குலசேகரம் பஞ்சாயத்து

குலசேகரில் பல ரப்பர் தோட்டங்கள் உள்ளன, அவை உயர்ந்த தரம் கொண்ட மரப்பால் விளைகின்றன, இது நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. அருகிலுள்ள இடங்களிலிருந்து  கிராமப்புறத்திற்கு  மருத்துவ வசதிகளை வழங்குவதன் மூலம் இந்த நகரம் ஆரோக்கிய பராமரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ளது மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பு செய்து வருகிறது. குலசேகாரத்தில் மருத்துவ அறிவியல், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மூன்று மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. குலசேகரமானது ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகங்களின் கலவையாகும். இது வரலாற்று ரீதியாக அமைதியான நகரமாக உள்ளது. [சான்று தேவை] மலாய் மக்களும் தமிழ் மக்களும் பெரும்பான்மையினர்.

Kulasekharam
குலசேகரம்
Town
Country India
Stateதமிழ்நாடு
Districtகன்னியாகுமரி
ஏற்றம்280 m (920 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்>20,000
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு629161
Telephone code91-4651
வாகனப் பதிவுTN-75 and TN-74
Sex ratio1000:1012 /
ClimateModerate (Köppen)

[சான்று தேவை]

சொற்பிறப்புதொகு

குலசேகர என்பது கேரளாவைச் சார்ந்த ஒரு வம்சத்தின் பெயராகும், அதன் பெயர் பெறப்பட்டிருக்கலாம்.

நிர்வாகம்தொகு

குலசேகாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து ஆகும். பஞ்சாயத்துகளில் 18 வார்டுகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் வளர்ச்சிக்கு பொறுப்பாளிகள். வடிகால் வசதி, உள்ளூர் சாலைகள் மற்றும் நீர் வசதி ஆகியவற்றை பராமரிக்கின்றனா்.

பாதுகாப்புதொகு

காவல் நிலையம்தொகு

குலசேகரம் பாேலிஸ் நிலையம் அரசமூட்டில் அமைந்துள்ளது.

தீ கட்டுப்பாடுதொகு

தீ கட்டுப்பாட்டு நிலையம் மாமூடு எனும் பகுதியில் அமைந்துள்ளது.

சுற்றுலாதொகு

 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கிடையேயான முக்கிய இடமாக இது விளங்குகிறது. திற்பரப்பு, மாதுா் தொட்டி பாலம், பேச்சிப்பாறை அணை, பெரஞ்சாணி நீர்த்தேக்கம் மற்றும் கோதையாறு அணை. திற்பரப்பு நீர்வீழ்ச்சிகளும், பேச்சிப்பாறை அணைகளும் மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும். கோதையாறு பகுதியில்  ஒரு நீர்மின்சார நிலையம்  உள்ளது அது அடர்ந்த காட்டு பகுதியில் அமைந்துள்ளது. 

கல்விதொகு

குறிப்பாக மருத்துவ ஆய்வுகளில்.தமிழ்நாட்டின் கல்வி வரைபடத்தில் குலசேகாரம் முக்கிய இடம் வகிக்கிறது, மூன்று மருத்துவக் கல்லூரிகள், நான்கு செவிலியா்  பயிற்சி மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகள் மற்றும் பள்ளிகளும் இந்த நகரில் அமைந்துள்ளது.[சான்று தேவை]

மருத்துவ கல்லூரிகள்தொகு

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி, இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல்
  •  ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ அறிவியல் நிறுவனம் (SMIMS) 
  • சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி 

பல் மருத்துவ கல்லூரிகள்தொகு

  • ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ்

கலை & அறிவியல்தொகு

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி

குலசேகரத்தில் 20 க்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன இவை பல்வேறு நிலைகளில் கல்வியை அளிக்கின்றன..

மேற்காேள்கள்தொகு