மலையாளத் தமிழியல்
இக்கட்டுரை விக்கிப்பீடியாவின் பதிப்புரிமைக் கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம். இது குறித்த முறைப்பாடை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலையாளத் தமிழியல் தமிழ் மொழிக்கும் தமிழில் இருந்து பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு தனித்துவம் கொண்ட ஒரு மொழியாக மருபிய மலையாள மொழிக்கும் இருக்கும் தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல். மலையாள மக்களும் தமிழ் மக்களின் அடித்தோன்றல்களே. அந்த நோக்கில் தமிழர்களுக்கும் மலையாள மக்களுக்கும் இருக்கும் இணைப்பு மிகவும் நெருக்கமானது. தமிழ்நாட்டோடு ஒன்றியிருக்கும் மாநிலம் என்ற நோக்கில் மட்டுமல்லாமல் பண்பாட்டு நிலையிலும் இரண்டற கலந்த ஒரு சமூகம் ஆகும். மொழி, இலக்கிய, பண்பாட்டு, பொருளாதார தொடர்புகளும் பரிமாறுதல்களும் தமிழ்நாட்டோடு அதிகமாக நிகழுவதால் மலையாளத் தமிழியல் தமிழியல் புலத்தில் ஒரு முக்கிய முனையாகும்.
மணிப்பிரவாளமும் மலையாளத் தோற்றமும்
தொகுகி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவே மலையாளம் இருந்தது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. பாட்டு என்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும், சமூகத்தின் உயர் மட்டத்தினர் மத்தியில் மணிப்பிரவாள நடை பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது. சிறப்பாக நம்பூதிரி சமூகத்தினர் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், சமசுகிருதச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மணிப்பிரவாளப் பாடல்களில் சமசுகிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்த நூல் கூறுகிறது. இது, எவ்வாறு சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமசுகிருதம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. கேரளத்தில் இந்த மணிப்பிரவாள நடையில் எழுதி, இன்று கிடைக்கின்ற மிகப் பழைய நூல் வைசிக தந்திரம் என்பதாகும்.