மல்லிகா பத்ரிநாத்

இந்திய உணவு எழுத்தாளர், சமையல் கலைஞர்

மல்லிகா பத்ரிநாத் (Mallika Badrinath) ஒரு விருது பெற்ற இந்திய உணவு எழுத்தாளர், சமையல் கலைஞர்,, சமையல் புத்தக எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் ஆவார். [1]

மல்லிகா பத்ரிநாத்
பிறப்புசேலம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிசமையற்கலைஞர், சமையல் புத்தக எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989-
வலைத்தளம்
www.mallikascookery.com

இவர் ஆங்கில மொழியில் 29 சமையற்கலை நூல்களும் மற்றும் தமிழ் மொழியில் 30 நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றில் 4000 க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் உள்ளன. இவரது சில நூல்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நூல்களில், தமிழ் மொழியில் வெளிவந்த “சிறு தானிய சமையல்” தொடர் குறிப்பிடத்தக்கதாகும். இதில் பாரம்பரிய சத்தான பொருட்கள் மற்றும் சிறுதானியங்களான ராகி, கம்பு, சாமை, தினை, வரகு, சோளம் மற்றும் குதிரைவாலி போன்றவற்றை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் முறை விரிவாக கூறப்பட்டுள்ளது.[2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சேலம் என்ற நகரத்தில் பிறந்து வளர்ந்த மல்லிகா, சேலத்திலிருந்த கல்லூரியில் வீட்டு அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1980 களின் பிற்பகுதியில், 21 வயதில், அவர் சென்னையில் வசிக்கும் பத்ரிநாத் என்கிற பட்டய கணக்காளரை திருமணம் செய்து கொண்டார். தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அவர்கள் 25 பேர் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்ததால் திருமணத்திற்கு முன்பு அரிதாகவே சமைத்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் சமையல் செய்ய ஒரு சமையல்காரரும் உதவியாளரும் இருந்தனர். இருப்பினும், அவர் சமையல் குறிப்புகளில் ஆர்வம் காட்டினார். அதனால் சமையல் சம்பந்தப்பட்ட படங்கள், குறிப்புகள் மற்றும் கையெழுத்து பிரதிகள் ஆகியவற்றை ஒரு ஸ்கிராப் புத்தகத்தில் சேகரித்தார்.[3]

இலக்கிய வாழ்க்கை தொகு

சென்னையில், மல்லிகா பத்ரிநாத் தொடர்ந்து சமையல் மற்றும் சமையல் தொடர்பான குறிப்புகளைச் சேகரித்தார். இவருடைய தாய் மற்றும் அத்தை ஆகியோரிடமிருந்து இவர் பெற்ற சமையல் குறிப்புகள் இதில் அடங்கும். அக் குறிப்புகளின் அடிப்படையில் தன் வீட்டில் சமைத்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாறுபாடுகளுடன் குறிப்பேடுகளில் மீண்டும் எழுதி வைத்துக் கொள்வார். விரைவில், பக்க உணவுகளுக்கான 80 சமையல் குறிப்புகள் உட்பட இதுபோன்ற 10 கையால் எழுதப்பட்ட புத்தகங்கள் இவரிடம் இருந்தன. இவரது கணவர் இந்த சமையல் குறிப்புகளை வெளியிட ஊக்குவித்தார். இதன் விளைவாக இவரது முதல் புத்தகம் "100 சைவ சமையல்" என்னும் தலைப்பில் 1988 இல் வெளியிடப்பட்டது. இவரது புத்தகங்கள் பிரபலமடைந்ததால், இவர் சமையற்கலை குறித்து எழுதும் முழுநேர எழுத்தாளரானார். பின்னர் தனது சொந்த வெளியீட்டு நிறுவனமான "பிரதீப் நிறுவனங்கள்" மூலம் புத்தகங்களை வெளியிட்டார். இவரது கணவரும் புத்தகங்களை சந்தைப்படுத்த உதவுவதற்காக தனது வேலையை குறைத்துக் கொண்டார்.[4] ஆண்டுக்கு ஒரு புத்தகம் எழுத முயற்சிப்பதாக மல்லிகா பத்ரிநாத் கூறுகிறார். இன்றுவரை, இவர் 32 சமையல் புத்தகங்கள் மற்றும் பல சமையல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தொலைக்காட்சி பங்களிப்பு தொகு

