அவனி சூளாமணி
அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்[1]. தமிழகத்தின் வட பகுதியில் அப்போது பல்லவ மன்னனாகச் சிம்மவிஷ்ணு ஆட்சி செய்து வந்தான். சிம்ம விஷ்ணு பாண்டியரை வென்றதாக இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது[1]. இவனது காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள்[1].
பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் செப்பேடு பின்வரும் வரிகளின் மூலம் கூறுகின்றது. "குறுநில மன்னர்களை அடக்கியவன், குறும்புகளை அழித்தவன், செங்கோல் ஓச்சியவன், உலகம் முழுதையும் வெண்கொற்றக் குடைநிழலில் தங்க வைத்தவன், மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன், ஒடுங்கா பகை மன்னர்களை ஒடுக்கியவன், வீரமும், ஈரமும் புகழும் உடையவன்". இப்படிக்கூறும் இப்பாடல் வரி அவனி சூளாமணியின் தந்தையையும் இவனையும் குறித்துப் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கே சூளாமணி போன்றவனாகத் திகழ்ந்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "4.2.2 மாறவர்மன் அவனி சூளாமணியும் அவனது மகனும் (கி.பி. 600-640)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2015.