மைசூர்-ஊட்டி சாலை

மைசூர்-ஊட்டி சாலை (Mysore-Ooty Road) கர்நாடகாவின் மைசூரில் தொடங்கி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகமண்டலத்தில் முடியும் ஒரு தென்னிந்திய சுற்றுலா பாதையாகும். இதை மைசூர்-உதகமண்டலம் சாலை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இரு வழிகளும் கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்கா மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை தேசிய பூங்கா வழியாக செல்கின்றன. . •சிறிய வாகனங்கள் மைசூர்-தெப்பக்காடு-மசினகுடி-கல்லட்டி-ஊட்டி சாலை வழியாக 136 கிலோமீட்டர் தொலைவை கடக்கின்றன. •பேருந்துகள் மற்றும் லாரிகள் 183 நீண்ட பாதையில் செல்கின்றன மைசூர்-தெப்பக்காடு- கூடலூர்-பைகாரா-ஊட்டி சாலை வழியாக 183 கிலோமீட்டர் தொலைவை கடக்கின்றன

மைசூர்-ஊட்டி சாலை
வழித்தட தகவல்கள்
நீளம்:183 km (114 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
1799 – present
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மைசூர், கர்நாடகா
East முடிவு:உதகமண்டலம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு, கர்நாடகா
முக்கிய நகரங்கள்:கூடலூர் ]
நெடுஞ்சாலை அமைப்பு
கர்நாடகா தமிழ்நாடு எல்லை

ஊட்டி நகரம் சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பெங்களுரு நகரிலிருந்து 278 கிலோமீட்டர் தொலைவிலும், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக சென்னையிலிருந்து 535 கிலோமீட்டர் தொலைவிலும்,, கோவையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மைசூரிலிருந்து.155 கிலோமீட்டர் தொலைவிலும் ஊட்டி நகரம் உள்ளது. ஊட்டி நகரம் தேசிய நெடுஞ்சாலை 181 இல் அமைந்துள்ளது. மற்றும் முக்கியமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐந்து நீலகிரி மலை சாலைகள் வழியாகவும் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு பேருந்து சேவைகள் மாநிலத்தின் முக்கியமான நகரங்களையும் , மாவட்டத்திற்குள் அருகிலுள்ள நகரங்களான குன்னூர், கோத்தகிரி, மற்றும் கூடலூர் .ஆகிய நகரங்களையும் இணைக்கின்றன.

பந்திப்பூர் தேசியப் பூங்கா தொகு

1974 ஆம் ஆண்டில் பந்திப்பூர் தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்த தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசியப் பூங்காவானது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி மைசூர் அரசரின் தனிப்பட்ட வேட்டைக் களமாக இருந்தது.[1] 1941 ஆம் ஆண்டிலேயே இப்பகுதி வேணுகோபால் வனவிலங்குப் பூங்கா என்ற பெயரால் அறியப்பட்டது. தமிழ்நாட்டின் முதுமலையும் கேரளாவின் வயநாடும் இதற்கு எல்லைகளாக உள்ளன.

பந்திப்பூர் தேசியப் பூங்காவானது பல்வேறு வகையான வன விலங்குகள் வாழும் இடமாக உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்களின் வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் மரணமடைகின்றன.[2] எனவே இங்கு வாகனங்கள் செல்வதற்குக் கட்டுப்பாடு உள்ளது.[3]

பந்திப்பூர் பூங்கா 874 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் தொலைவில் தக்காண பீடபூமியும் மேற்குத் தொடர்ச்சி மலையும் இணையும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 680 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாய் பூங்காவானது பல்லுயிரிகளுக்கும் ஒரு முக்கிய வாழ்விடமாய் உள்ளது.

முதுமலை தேசிய பூங்கா தொகு

முதுமலை தேசிய பூங்கா அல்லது 'முதுமலை வனவிலங்கு காப்பகம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 இல் தொடங்கப்பட்ட இக்காப்பகமே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும். தமிழ்நாட்டின் கொங்கு மண்டலமான கோயம்புத்தூரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பூங்கா புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மசினகுடி, தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெல்லகோட்டா என்ற ஐந்து மலைத்தொடர்களாக இச்சரணாலயம் பிரிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட முதுமலை சரணாலயத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன. மயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, பருந்து, வல்லூறு போன்ற குறைந்த பட்சமாக 266 பல்வேறு வகையான பறவைகள் இங்கு உள்ளன.[4]

 
முதுமலை புலிகள் காப்பகம்

தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956 ஆம் ஆண்டு 295 கிமீ2 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கிமீ2 பரப்பளவை அடைந்துள்ளது. மேலும் இந்த தேசியப் பூங்கா யுனெசுகோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Bandipur National park". Mysore.nic.in. Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
  2. "Taming traffic in Bandipur National Park". Wildlifetrustofindia.org. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
  3. "Night traffic ban at Bandipur extended from 9 to 12 hours". Deccanherlad.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
  4. "Mudumalai Wildlife Sanctuary". Conservation database. Bangalore: Ashoka Trust for Research in Ecology and the Environment Eco-Informatics Centre. Archived from the original on 2009-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-11-09.
  5. UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris. retrieved 4/20/2007 World Heritage sites, Tentative lists
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்-ஊட்டி_சாலை&oldid=3568971" இலிருந்து மீள்விக்கப்பட்டது