1990களில் இந்தியாவில் கேபிள் தொலைக்காட்சிக்கான அணுகல் அதிகரித்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில சமையல் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இதன் விளைவாக, மல்லிகா பத்ரிநாத் ஆரம்பத்தில் தூர்தர்ஷனுடனும் பின்னர் சன் தொலைக்காட்சியுடனும் . [5] சமையற்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

இவர் சன் தொலைக்காட்சியில் ("உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும்"), ஜெயா தொலைக்காட்சியில் (“அறுசுவை நேரம்”) சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அங்கு இவரது நிகழ்ச்சிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. [6] பாலிமர் தொலைக்காட்சி மற்றும் சக்தி தொலைக்காட்சி-இலங்கையில் சமையல் நிகழ்ச்சிகளிலும் இவர் இடம்பெற்றுள்ளார். மேலும் இவர் "மல்லிகாவின் சமையல்" என்கிற பெயரில் தனது சொந்த யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். . [7]

பிற முயற்சிகள் தொகு

1999 ஆம் ஆண்டில், பத்ரிநாத் "மல்லிகா ஹோம் ப்ராடக்ட்ஸ்" நிறுவனத்தின் கீழ் மசாலா பொடிகளைச் (இந்திய சமையல் பொடிகள்) சந்தைப்படுத்தத் தொடங்கினார், இது பெரும்பாலும் எம்.எச்.பி என அழைக்கப்படுகிறது. குங்குமம், குமுதம், மங்கையர் மலர், சினேகிதி, பொற்பாதம் மற்றும் கோகுலம் கதிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் சமையல் தொடர்பான கட்டுரைகளை இவர் தொடர்ந்து எழுதுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மல்லிகா பத்ரிநாத் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர்.

விருதுகள் தொகு

இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் 1998 ஆம் ஆண்டில் “பிரியதர்ஷினி விருது” உட்பட பல விருதுகளை மல்லிகா பத்ரிநாத் பெற்றுள்ளார். அவரது பிற விருதுகள் பின்வருமாறு:

  • “மஹிளா ரத்னா” விருது - 1998 இல் தமிழ்நாடு ஆர்யா வைஸ்யா மகிளா சபையால் வழங்கப்பட்டது
  • தென் இந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் வழங்கிய “அறுசுவை ஞான கலாமணி” விருது
  • கால் சென்னை 2006 இல் வழங்கிய சமையல் துறையில் “ஆச்சார்யா விருது”
  • மைலாப்பூர் அகாடமி 2006 இல் வழங்கிய “சிறந்த குக்கரி ஷோ ஹோஸ்ட்” விருது
  • 2008 ஆம் ஆண்டில் சர்வதேச லயன்ஸ் கிளப்புகள் வழங்கிய “அறுசுவை அரசி” விருது
  • குங்குமம் - தமிழ் இதழ் வழங்கிய “நள மகாராணி” விருது
  • திருநகர் & மை மதுரை ரோட்டரி கிளப்பின் “நிபுணத்துவ சிறப்பு விருது” -
  • 2012, மகளிர் தினத்தில் விஜய் தொலைக்காட்சி வழங்கிய “சிகரம் தொட்ட பெண்மணி” விருது.

குறிப்புகள் தொகு

  1. "Mallika Badrinath – The Culinary Queen". Archived from the original on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Mallika Badrinath - a Biography". Archived from the original on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Mallika Badrinath – The Culinary Queen". Vasavians. Archived from the original on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Muthalaly, Shonali (1 November 2012). "Love in spoonfuls". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/Food/love-in-spoonfuls/article4054471.ece. பார்த்த நாள்: 25 April 2018. 
  5. Keerthana, R (4 May 2012). "Women power: Recipe for success". The Hindu. http://www.thehindu.com/features/downtown/women-power-recipe-for-success/article3425239.ece. பார்த்த நாள்: 25 April 2018. 
  6. "Contributions by Mallika Badrinath". Awesome Cuisine. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. "Mallika Badrinath's kitchen tips". Awesome Cuisine. Archived from the original on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_பத்ரிநாத்&oldid=3566725" இலிருந்து மீள்விக்கப்பட்டது