மார்கோ ஜான்சன்

மார்கோ ஜான்சன் (பிறப்பு: மே 1, 2000) ஒரு தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். [2]

மார்கோ ஜான்சன்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு1 மே 2000 (2000-05-01) (அகவை 23)
கிலேர்க்ஸ்டோப், வட மேற்கு, தென்னாபிரிக்கா
உயரம்2.09 m (6 அடி 10 அங்)[1]
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஇடது கை மிதவேகம்
பங்குபந்துவீச்சுச் சகலதுறை ஆட்டக்காரர்
உறவினர்கள்துவான் ஜான்சன் (இரட்டைச் சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 349)26 டிசம்பர் 2021 எ. இந்தியா
கடைசித் தேர்வு28 பெப்ரவரி 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 144)19 சனவரி 2022 எ. இந்தியா
கடைசி ஒநாப2 ஏப்ரல் 2023 எ. நெதர்லாந்து
ஒநாப சட்டை எண்70
இ20ப அறிமுகம் (தொப்பி 96)17 June 2022 எ. இந்தியா
கடைசி இ20ப26 மார்ச் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்70
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018வட மேற்கு
2019 – 2020நைட்ஸ்
2020 – 2021வாரியர்ஸ்
2021மும்பை இந்தியன்ஸ்
2022–தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத்
2022–presentசன்ரைசர்ஸ் ஈஸ்டேர்ன் கேப்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 11 9 31 23
ஓட்டங்கள் 306 131 976 248
மட்டையாட்ட சராசரி 20.40 26.20 21.68 27.55
100கள்/50கள் 0/1 0/0 0/6 0/0
அதியுயர் ஓட்டம் 59 43 87 43
வீசிய பந்துகள் 1,775 470 4,864 1,033
வீழ்த்தல்கள் 44 10 113 27
பந்துவீச்சு சராசரி 22.38 45.70 22.84 35.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/35 2/46 6/38 3/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 3/– 16/– 7/–
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 2 ஏப்ரல் 2023

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அவரது ஆரம்ப காலத்தில், ஜான்சன் ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக இருந்தார். ஒன்பது வயதில், 20 ஓவர் போட்டியில், அவர் ஆட்டமிழக்காமல் 164 ஓட்டங்கள் எடுத்தார். அவரது தந்தை அந்தப் போட்டியைப் பார்த்து தனது மகனின் திறமையை அடையாளம் கண்டுகொண்டார். அவர் இரட்டைச் சகோதரர்களான மார்கோவுக்கும் துவானுக்கும் வலைப் பயிற்சி அளித்தார். [3] துவான் வடமேற்கு அணிக்காக விளையாடுகிறார். [4]

சர்வதேசப் போட்டிகள் தொகு

ஜனவரி 2021 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் ஜான்சன் சேர்க்கப்பட்டார். [5]

மே 2021 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் ஜான்சன் பெயரிடப்பட்டார். [6] டிசம்பர் 2021 இல், தென்னாபிரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக மீண்டும் அழைக்கப்பட்டார். [7] அவர் தனது தேர்வுத் துடுப்பாட்ட முதற்போட்டியை 26 டிசம்பர் 2021 அன்று இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். [8] அவரது முதல் தேர்வுத் துடுப்பாட்ட இலக்காக ஜஸ்பிரித் பும்ரா வியான் முல்டரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.[9]

ஜனவரி 2022 இல், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்காகத் தனது முதல் ஒருநாள் சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான அழைப்பைப் பெற்றார். [10] அவர் 19 ஜனவரி 2022 அன்று தென்னாப்பிரிக்காவுக்காக இந்தியாவுக்கு எதிராக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [11] மே 2022 இல், தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 அணியில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜான்சன் இடம்பிடித்தார். [12] அவர் தனது முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியை 17 ஜூன் 2022 அன்று இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். [13]

மேற்கோள்கள் தொகு

  1. "Marco Jansen Profile ESPN". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  2. "Marco Jansen". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
  3. "Marco Jansen, a kid who beat Virat Kohli in the nets, is now a Mumbai Indian". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  4. "India vs South Africa: Meet Duan and Marco Jansen, 17-year-old twins who have impressed Virat Kohli and Co in nets". First Post. பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.
  5. "Jansen replaces Baartman as South Africa fly to Pakistan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  6. "Subrayen, Williams crack the nod for Proteas". SA Cricket Mag. பார்க்கப்பட்ட நாள் 18 May 2021.
  7. "Duanne Olivier returns as South Africa name 21-member squad for India Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  8. "1st Test, Centurion, Dec 26 - 30 2021, India tour of South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 December 2021.
  9. "1st Test, Centurion, Dec 26 - 30 2021, India tour of South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 December 2021.
  10. "MARCO JANSEN RECEIVES MAIDEN PROTEAS ODI CALL-UP". Cricket South Africa. 2 January 2022. https://cricket.co.za/2022/01/02/marco-jansen-receives-maiden-proteas-odi-call-up/. 
  11. "1st ODI, Paarl, Jan 19 2022, India tour of South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  12. "Nortje back in South Africa squad for India T20Is; Stubbs earns maiden call-up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  13. "4th T20I (N), Rajkot, June 17, 2022, South Africa tour of India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கோ_ஜான்சன்&oldid=3729262" இலிருந்து மீள்விக்கப்பட்டது