முருகன் அசுவின்

இந்திய துடுப்பாட்டக்காரர்

முருகன் அசுவின் (Murugan Ashwin பிறப்பு: செப்டம்பர் 8, 1990) இவர் எழுத்தாளர் முருகனின் மகன் ஆவர். ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் இவர் ரஞ்சிக் கோப்பைத் தொடர்களில் தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.[1] வலது கை மட்டையாளரும் இடதுகை கூக்ளி பந்துவீச்சாளருமான இவர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டெல்லி டேர்டெவில்ஸ், திண்டுக்கல் டிராகன்ச், கிங்சு லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்சு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார்.

முருகன் அசுவின்
அசுவின் 2019-20 விஜய் கசாரே போட்டியின் போது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முருகன் அசுவின்
பிறப்பு8 செப்டம்பர் 1990 (1990-09-08) (அகவை 33)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–தற்போதுவரைதமிழ்நாடு
2016ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
2017டெல்லி டேர்டெவில்ஸ்
2018ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2019–2020கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅ இ20
ஆட்டங்கள் 3 8 44
ஓட்டங்கள் 1 33 77
மட்டையாட்ட சராசரி 8.25 7.70
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 1* 12* 34*
வீசிய பந்துகள் 402 260 911
வீழ்த்தல்கள் 1 6 44
பந்துவீச்சு சராசரி 246.00 49.16 25.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/176 3/38 3/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 2/– 12/–
மூலம்: Cricinfo, 4 மே 2018

டிசம்பர் 11, 2015 ஆம் ஆண்டில் தனது முதல் பட்டியல் அ போட்டிகளில் விளையாடினார். 2015- 16 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே வாகையாளர் தொடரில் இவர் அறிமுகமானார்.[2] 2015-16 ஆம் ஆண்டிற்கான சையது முஸ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் சனவரி 2, 2016 அன்று தனது முதல் இருபது 20 போட்டியில் விளையாடினார்.[3]

2016 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் இவரை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்சு 4.5 கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது. அவரின் அடிப்படைத் தொகை 10 இலட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் சுமார் 45 மடங்கு அதிக விலைக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டார்.[4] 2017 இல் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை 1 கோடி ரூபாய்க்கு விளையாட ஏலத்தில் எடுத்தது.[5]

2018 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இவர் விளையாடினார்.[6] 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தின்போது இவர் கிங்சு பெவன் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.[7][8]

உள்ளூர்ப் போட்டிகள் தொகு

இவர் எழுத்தாளர் முருகனின் மகன் ஆவர் .2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் அறிமுகமானார். நவம்பர் 2 இல் பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஒடிசா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ துடுப்பாட்டம் தொகு

2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே துடுப்பாட்டத் தொடரில் இவர் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 11, 2015 கட்டாக்கில்  அ பிரிவில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இவர் தமிழ்நாடு மாநில அணி சார்பில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் 2 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எடுதுவ்ம் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் பந்துவீச்சில் 7.2 ஓவர்களை வீசி 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மாநில அணி 26 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

இருபது20 தொகு

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி தொடரில் இவர் இருபது20  போட்டிகளில் அறிமுகமானார். சனவரி 2, 2016 நாக்பூரில்   அ பிரிவில் அரியானா மாநிலத் துடுப்பாட்ட  அணிக்கு எதிரான போட்டியில் இவர் தமிழ்நாடு மாநில அணி சார்பில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மாநில அணி 9 இலக்குகளால் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

2019 இந்தியன் பிரீமியர் லீக்கில் மொகாலியில் நடைபெற்ற 55 வது போட்டியில் இவர் சென்னை சூப்பர் கிங்ச் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார். அதில் 3 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற வில்லை. இந்தப் போட்டியில் கிங்சு பெவன் பஞ்சாப் அணி 6 இலக்குகளால் வெற்றி பெற்றது.

சான்றுகள் தொகு

  1. > name="Bio">"Murugan Ashwin". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
  2. name="ListA">"Vijay Hazare Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Hyderabad, Dec 11, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
  3. name="T20">"Syed Mushtaq Ali Trophy, Group A: Haryana v Tamil Nadu at Nagpur, Jan 2, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  4. name="IPL2016">"List of players sold and unsold at IPL auction 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
  5. name="IPL">"List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  6. name="IPL2018">"List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  7. >"IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  8. >"IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.

வெளியிணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகன்_அசுவின்&oldid=3850734" இலிருந்து மீள்விக்கப்பட்டது