தாத்தாங் ஆற்றுப் பகுதிகளில் 7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளில் மலாய் எழுத்துகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Laurie Bauer, 2007, The Linguistics Student’s Handbook, Edinburgh
- ↑ Even if we are very conservative and consider only two third of Malaysians and 85% of Indonesians as fluent speakers (either native, or near-native), there are still more than 215 million speakers of Malay-Indonesian.