மாம்பழச்சிட்டு

மாம்பழச்சிட்டு
Common Iora.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: (மரங்களில்) அடையும் பறவை (Passeriformes)
குடும்பம்: Aegithinidae
பேரினம்: Aegithina
இனம்: A. tiphia
இருசொற் பெயரீடு
Aegithina tiphia
(லின்னேயசு, 1758)

மாம்பழச்சிட்டு (Common Iora - Aegithina tiphia) என்பது தெற்காசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும்; இதற்கு மஞ்சள் சிட்டு என்றொரு பெயரும் உண்டு.

அளவும் இயல்புகளும்தொகு

 மாம்பழச்சிட்டின் கூப்பாடு  இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் ( 14 செமீ [[2]] ). ஆண், பெண் இரண்டுமே இனப்பெருக்கமல்லா காலத்தில் பசுமை கலந்த மஞ்சள் நிறவுடலும் இறக்கைகளில் வெண்பட்டைகளும் கொண்டிருக்கும்; ஆனால் பெண் சிட்டின் மேல்பாகம் பசுமையாக இருக்கும், ஆணின் இறக்கைப்பகுதி கருமை அதிகமாயிருக்கும்; இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் தலையும் வாலும் கருத்திருக்கும்; மஞ்சள் நிறம் தூக்கலாகத் தெரியும். குளிர்காலத்தில் ஆண் சிட்டு தன் கருமையை இழந்து பேடையைப் போல் பசுமை போர்த்திருக்கும்.[3] மர நெருக்கமுள்ள இடங்கள், தோட்டங்கள், சிறு காடுகளில் இவை இணையுடன் வாழும்.

பரவல்தொகு

குறிப்புதவிதொகு

  1. "Aegithina tiphia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2009).
  2. Pocket Guide to the Birds of the INDIAN Subcontinent - Grimmett, Carol * Tim Inskipp p.222
  3. மா. கிருஷ்ணன் - தமிழிணையப் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பழச்சிட்டு&oldid=1931489" இருந்து மீள்விக்கப்பட்டது