மாம்பலம் தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்

மாம்பலம் தொடருந்து நிலையம் (Mambalam railway station, நிலையக் குறியீடு:MBM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

மாம்பலம்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
மாம்பலம் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மாம்பலம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°2′14″N 80°13′39″E / 13.03722°N 80.22750°E / 13.03722; 80.22750
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMBM
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1911[1]
மின்சாரமயம்15 நவம்பர் 1931[2]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
மாம்பலம் is located in சென்னை
மாம்பலம்
மாம்பலம்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
மாம்பலம் is located in தமிழ் நாடு
மாம்பலம்
மாம்பலம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மாம்பலம் is located in இந்தியா
மாம்பலம்
மாம்பலம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையத்தின் அருகிலேயே மேற்கு மாம்பலம், அசோக் நகர் மற்றும் தி. நகர் அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் உள்ளது.

வரலாறு தொகு

1911 ஆம் ஆண்டில் சென்னை எழும்பூர் முதல் காஞ்சிபுரம் வரை புறநகர் இரயில் சேவை இயக்கிய போது, மாம்பலம் இரயில் நிலையம் கட்டப்பட்டது. சென்னைக் கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையிலான புறநகர் சேவை 11 மே 1931 அன்று இயக்கிய போது, 1931 நவம்பர் 15 ஆம் தேதி இரண்டு இரயில் தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[2]

பயணிகள் எண்ணிக்கை தொகு

சென்னை நகரின் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றான மாம்பலம் இரயில் நிலையம், ஒரு நாளைக்கு 200,000 பயணிகளை கையாளுகிறது.

வசதிகள் தொகு

ஒரு நாளைக்கு சுமார் பத்தொன்பது விரைவுத் தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து, இந்நிலையத்தின் வழியாக செல்கின்றன.[3]

இந்நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 500 முதல் 600 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியும்.[4]

இந்நிலையத்தின் தெற்கு பகுதியில் தி. நகர் ரங்கநாதன் தெருவில் இறங்கும் ஒரு நடைப்பாலம் உள்ளது. இருப்பினும், மக்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது நடைப்பாலம் 2014 ஆம் ஆண்டு வடக்கு பகுதியில் கட்டப்பட்டது.[5][6] இந்த நிலையத்தில் பயணிகள் முன்பதிவு மையம் அமைந்துள்ளது. அதனால் தி. நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், மற்றும் வடபழனி உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இங்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு பத்து சேவை மையமும் (Counter), விசாரணைகளுக்கான மற்றொரு சேவை மையமும் கொண்டுள்ளது, மேலும் தினமும் 2,500 பயணச்சீட்டுகள் விற்பனை ஆகிறது.[7]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Varghese, Nina (29 August 2006). "T.Nagar: Shop till you drop, and then shop some more". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.in/2006/08/29/stories/2006082903011900.htm. பார்த்த நாள்: 14 Jan 2013. 
  2. 2.0 2.1 "Electric Traction - I". IRFCA.org. http://irfca.org/faq/faq-elec.html#vol. பார்த்த நாள்: 17 Nov 2012. 
  3. "List of trains that pass via Mambalam". Mambalam Railway Station Details (Indian Trains.org) இம் மூலத்தில் இருந்து 16 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120716055257/http://www.indiantrains.org/station-details/?code=MBM&name=MAMBALAM. பார்த்த நாள்: 21 Nov 2012. 
  4. Sujatha, R. (17 February 2009). "Poor parking facilities at Mambalam railway station". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090221212957/http://www.hindu.com/2009/02/17/stories/2009021759310400.htm. பார்த்த நாள்: 22 Nov 2012. 
  5. Ayyappan, V. (4 December 2010). "Commuters demand additional bridge at Mambalam station". The Times of India (Chennai: The Times Group) இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104010133/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-04/chennai/28270206_1_foot-overbridge-commuters-platform-nos. பார்த்த நாள்: 22 Nov 2012. 
  6. Manikandan, K. (13 September 2014). "Lack of space delays widening of Mambalam FOB". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/chen-infra/lack-of-space-delays-widening-of-mambalam-fob/article6405764.ece. பார்த்த நாள்: 26 October 2014. 
  7. Ayyappan, V. (9 September 2008). "Mambalam, a model of efficiency". The Times of India (Chennai: The Times Group) இம் மூலத்தில் இருந்து 26 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131026014909/http://articles.timesofindia.indiatimes.com/2008-09-09/chennai/27905368_1_railway-ticket-booking-passenger-reservation-system. பார்த்த நாள்: 22 Nov 2012. 

வெளி இணைப்புகள் தொகு