மார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி

மார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (Marthandam College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், குட்டக்குழியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது 20006 செப்டம்பரில் நிறுவப்பட்டது. மார்தண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது மார்தண்டம் கல்வி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ( ஏ.ஐ.சி.டி.இ ) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
மார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
குறிக்கோளுரைAspire, Act, Achieve
வகைசுயநிதி
உருவாக்கம்2006
Academic affiliation
அண்ணா பல்கலைக்கழகம்/AICTE
தலைவர்பேராசிரியர் முனைவர் டி. ஜேம்ஸ் வில்சன் பி.இ., எம்பிஏ, எம்.ஐ.மார்.டெக்., பிஎச்.டி
தலைவர்பொறி. எப். பிரின்ஸ் வினோ
முதல்வர்முனைவர் சி. சுதாகர் எம்.இ., பிஎச்.டி
மாணவர்கள்1065
பட்ட மாணவர்கள்900
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்165
அமைவிடம்
மார்த்தாண்டம், குட்டக்குழி
, ,
8°18′42″N 77°15′52″E / 8.311612°N 77.264581°E / 8.311612; 77.264581
வளாகம்15 ஏக்கர்கள்
சுருக்கப் பெயர்MACET
இணையதளம்www.macet.edu.in

கல்வித் திட்டங்கள் [1]

தொகு

மார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி [2] பின்வரும் திட்டங்களை வழங்குகிறது

இளநிலை பட்டப்படிப்புகள்

முதுகலை பட்டப்படிப்புகள்

அமைவிடம் [3]

தொகு

இந்த கல்லூரியானது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குட்டக்குழி கிராமத்தில் அமைந்துள்ளது. இக் கல்லூரி வளாகமானது திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் இடையே அமைந்துள்ளது. கல்லூரி வளாகமானது இறைவிபுதூர்கடை, சுவாமியார் மடம், ஆற்றூர், குலசேகரம், அருமனை, திருவட்டாறு, முளகுமூடு, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளுடன் சாலைவழியாக இணைக்ப்பட்டுள்ளது. இக்கல்லூரி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 50.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. [4] இந்த வளாகம் 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

பரந்த பார்வையில் மார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி.

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Courses in MACET". Archived from the original on 2018-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
  2. "MACET".
  3. "How to reach MACET".
  4. "Distance of MACET".