முதஸ்ஸர் நசார்
முதஸ்ஸர் நசார் (Mudassar Nazar, பிறப்பு: ஏப்ரல் 6. 1956), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் பாக்கித்தான் மற்றும் இங்கிலாந்து உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தனது ஒய்விற்குப்பிறகு துடுப்பாட்ட நிருவாக அதிகாரியாக இவர் செயல்பட்டார். குறிப்பாக 1993 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படார்.மேலும் கென்ய துடுப்பாட்ட அணியிலும் இவர் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இவர் 76 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 122 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 இலிருந்து 2001 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.இவர் லாகூர் , பஞ்சாபில் பிறந்தார்.
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], சனவரி 7 2006 |
தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு1976 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 24 இல் அடிலெய்டில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 45 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து கில்மாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 64 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்தார்.இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[1] 1982 -1983 ஆம் ஆண்டுகளில் ஐதராபாத்து இந்தியாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரும் மியான் தத்தும் இணைந்து 451 ஓட்டம்ங்கள் சேர்த்தனர். இதன்மூலம் 3 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும்சாதனை படைத்தனர்.[2] இதில் 557 நிமிடங்கள் களத்தில் இருந்து நூறு ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் மிக மெதுவாக நூறு ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார்.[3]
இறுதிப் போட்டி
தொகு1989 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . பெப்ரவரி 24 இல் ஓக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 13 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்து ஹாட்லீயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 7 ஓட்டங்களை விட்டுகொடுத்தார். 1 ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.நியூசிலாந்து அணி பாலோ ஆன் ஆனது. பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இதில் 8 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார்.[4]
ஒருநாள் போட்டிகள்
தொகு1977 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்தது. டிசம்பர் 23, ஷஹிவாலில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 1 ஒவர் வீசி 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 9.00 ஆகும்.இதில் 51 பந்துகளில்21 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இங்கிலாந்து அணி 3 இலக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 இலக்குகள்
தொகு# | எண்ணிக்கை | போட்டி | எதிரணி | அரங்கம் | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 6/32 | 25 | இங்கிலாந்து | இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் | இலண்டன் | இங்கிலாந்து | 1982 |
சான்றுகள்
தொகு- ↑ "1st Test, Pakistan tour of Australia at Adelaide, Dec 24-29 1976 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
- ↑ "Wisden – The Indians in Pakistan, 1982–83". Wisden. ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.
- ↑ "Records | Test matches | Batting records | Slowest hundreds | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283006.html.
- ↑ "3rd Test, Pakistan tour of New Zealand at Auckland, Feb 24-28 1989 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28