மைதிலி தாக்கூர்

இந்தியப் பாடகி

மைதிலி தாக்கூர் (Maithili Thakur) (பிறப்பு 25 ஜூலை 2000) இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் கிராமிய இசையில் பயிற்சி பெற்ற ஓர் இந்திய பின்னணி பாடகியாவார். இவர் இந்தி, பெங்காலி, மைதிலி, உருது, மராத்திய மொழி|மராத்தி]], போச்புரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் அசல் பாடல்கள், இசைத் தொகுப்புகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற இசையை பாடியுள்ளார்.[1]

மைதிலி தாக்கூர்
பிறப்புதனு
25 சூலை 2000 (2000-07-25) (அகவை 24)
மதுபனி, பிகார், இந்தியா
பணி
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
ஜனவரி 2012– தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

மைதிலி , பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டியில் மைதில் இசைக்கலைஞரான பண்டிட் ரமேஷ் தாக்கூர் மற்றும் பாரதி தாக்கூர் ஆகியோருக்கு புது தில்லியில் பிறந்தார்.[2] சீதையின் பெயராலும் தன்னுடைய தாய்மொழியின் பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். தனது இரு சகோதரர்களான ரிஷவ் மற்றும் அயாச்சி ஆகியோருடன் அவர்களது தாத்தா மற்றும் தந்தையால் மைதிலி நாட்டுப்புற, இந்துஸ்தானி இசை, ஆர்மோனியம் மற்றும் கைம்முரசு இணை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். சுமார் 6 வயதில் தனது மகளின் திறனை உணர்ந்த இவரது தந்தை, சிறந்த வாய்ப்புகளுக்காக புது தில்லியில் உள்ள துவாரகாவிற்கு இடம் பெயர்ந்தார். இவரும் இவரது சகோதரர்களும் பால் பவன் சர்வதேச பள்ளியில் படித்தனர், அங்கு இவர்கள் பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பள்ளிக்காக வென்றனர்.

மைதிலி, சிறுவயதிலிருந்தே பாட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது 4 வயதில் தனது தாத்தாவிடம் இயைக் கற்கத் தொடங்கினார்.[3] 10 வயதில், ஜாக்ரன்ஸ் மற்றும் பிற இசை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினார்.[4]

இசை வாழ்க்கை

தொகு

2011 இல், ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லிட்டில் சாம்ப்ஸ் என்ற பாடல் போட்டி தொலைக்காட்சி தொடரில் தோன்றினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சோனி டிவியில் ஒளிபரப்பான இந்தியன் ஐடல் ஜூனியரில் போட்டியிட்டார். 2016 இல் "ஐ ஜீனியஸ் யங் சிங்கிங் ஸ்டார்" போட்டியில் வென்றார். அதைத் தொடர்ந்து யா ரப்பா ( யுனிவர்சல் மியூசிக் ) என்ற தனது இசைத் தொகுப்பைத் தொடங்கினார்.[5]

2017 ஆம் ஆண்டில், ரைசிங் ஸ்டாரின் சீசன் 1 இல், ஒரு தொலைக்காட்சி பாடும் போட்டியின் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், நிகழ்ச்சியின் முதல் இறுதிப் போட்டியாளராக வந்தார். ஓம் நம சிவாய என்ற பாடலைப் பாடி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்தார்.[6] இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[7]

2019 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தால் மதுபனியின் விளம்பரத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.[1][8] இவரது சகோதரகள் ரிஷவ் கைம்முரசு இணைக் கலைஞராகவும், அயாச்சி ஒரு பாடகராகவும் உள்ளனர்.[1]

மைதாலி தாக்கூர் தனது யூடியூப் சேனலில் தனது இரண்டு இளைய சகோதரர் ரிஷவ் மற்றும் அயாச்சியுடன் இணைந்து துளசிதாசரின் புகழ்பெற்ற ராமசரிதமானஸைப் பாடுகிறார்.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Khurana, Suanshu (29 April 2019). "Vocalist Maithili Thakur and her three brothers on being Election Commission's brand ambassadors in Madhubani". The Indian Express (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  2. "बिहार की ये बेटी रातों रात बन गई सिंगिंग सेंसेशन, मात्र 18 वर्ष की उम्र में फेसबुक ने बनाया सुपरस्टार". Amar Ujala. 10 October 2018. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  3. "Maithili Thakur - Rising Star". Biographya. 11 March 2022.
  4. "The hard road to success for YouTube star Maithili Thakur". IndianSpice (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-04. Archived from the original on 2021-08-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  5. "Max Life Insurance launches 3 albums for the Winners and Runner's Up of i-genius Young Singing Stars Season 2". The Hans India (in ஆங்கிலம்). 14 September 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  6. "Rising Star: Maithili Thakur is the first finalist; who'll ultimately win the show?". India Today. 17 April 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  7. Bhatt, Shephali (4 November 2019). "How life changes for internet celebrities – good, better, and sometimes worse". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/how-life-changes-for-people-turned-internet-celebrities-for-good-better-and-sometimes-worse/articleshow/66490971.cms. 
  8. "गायिका मैथिली ठाकुर बनीं मधुबनी की ब्रांड एंबेस्डर, निर्वाचन आयोग ने लिया फैसला". Zee News Hindi (in ஆங்கிலம்). 3 December 2018. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_தாக்கூர்&oldid=3944619" இலிருந்து மீள்விக்கப்பட்டது