சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்

(ரங்கநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரங்கநாதர் கோயில் (Ranganthaswamy temple) கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம், காவேரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் எனும் தீவில் அமைந்த இக்கோயில் பெருமாளுக்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி. இக்கோயிலின் தீர்த்தமாக காவிரியும், கடைபிடிக்கப்படும் ஆகமமாக பாஞ்சராத்ரமும் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோயில்
வைணவக் கோயில்
ரங்கநாதர் கோயில் (பொ.ஊ. 984), ஸ்ரீரங்கப்பட்டினம், மாண்டியா மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்மாண்டியா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ரங்கநாதர் கோயில்

வரலாறு

தொகு

மேலைக் கங்கர் குல அரச படைத்தலைவர் திருமலைய்யா என்பவரால், பொ.ஊ. 984இல் இக்கோயில் கட்டப்பட்டது. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை இராமானுஜருக்கு தானமாக வழங்கினார்.

கோயில்

தொகு

கோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

கோவில் அமைவிடம்
ரங்கநாதர் கோயில் ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் திருப்பேர் நகர் என்ற கோவிலடி (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் மயிலாடுதுறை

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • Michell, George (1995) [1995]. The New Cambridge History of India, Volumes 1-6. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521 441102.
  • Dalal, Roshen (2011). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. pp. 339–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • "Sri Ranganathaswamy Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 21 Dec 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 21 Dec 2013.