ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம்


ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Rantau Panjang Railway Station மலாய்: Stesen Keretapi Rantau Panjang) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டம், ரந்தாவ் பாஞ்சாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் ரந்தாவ் பாஞ்சாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. அத்துடன் இந்த நிலையம் கோத்தா பாரு, குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது.

ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம்
Rantau Panjang Railway Station}
(முன்னாள் சேவை)
தாய்லாந்து தொடருந்து சேவை
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ரந்தாவ் பாஞ்சாங், பாசிர் மாஸ் மாவட்டம், கிளாந்தான், மலேசியா
ஆள்கூறுகள்6°01′12″N 101°58′33″E / 6.02000°N 101.97583°E / 6.02000; 101.97583
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடை1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1921
மறுநிர்மாணம்2008
சேவைகள்
முந்தைய நிலையம்   ரந்தாவ் பாஞ்சாங்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
முடிவு
<<<
பாசிர் மாஸ்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
பாசிர் மாஸ்
>>>
ஜொகூர் பாரு
அமைவிடம்
Map
ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம்
(தாய்லாந்து சுங்கை கோலோக் தொடருந்து நிலையத்திற்கான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது)

இந்த நிலையம் கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தின் முதன்மைச் சாலையான ஜாலான் பெசார் சாலைக்கு அருகே அமைந்துள்ளது. ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டு உள்ளது.

பொது

தொகு

1921-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த நிலையம், பாசிர் மாஸ் நகரத்தில் உள்ள மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ரந்தாவ் பாஞ்சாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது. மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள இரண்டு தொடருந்து எல்லைக் கடப்புகளில் ரந்தாவ் பாஞ்சாங் எல்லைக் கடப்பும் ஒன்றாகும். மற்றொன்று பெர்லிஸ், பாடாங் பெசார் தொடருந்து நிலையம் வழியாக தாய்லாந்து எல்லையைக் கடக்கும் எல்லைக் கடப்பு ஆகும்.

மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங்கில் தற்போது எல்லை தாண்டிய தொடருந்து சேவைகள் எதுவும் இல்லை. ஆர்மனி தொடருந்து பாலத்தின் (Harmony Rail Bridge) தாய்லாந்து நுழைவாயில் தற்போது அரச தாய்லாந்து இராணுவத்தால் மூடப்பட்டுள்ளது.[1]

தாய்லாந்து தொடருந்து சேவை

தொகு

இந்த நிலையம் முன்பு மலாயா தொடருந்து நிறுவனம் மற்றும் தாய்லாந்து தொடருந்து நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் தொடருந்து நிறுவனங்களால் சேவையாற்றப்பட்டது. பின்னர் தாய்லாந்து தொடருந்து நிறுவனத்தின் டீசல் இயந்திர தொடருந்துகள் மலேசியாவின் வாக்காப் பாரு, தும்பாட் நிலையங்கள் வரை சேவைகளில் ஈடுபட்டன.

தாய்லாந்து தொடருந்து சேவை உள்நாட்டு கேடிஎம் இண்டர்சிட்டி சேவையைப் பாதித்தால் தாய்லாந்து தொடருந்து சேவைகள் 1978-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டன. தாய்லாந்து தொடருந்துகள் தற்போது மலேசியாவிற்குள் வருவது இல்லை.[2][3]

இந்த நகரம் மலேசியா - தாய்லாந்து எல்லையைக் கடக்கும் ரந்தாவ் பாஞ்சாங் / சுங்கை கோலோக் பாலத்திற்கு மிக அருகில் உள்ளது.[4]

தொடருந்து சேவைகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Three Southern Border Provinces Tour: Red Zones and Forgotten Ways
  2. Nguyen, James Morris and Son (2019-05-05). "Plan pushed to reopen busy rail link from Thailand to Malaysia closed 41 years ago to boost trade connectivity". Thai Examiner (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-21.
  3. "ThaiRailways.com - History". www.thairailways.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-21.
  4. "The KTM Pasir Mas railway station (stesen keretapi Pasir Mas) is located in Kelantan on the East Coast Line (Jungle Line) and is the closest railway station to the Malaysia - Thailand border crossing at Rantau Panjang / Sungai Kolok". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு