மேற்கிந்தியத்தீவுகளின் பல்கலைக்கழகம்
மேற்கிந்தியத்தீவுகளின் பல்கலைக்கழகம் (The University of the West Indies (சுருக்கமாக:UWI), [2][3]கரிபியக் கடலில் அமைந்த 18 மேற்கு இந்தியத் தீவு நாடுகளில் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் பிராந்தியப் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இது 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் 5 வளாகங்களில் ஏறத்தாழ 50,000 மாணவர்களும், 1200 பேராசிரியர்களும் உள்ளனர், இப்பல்கலைகழகத்தின் தலைமை வளாகம் ஜமைக்கா தீவின் மோனா நகரத்தில் உள்ளது[4] இதன் பிற நான்கு வளாகங்கள் பார்படோசு, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அன்டிகுவா மற்றும் பார்படோசுவில் திறந்தவெளி பல்கலைக்கழக வளாகம் உள்ளது.[5]
குறிக்கோளுரை | மேற்கில் இருந்து எழும் ஒளி | |||||
---|---|---|---|---|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "A Light Rising From The West" | |||||
வகை | பிராந்திய பொதுப்பல்கலைக்கழகம் | |||||
உருவாக்கம் | 1948 | |||||
வேந்தர் | முனைவர். டோட்ரிஜ் மில்லர் | |||||
துணை வேந்தர் | ஹிலாரி பெக்கீஸ் | |||||
கல்வி பணியாளர் | 1,200 | |||||
மாணவர்கள் | ஏறத்தாழ 50,000 (5 வளாகங்கள் சேர்த்து)[1] | |||||
வளாகம் | மோனா, ஜமைக்கா (தலைமையிடம்) | |||||
நிறங்கள் | ||||||
நற்பேறு சின்னம் | கூழைக்கடா | |||||
சேர்ப்பு | கரிபிய சமுதாயம் | |||||
இணையதளம் | UWI Regional Headquarters UWI Cave Hill UWI St. Augustine UWI Mona UWI Open Campus UWI Five Islands Campus |
மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள நாடுகளின் பொதுநலவாயம் அல்லது பிரித்தானியவின் கடல் கடந்த பகுதிகளான கீழ்கண்ட நாடுகள் அல்லது பகுதிகளின் மாணவர்கள் மட்டும் இப்பல்கலைக்கழகத்தில் சேரத் தகுதியானவர்கள்.
தகுதி பெற்ற நாடுகள் மற்றும் பிரித்தானியாவின் தீவுகள்
தொகுவளாகங்கள்
தொகுமேற்கிந்தியத்தீவுகளின் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள்:
நிறம் | வளாகம் | நாடு | நிறுவிய ஆண்டு |
---|---|---|---|
மோனா | ஜமைக்கா | 1948 | |
புனித ஆஸ்டின் | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1960 | |
குகை மலை | பார்படோசு | 1963 | |
திறந்தவெளி பல்கலைக்கழக வளாகம் | நிதி வழங்கும் 16 தீவு நாடுகளில் மட்டும் | 2007 | |
ஐந்து தீவுகள் | அன்டிகுவாவும் பர்பியுடாவும் | 2019 |
படிப்புகள்
தொகுஇப்பல்கலைக்கழக வளாகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளில் கலை, சமூக அறிவியல், வணிகம், நிர்வாகம், அறிவியல், வேளாண்மை, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் ஆங்கில மொழியில் கற்றுத்தரப்படுகிறது.
குகை மலை வளாகம், பார்படோசு [6] | ஐந்து தீவுகள் வளாகம், அன்டிகுவாவும் பர்பியுடாவும் | மோனோ வளாகம், ஜமைக்கா[7][8] | புனித அகஸ்டின் வளாகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ[9] |
---|---|---|---|
மனிதநேயக் கல்வி & கல்வியியல் | மனிதநேயக் கல்வி & கல்வியியல் | மனிதநேயக் கல்வி & கல்வியியல் | மனிதநேயக் கல்வி & கல்வியியல் |
சட்டம் | சட்டம் | சட்டம் | |
மருத்துவ அறிவியல் | சுகாதாரம் & நடத்தை அறிவியல்கள் | மருத்துவ அறிவியல் | மருத்துவ அறிவியல் |
அறிவியல் & தொழில்நுட்பம் | மேலாண்மை, அறிவியல் & தொழிநுட்பம் | அறிவியல் & தொழிநுட்பம் | அறிவியல் & தொழிநுட்பம் |
சமூக அறிவியல் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | |
விளையாட்டுகள் | விளையாட்டுகள் | விளையாட்டுகள் | |
பொறியியல் | பொறியியல் | ||
உணவு & வேளாண்மை | |||
கலாச்சாரம், படைப்பு மற்றும் நிகழ்த்தும் கலைகள் |
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ^α Serves the 16 campus funding countries.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The University of the West Indies". THE World University Rankings. Times Higher Education. பார்க்கப்பட்ட நாள் 29 December 2019.
- ↑ "History of the UHWI - University Hospital of the West Indies". uhwi.gov.jm.
- ↑ "Grading Scale".
- ↑ "Our Partners | International Students Office". www.mona.uwi.edu.
- ↑ University of the West Indies Open Campus
- ↑ "International Office | the University of the West Indies at Cave Hill, Barbados - Partners".
- ↑ "Our Partners | International Students Office".
- ↑ "Jamaica < MD Program".
- ↑ "Partner Institutions | UWI International Office".