மால்கம் டேர்ன்புல்

மால்கம் பிளை டேர்ன்புல் (Malcolm Bligh Turnbull, பிறப்பு: 24 அக்டோபர் 1954) ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 29-வது ஆத்திரேலியப் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் 2015 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு முதல் சிட்னியின் வென்ட்வர்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

மால்கம் டேர்ன்புல்
Malcolm Turnbull

நா.உ
Malcolm Turnbull PEO (cropped).jpg
ஆத்திரேலியாவின் 29-வது பிரதமர்
பதவியில்
15 செப்டம்பர் 2015 – 24 ஆகத்து 2018
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் பீட்டர் கொஸ்குரோவ்
துணை வாரன் டிரசு
பார்னபி ஜோய்சு
மைக்கேல் மெக்கோர்மாக்
முன்னவர் டோனி அபோட்
பின்வந்தவர் ஸ்கொட் மொரிசன்
லிபரல் கட்சித் தலைவர்
பதவியில்
14 செப்டம்பர் 2015 – 24 ஆகத்து 2018
துணை ஜூலி பிசொப்
முன்னவர் டோனி அபோட்
பின்வந்தவர் ஸ்கொட் மொரிசன்
பதவியில்
16 செப்டம்பர் 2008 – 1 டிசம்பர் 2009
துணை ஜூலி பிசொப்
முன்னவர் பிரென்டன் நெல்சன்
பின்வந்தவர் டோனி அபோட்
ஊடகத்துறை அமைச்சர்
பதவியில்
18 செப்டம்பர் 2013 – 14 செப்டம்பர் 2015
பிரதமர் டோனி அபோட்
முன்னவர் அந்தோனி அல்பனாசி
பின்வந்தவர் மிட்ச் பிஃபீல்டு
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
16 செப்டம்பர் 2008 – 1 டிசம்பர் 2009
பிரதமர் கெவின் ரட்
துணை யூலி பிசொப்
முன்னவர் பிரெண்டன் நெல்சன்
பின்வந்தவர் டோனி அபோட்
சுற்றுச்சூழல், நீர் வளத்துறை அமைச்சர்
பதவியில்
30 சனவரி 2007 – 3 டிசம்பர் 2007
பிரதமர் ஜோன் ஹவார்ட்
முன்னவர் இயன் கேம்பல்
பின்வந்தவர் பீட்டர் கரெட்
வெண்ட்வர்த் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 அக்டோபர் 2004
முன்னவர் பீட்டர் கிங்
தனிநபர் தகவல்
பிறப்பு மால்கம் பிளை டேர்ன்புல்
24 அக்டோபர் 1954 (1954-10-24) (அகவை 68)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
அரசியல் கட்சி லிபரல்
பிற அரசியல்
சார்புகள்
கூட்டமைப்பு
வாழ்க்கை துணைவர்(கள்)
லூசி இயூசு (தி. 1980)
பிள்ளைகள் 2
பெற்றோர் புரூசு டேர்ன்புல்
கோரல் லான்சுபரி
கல்வி வோக்குலோசு பொதுப் பள்ளி
சிட்னி கிரம்மர் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள் சிட்னி சட்டப் பாடசாலை
பிரேசுனோசு கல்லூரி, ஆக்சுபோர்டு
தொழில் பார் அட் லா
தொழிலதிபர்
அரசியல்வாதி
இணையம் அதிகாரபூர்வ இணையதளம்

சிட்னியில் பிறந்த டேர்ன்புல் சிட்னி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பின்னர் சட்டத்தில் பட்டமும் பெற்றார்.[1][2] ஆக்சுபோர்டு, பிரசெனோசு கல்லூரியில் ரோட்சு புலமைப்பரிசிலில் படித்து குடியுரிமைச் சட்டத்தில் பட்டம் பெற்றார்.[3] அரசியலில் இறங்கும் முன்னர் ஊடகவியலாளர்,[4] வழக்கறிஞர்,[5] முதலீட்டு வங்கியியலாளர், மூலதன முதலீட்டாளர் எனப் பல தொழில்களில் பணியாற்றினார். 1993 முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஆத்திரேலிய குடியரசு இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

ஜோன் அவார்டின் அரசில் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், பின்னர் டோனி அபோட்டின் அரசில் தகவல்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2008 செப்டம்பரில் லிபரல் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2009 நவம்பரில், தொழிற்கட்சி அரசினால் முன்மொழியப்பட்ட கரிம மாசுக் குறைப்புத் திட்டத்தை ஆதரித்தடை அடுத்து, லிபரல் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து இடம்பெற்ற லிபரல் கட்சித் தலைவர் போட்டியில் டோனி அபோட் ஒரு வாக்கால் வெற்றி பெற்ததை அடுத்து டேர்ன்புல் கட்சித் தலைமைப் பதவியை இழந்தார். டேர்ன்புல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2013 செப்டம்பரில் அபொட்டின் அரசில் தகவல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2015 பெப்ரவரி 9 இல் கட்சித்தலைவர் டோனி அபோட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை மால்கம் டேர்ன்புல் கொண்டு வந்தார். இது 61:31 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.[6] அதன் பின்னர் 2015 செப்டம்பர் 14 இல் தான் கட்சித் தலைமைக்குப் போட்டியிடப்போவதாக டேர்ன்புல் அறிவித்தார். உடனடியாக அவர் தனது அமைச்சர் பதவியையும் துறந்தார்.[7] அபோட் "நாட்டுக்குத் தேவையான பொருளாதாரத் தலைமைக்கு உகந்தவராக இல்லை" எனவும், "மக்களின் அறிவுக்கூர்மையை மெச்சும் ஒரு தலைவரே" லிபரல் கட்சிக்குத் தேவையென மால்கம் டேர்ன்புல் கூறினார்.[8][9] அன்றிரவு நடைபெற்ற கட்சித் தலைமைப்பதவிக்கான வாக்கெடுப்பில் டேர்ன்புல் 54:44 வாக்குகளால் வெற்றி பெற்று லிபரல் கட்சித் தமைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இதனை அடுத்து மால்கம் டேர்ன்புல் 2015 செப்டம்பர் 15 இல் ஆத்திரேலியாவின் 29வது பிரதமராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார்.[11][12]

