மானுவல் எல். குவிசோன்

(மானுவல் குவிசோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மானுவல் லூயி குவிசோன் யி மோலினா (Manuel Luis Quezón y Molina, ஆகத்து 19, 1878 – ஆகத்து 1, 1944) 1935 முதல் 1944 வரை பிலிப்பீன்சு பொதுநலவாயத்தின் அரசுத்தலைவராக பொறுப்பேற்றவர். பிலிப்பீன்சின் அரசுத் தலைவராக பணியாற்றிய முதல் பிலிப்பினோ இவராவார். பெரும்பான்மையான பிலிப்பினோ மக்கள் இவரை 1897 முதல் 1901 வரை ஆட்சி புரிந்த எமிலியோ அகுனால்டோவிற்குப் பிறகான இரண்டாவது அரசுத் தலைவராக கருதுகின்றனர்.

மானுவல் எல். குவிசோன்
பிலிப்பீன்சின் இரண்டாம் அரசுத்தலைவர்
பொதுநலவாயத்தின் முதல் அரசுத்தலைவர்
பதவியில்
நவம்பர் 15, 1935 – ஆகத்து 1, 1944
துணை அதிபர்செர்ஜியோ ஓசுமெனா
முன்னையவர்கலைக்கப்பட்டது (இப்பதவியில் கடைசியாக எமிலியோ அகுனால்டோ இருந்தார்)
பின்னவர்ஒசே பி. இலாரல் (நிகழ்நிலைப்படி)
பிலிப்பீன்சு மேலவையின் முதல் தலைவர்
பதவியில்
ஆகத்து 29, 1916 – நவம்பர் 15, 1935
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்மானுவல் இரோக்சாசு
ஐந்தாவது மேலவை மாவட்ட உறுப்பினர்
பதவியில்
அக்டோபர் 16, 1916 – நவம்பர் 15, 1935
இவர்களுடன்:
வின்சென்ட் இலஸ்தர் (1916–1919)
அன்டெரோ சோரியனொ (1919–1925)
ஒசே பி. இலாரெல் (1925–1931)
கார்லோ எம். ரெக்டோ (1931–1935)
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்பதவி கலைக்கப்பட்டது
தேசிய பாதுகாப்புச் செயலர்
பதவியில்
சூலை 16, 1941 – திசம்பர் 10, 1941
குடியரசுத் தலைவர்அவரே
முன்னையவர்தியோபிலோ சீசன்
பின்னவர்ஜார்ஜ் பி. வர்காசு
பிலிப்பீன்சு தீவுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க உள்ளுறை ஆணையர்
பதவியில்
நவம்பர் 23, 1909 – அக்டோபர் 15, 1916
Serving with பெனிட்டோ லகார்தா
(1909–1913)
மற்றும் மானுவல் எர்ன்ஷா
(1913–1916)
முன்னையவர்பப்லோ ஓகேம்போ
பின்னவர்தியோடொரோ ஆர். யாங்கோ
பிலிப்பீன்சு கீழவையில் பெரும்பான்மைத் தலைவர்
பதவியில்
அக்டோபர் 16, 1907 – நவம்பர் 23, 1909
முதல் பிலிப்பீன்சு சட்டப்பேரவையின் பெரும்பான்மைத் தலைவராக
குவிசோன் மாவட்டத்திலிருந்து கீழவை உறுப்பினர்
பதவியில்
அக்டோபர் 16, 1907 – அக்டோபர் 16, 1916
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்பிலெமோன் பெரெசு
தயபாசு ஆளுநர்
பதவியில்
1906–1907
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மானுவல் லூயி குவிசோன் யி மோலினா

(1878-08-19)ஆகத்து 19, 1878
பாலேர், தயபாசு, எசுப்பானியக் கிழக்கிந்தியத் தீவுகள்
(தற்போது பாலேர், அவுரோரா மாநிலம், பிலிப்பீன்சு)
இறப்புஆகத்து 1, 1944(1944-08-01) (அகவை 65)
சாரானாக் ஏரி, நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
இளைப்பாறுமிடம்குவிசோன் நினைவு வட்டம், குவிசோன் நகரம், பிலிப்பீன்சு
தேசியம்பிலிப்பினோ
அரசியல் கட்சிநேசியோனலிசுட்டா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
மக்களாட்சிக் கட்சி
துணைவர்அவுரோரா அரகோன்
உறவுகள்மானுவல் எல். குவிசோன் III (பேரர்)
பிள்ளைகள்மா. அவுரோரா குவிசோன்
மாரியா செனீதா குவிசோன்-அவன்செனா
மானுவல் எல். குவிசோன், இளை.
லூயிசா கோரசோன் பாசு குவிசோன்
முன்னாள் கல்லூரிகாலேஜியோ டெ சான் யுவான் டெ லெட்ரான்
சான்டோ டோமசு பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர், படைவீரர்
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு பிலிப்பீன்சு
கிளை/சேவைபிலிப்பைன்சு புரட்சிகரப் படை
பிலிப்பைன்சு பொதுநலவாயப் படை
சேவை ஆண்டுகள்1899–1900
1941–1944
தரம்மேஜர்
போர்கள்/யுத்தங்கள்பிலிப்பைன்-அமெரிக்கப் போர்
இரண்டாம் உலகப் போர்
* Philippines Campaign (1941–1942)
* Japanese Occupation of the Philippines (1942-1945)

குவிசோன் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேலவைத் தலைவராவார். தவிரவும் நாடுதழுவிய தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவராகவும் இரண்டாம் முறையும் மீள்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவராகவும் விளங்கினார். இவர் " தேசிய மொழியின் தந்தை" என அறியப்படுகின்றார்.

தனது ஆட்சிக்காலத்தில், குவிசோன் நாட்டுப்புற நிலமில்லா விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். தீவுகளின் படைசார் பாதுகாப்பு சீரமைப்பு, அரசு நிர்வாகச் சீரமைப்பு, மின்டானோ குடியேற்றம் மற்றும் மேம்படுத்தல், பிலிப்பீன்சின் வணிகத்தில் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்கொள்ளல், நிலச் சீர்திருத்தம், அரசு ஊழலுக்கெதிரான நடவடிக்கைகள் என பல முடிவுகளைக் கண்டார். போர் தொடங்கியபோது ஐக்கிய அமெரிக்காவிலிருந்து நாடுகடந்த அரசை நிறுவி சப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்தார்.

அமெரிக்காவில் நாடுகடந்து வாழ்ந்துவந்த நிலையிலேயே நியூயோர்க் மாநிலத்தின் சரனாக் ஏரி நகரில் காசநோயால் இறந்தார். இரண்டாம் உலகப் போர் முடியும்வரை இவரது உடல் ஆர்லிங்டன் தேசியக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது; பின்னர் மணிலாவிற்கு மாற்றப்பட்டது. இறுதியாக குவிசோன் நினைவு வட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானுவல்_எல்._குவிசோன்&oldid=3453226" இலிருந்து மீள்விக்கப்பட்டது