முன் சம்பா (நெல் பருவம்)

குளிர் காலமான முன் சம்பாப் பருவம் (Early Samba Season) வேளாண் வழக்கு முன் சம்பாப் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். சூன் - சூலை (தமிழ்: ஆனி - ஆடி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், நவம்பர் - டிசம்பர் (தமிழ்: கார்த்திகை - மார்கழி) மாதங்களில் முடிவடைகிறது.[1]

130 – 135 நாட்களைக் கொண்ட இந்த முன் சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

பருவ அட்டவணை

தொகு
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
சூலை - ஆகத்து 130 – 135 மத்தியகாலம், மற்றும் நீண்டகாலம் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கூடலூர், விழுப்புரம், மதுரை, தேனி, ராமநாதபுரம், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்கள்.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்_சம்பா_(நெல்_பருவம்)&oldid=2480971" இலிருந்து மீள்விக்கப்பட்டது