மாலதி மைத்திரி

malathi maithiri

மாலதி மைத்ரி (Malathi Maithri)(பிறப்பு 1968) என்பவர் இந்திய எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் பெண்ணியவாதி ஆவார். இவர் சமகால தமிழ் இலக்கியத்தில் சிறந்த கவிஞராக அங்கீகரிக்கப்பட்டவர்.[1] மைத்ரி, புதுச்சேரி அரசின் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது மற்றும் கவிதைக்கான மாநில விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[2] இவர் அனகு (பெண்) எனும் வெளியீட்டு நிறுவனத்தினை நிறுவியுள்ளார். இந்நிறுவனம் நைஜீரிய எழுத்தாளர் சிமாமந்த நாகொசி அதிச்சியின் பர்பிள் ரெட் பாப்பி மற்றும் நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் போன்ற படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.[3]

வாழ்க்கை

தொகு

மைத்ரி 1968ஆம் ஆண்டு இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில்,[1] மீனவர் குடும்பத்தில் பிறந்தார். தி இந்துவின் கூற்றுப்படி, ஒரு தமிழ் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், ஓரளவு சுதந்திரம் கிடைத்தது.[4] இவரது முதல் வெளியீடான பிரயாணம் என்ற சிறுகதை 1988-ல் முதன்மையான தமிழ் இலக்கிய இதழான கணையாழியில் இடம்பெற்றது.[1] சல்மா மற்றும் சுகிர்தராணி போன்ற பல தமிழ் பெண் எழுத்தாளர்களைப் போலவே 2000களின் முற்பகுதியில் இவர் பிரபலமடைந்தார்.[5] இவரது கவிதைகள் பாலின பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் கருப்பொருளாக[1] விவரிக்கப்பட்டுள்ளன.[4] பெரியார் ஈ. வெ. இராமசாமி தனது பணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும்,[6] இவரது காலத்தில், காலத்தின் தேவையாக "கருப்பையா அரசியலுக்கு" இவர் அழைப்பு விடுத்ததாகவும், மைத்ரி கூறுகிறார். இவரால் "யோனி அரசியல்" என்று வர்ணிக்கப்படும் இவரது வெளியீடுகள் மற்றும் செயல்பாடுகளில் ஆக்ரோஷமான சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்.[7] பெண்ணியத்தின் தற்போதைய நிலையை இவர் விமர்சித்துள்ளார். இவரது கருத்துப்படி பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு அதன் விளைவாக ஏற்றுக்கொள்ளும் தேடலில் சமரசம் செய்யப்படுகிறது.[3]

வெளியீடுகள்

தொகு

சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005), எனது மதுக்குடுவை (2012), முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை (2017), கடல் ஒரு நீலச்சொல் (2019) என்பவை இவரது கவிதைத் தொகுதிகள். பேய் மொழி பெரும் கவிதை தொகுப்பு (2022) வெளி வந்துள்ளது. விடுதலையை எழுதுதல் (2004), நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008), வெட்டவெளி சிறை (2014),மர்லின் மன்றோக்கள் (2022) என்பவை இவரது கட்டுரை நூல்கள். பறத்தல் அதன் சுதந்திரம் (2004) மற்றும் அணங்கு (2005) நூல்களின் தொகுப்பாசிரியர்.அணங்கு தமிழில் முதல் பெண்ணிய இதழ் மற்றும் பதிப்பகத்தை உருவாக்கியவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Malathi Maitri". Poetry International Web. 1 November 2008.
  2. "Malathi Maithri". Sangam House (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
  3. 3.0 3.1 Palinivalan (25 January 2018). "டெல்லியில் நிறவெறி தாண்டவமாடுகிறது: கவிஞர் மாலதி மைத்ரி பேட்டி". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
  4. 4.0 4.1 Muralidharan, Kavitha (2013-08-31). "Forward, in the past" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/books-reviews/forward-in-the-past/article5075501.ece. 
  5. "An Introduction to 'Wild Words: Four Tamil Poets'". Harper Broadcast (in ஆங்கிலம்). HarperCollins. 2015-07-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. Mohanakrishnan, Ramani (24 December 2017). ""கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்" #RememberingPeriyar". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "'ஆண்மை என்ற வார்த்தையை அழித்தெறியுங்கள்!' - சீறும் கவிஞர் மாலதி மைத்ரி". Vikatan. 22 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_மைத்திரி&oldid=3757396" இலிருந்து மீள்விக்கப்பட்டது