உருசியத் தமிழியல்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
உருசியத் தமிழியல் (Russian Tamil Studies) என்பது ரஷ்ய மொழி, ரஷ்யா, மற்றும் உருசியர்களுக்கும் தமிழ், மற்றும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் எனலாம்.
பொதுவுடமை கொள்கைகளால் உந்தப்பட்ட பல தமிழர்கள் 1950-1990 காலப்பகுதிகளில் உருசிய மொழியில் தேர்ச்சி பெற்று பல உருசிய நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தனர். இக்காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்திற்கு கல்வி பெறச்சென்ற பலரும் ரஷ்ய மொழியில் தேர்ச்சிபெற்றனர். இதன் காரணமாக கணிசமான தமிழர்களுக்கு ரஷ்ய மொழி, பண்பாடு, தத்துவங்களில் பரிச்சியமும் தொடர்பும் உண்டு.
சோவியக் கால மொழிபெயர்ப்புக்கள்
தொகு"1950களிலும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும் அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு போட்டி போட்டுக்கொண்டு இதில் ஈடுபாடு காட்டின. ரஷிய நூல்கள் 1990 வரை ஒரே சீரான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது." முகம்மது செரிபு வி. எஸ். வெங்கடேசன் கா. அப்பாத்துரை, கு. பரமசிவம், எஸ். சங்கரன், முல்லை முத்தையா, புதுமைப்பித்தன், ரகுநாதன், முகமது ஷெரீபு, எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் உருசிய நூலகளை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டோரில் உட்படுவர். [1]
சோவியத் வானொலி - தமிழ்த் துறை
தொகுசோவியத் யூனியன் இருந்த போது, தமிழ் மொழிக்கென மாஸ்கோ வானொலி நிலையத்தில் ஒரு தனித்துறை இருந்தது. இதில் திரு. மணிவர்மன், திரு. சோமசுந்தரம் ஆகியோர் பணியாற்றினார்கள். தற்போது இந்த வானொலி தனித்துறை இல்லை.
உருசியாவில் தமிழ் கல்வி
தொகு- Moscow University's Institute of Oriental Languages
உருசிய தமிழியலாளர்கள்
தொகு- அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (Alexander M. Dubianski) [1] பரணிடப்பட்டது 2007-02-10 at the வந்தவழி இயந்திரம்
- விதாலி ஃபூர்னிக்கா
- செமியோன் நுதின்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Russian to Tamil Machine Translation System at Tamil University - by Dr. KC Chellamuthu
- உருசிய மொழியில் திருக்குறள்
- Tamil, a clear and logical language: Russian scholar பரணிடப்பட்டது 2007-02-10 at the வந்தவழி இயந்திரம்
- Agreement to promote study of Tamil in Russia பரணிடப்பட்டது 2007-11-03 at the வந்தவழி இயந்திரம்