யாழ்பறவை

(யாழ் பறவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாழ்பறவை (Lyrebird) ஆத்திரேலியா நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட நிலத்தடியில் கூடு கட்டி வாழும் ஓர் அழகான பறவை இனம் ஆகும். இப்பறவை மெனுரா (menura) என்ற பேரினத்தையும், மொனொரிடே (menuridae) என்ற குடும்பத்தையும் சார்ந்தது. இது எந்த சத்தத்தையும் கேட்டு அதேபோல் ஒலி எழுப்பும் சிறப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இவற்றுள் ஆண் பறவையின் குரல் அழகான ஒலியுடனும், வால் பகுதி யாழ் போன்றும் காணப்படுகிறது. இப்பறவை ஆத்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அதிகமாக வாழுகிறது.

யாழ்பறவை
Lyrebird
புதைப்படிவ காலம்:ஆரம்ப மயோசீன் காலம் முதல் இன்று வரை
மீச்சிறப்பான யாழ்பறவை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
மெனுரிடே

லெசன், 1828
பேரினம்:
மெனூரா

லேத்தம், 1801
இனம்
  • Menura novaehollandiae
  • Menura alberti
  • Menura tyawanoides

அறிவியல் பூர்வமாக இப்பறவை பற்றிய தகவல்களை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட லண்டன் லீனியன் சமூகத்தைச் சார்ந்த மேஜர் ஜெனரல் தாமஸ் டேவிஸ் என்பவர் 1800 ஆம் ஆண்டு வெளியிட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Davies, Thomas (4 November 1800). "Description of Menura superba, a Bird of New South Wales" . Transactions of the Linnean Society. Vol. 6. London (published 1802). pp. 207–10.
  2.    "Lyre-Bird". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மெனுரிடே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்பறவை&oldid=3289549" இலிருந்து மீள்விக்கப்பட்டது