யசுட்டிசியா சிம்ப்ளக்சு
யசுட்டிசியா சிம்ப்ளக்சு (தாவர வகைப்பாட்டியல்: Justicia simplex') என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “ரோசுடெல்லுலேரியா” பேரினத்தின், ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1825 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இந்தியா, சீனா, வங்க தேசம், கிழக்கு இமயமலைப் பகுதிகள், நேபாளம் போன்ற இடங்களின் அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. புண்களை குணப்படுத்தும் மூலிகையாக பாரம்பரிய மருத்துவத்திலும், ஆய்வுகளிலும் பயனாகிறது.[2]மரபியல் ஆய்வு அடிப்படையில் நடந்த ஆய்வுகளின் படி, வகைப்பாட்டியலில் இதன் இடமும், பெயரும் (Rostellularia diffusa var. prostrata) மாற்றப்பட்டுள்ளது.
யசுட்டிசியா சிம்ப்ளக்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. simplex
|
இருசொற் பெயரீடு | |
Justicia simplex D.Don | |
வேறு பெயர்கள் | |
Rostellularia mollissima |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Justicia simplex". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Justicia simplex". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Promising anticancer activities of Justicia simplex D. Don. in cellular and animal models