2018 ஆகத்து மாதத்தில் பீட்டர் டட்டன் தலைமையில் ஆளும் லிபரல் கட்சியின் பழமைவாதிகளினால் பிரதமர் டேர்ன்புல் ஆட்சிக் கவிழ்ப்பு சவாலை எதிர் கொண்டார். டேர்ன்புல் இச்சவாலை முறியடித்தாலும்,[13][14] அவருக்கு எதிரான சர்ச்சைகள் கட்சியில் அதிகரித்த நிலையில், கட்சித் தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது.[15] போட்டியில் இருந்து டேர்ன்புல் விலகிக் கொண்டார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 2018 ஆகத்து 24 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஸ்கொட் மொரிசன், பீட்டர் டட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் யூலி பிசொப் ஆகியோர் போட்டியிட்டனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஜூலி பிஷொப் விலகியதை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மொரிசன் பீட்டர் டட்டனை எதிர்கொண்டு 45:40 வாக்குகள் பெற்று கட்சித் தலைவராகவும், ஆத்திரேலியாவின் 30-வது பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16] இதனை அடுத்து, இதே நாளில் மால்கம் டேர்ன்புல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.[17]

மேற்கோள்கள்தொகு

 1. Fell, Liz (2011). "Malcolm Turnbull: A feisty interview with the Shadow Minister". Telecommunications Journal of Australia 61 (1): 2.1–2.10. http://tja.org.au/index.php/tja/article/view/191. 
 2. University of Sydney(16 செப்டம்பர் 2013). "University of Sydney welcomes alumni to Cabinet". செய்திக் குறிப்பு.
 3. "Rhodes scholars". University of Sydney.
 4. "The rise and rise of Malcolm Turnbull". The Sydney Morning Herald. 16 September 2008. http://www.smh.com.au/news/national/the-rise-and-rise-of-malcolm-turnbull/2008/09/16/1221330800769.html. 
 5. Ferguson, Sarah (25 ஆகத்து 2008). "My Brilliant Career" (transcript). Four Corners (ஏபிசி). http://www.abc.net.au/4corners/content/2008/s2346015.htm. பார்த்த நாள்: 10 September 2008. 
 6. ABC News 9 February 2015. Accessed 9 February 2015.
 7. "Liberal leadership: Tony Abbott confident he will beat Malcolm Turnbull in ballot". ஏபிசி. 15 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Turnbull and Bishop request Liberal Party leadership ballot". ஏபிசி. 2015-09-14 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Turnbull demands leadership spill". 2015-09-14 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Liberal leadership spill: Malcolm Turnbull to become prime minister after toppling Tony Abbott". ஏபிசி. 15 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Malcolm Turnbull sworn in as Australia's 29th Prime Minister". ABC News. 15 செப்டம்பர் 2015. 15 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
 12. Dan Conifer and James Glenday (15 செப்டம்பர் 2015). "Malcolm Turnbull to be sworn in as PM after ousting Tony Abbott as Liberal leader". 15 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Live: Turnbull sees off Dutton challenge, but leadership turmoil to continue". 21-08-2018. 21-08-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 14. "Dutton resigns after Turnbull survives Liberal leadership spill 48-35". 21-08-2018. 21-08-2018 அன்று பார்க்கப்பட்டது – www.theguardian.com வழியாக. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 15. "Peter Dutton Has Delivered A Petition To Turnbull Demanding A Party Meeting". hit network!. 2018-08-24. https://www.hit.com.au/news/national/peter-dutton-has-delivered-a-petition-to-turnbull-demanding-a-party-meeting. 
 16. "Scott Morrison wins Liberal party leadership spill". Nine News. 24-08-2018. https://www.9news.com.au/2018/08/23/13/57/five-things-you-need-to-know-about-scott-morrison. பார்த்த நாள்: 24-08-2018. 
 17. "Turnbull attacks 'wreckers' Abbott and Dutton as he leaves office". The Guardian. 24-08-2018. https://www.theguardian.com/australia-news/live/2018/aug/24/liberal-spill-malcolm-turnbull-peter-dutton-scott-morrison-liberal-spill-politics-parliament-live. பார்த்த நாள்: 24-08-2018. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_டேர்ன்புல்&oldid=3434993" இருந்து மீள்விக்கப்பட்டது