ரந்தாவ் பாஞ்சாங்

மலேசியா - தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரம்

ரந்தாவ் பாஞ்சாங், (மலாய்: Rantau Panjang; ஆங்கிலம்: Rantau Panjang; தாய்: รันเตาปันจัง; ஜாவி: رنتاو ڤنجڠ‎) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், பாசிர் மாஸ் மாவட்டத்தில் (Pasir Mas District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ரந்தாவ் பாஞ்சாங்
Rantau Panjang
ரந்தாவ் பாஞ்சாங் நகரம்
ரந்தாவ் பாஞ்சாங் நகரம்
ரந்தாவ் பாஞ்சாங் is located in மலேசியா
ரந்தாவ் பாஞ்சாங்
ரந்தாவ் பாஞ்சாங்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°01′14″N 101°58′09″E / 6.02056°N 101.96917°E / 6.02056; 101.96917
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம்பாசிர் மாஸ்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு17200
மலேசியத் தொலைபேசி எண்+609
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்K

மலேசியா - தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரந்தாவ் பஞ்சாங் நகரின் வடக்குப் பகுதியில் கோலோக் ஆறு ஓடுகிறது. இந்தக் கோலோக் ஆறுதான் தாய்லாந்து; மலேசியா நாடுகளின் எல்லையாகவும் அமைகின்றது.[1]

பொது தொகு

இந்த நகரம் பல்வேறு வகையான விற்பனை பொருட்கள் மற்றும் நினைவு பரிசுப் பொருள்களுக்குப் பிரபலமானது. மலேசியாவின் தாய்லாந்து எல்லைத் தொடர்பான அரசாங்க அலுவலகங்கள் பெரும்பாலும் இங்குதான் உள்ளன.

எல்லைச் சோதனைகள் பிரிவு; பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு; அரச சுங்கப் பிரிவு; அரசு கலால் துறை; குடிவரவுத் துறை; அரச மலேசியக் காவல்துறை போன்றவை உள்ளன. [2]

ரந்தாவ் பாஞ்சாங்கைச் சுற்றிலும் போதைப்பொருள் கடத்தல்; அரிசி கடத்தல்; சர்க்கரை கடத்தல்; மனிதர்கள் கடத்தல் போன்ற கடத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. ரந்தாவ் பாஞ்சாங் சுங்க வரி இல்லாத ஒரு பகுதி. அதனால் பொதுமக்கள் அதிகமாக இங்கு வருகின்றனர்.[2]

நிர்வாகப் பிரிவுகள் தொகு

ரந்தாவ் பாஞ்சாங் நிர்வாக மன்றத்தில் 7 முக்கிம்கள் உள்ளன.

  • பக்காட் (Bakat)
  • குவால் நெரிங் (Gual Nering)
  • லுபோக் கோங் (Lubok Gong)
  • லுபோக் செட்டோல் (Lubok Setol)
  • ரகுமாட் (Rahmat)
  • ரந்தாவ் பாஞ்சாங் (Rantau Panjang)
  • தெலாகா மாஸ் (Telaga Mas)

மேற்கோள்கள் தொகு

  1. "Rantau Panjang & Golok River". Life in Penang, is more than beautiful. 4 September 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-09-07.
  2. 2.0 2.1 "Rantau Panjang and Sungai Kolok are connected by the Rantau Panjang–Sungai Golok Bridge, or more popularly known as the 'Harmony Bridge', which reaches across Sungai Golok". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரந்தாவ்_பாஞ்சாங்&oldid=3420235" இலிருந்து மீள்விக்கப்பட்டது