ராஜபுதன வகுப்பு அழிகலன்

ராஜபுதன வகுப்பு வழிநடத்தப்பட்ட ஏவுகணை அழிகலன்கள் (Rajput class destroyer) ஆனது இந்தியக் கடற்படைக்காக கட்டப்பட்டவை. இவை சோவியத் ஒன்றியத்தின் கசின் வகுப்பு அழிகலன்களின் மாற்றம் செய்யப்பட்ட பதிப்பு ஆகும். அவை கசின்-2 வகுப்பு எனவும் அறியப்படுகின்றன. இந்தக் கப்பல்கள் இந்திய வடிவமைப்பிற்க்கேற்ப கசின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு முன்னாள் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டவை ஆகும்.இந்த வடிவமைப்பு மாற்றம் மூல வடிவமைப்பான உலங்கு வானூர்தி தளத்தை விமான உயர்த்தியாக (flight elevator) மாற்றம், மேலும் மின்னணுவியல் மற்றும் போரிடும் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக 1980களில் ஐந்து கப்பல்கள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் தற்பொழுது இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்ககப்பட்டுள்ளன.

ஐஎன்எஸ் ரன்விஜய் (டி55)
Class overview
பெயர்:ராஜபுதனம்
கட்டியவர்கள்:61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை
பயன்படுத்துபவர்கள்: இந்தியக் கடற்படை
பின்னர் வந்தது:டெல்லி வகுப்பு அழிகலன்
திட்டத்தில்:5
முடிக்கப்பட்டது:5
செயலிலுள்ளது:5
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
வகை:வழிநடத்தப்பட்ட ஏவுகணை அழிகலன்
பெயர்வு:3,950 tons standard,
4,974 tons full load
நீளம்:147 m (482 அடி)
வளை:15.8 m (52 அடி)
Draught:5 m (16 அடி)
உந்தல்:4 x வாயு விசையாழி பொறிகள்; 2 shafts, 72,000 hp
விரைவு:35 knots (65 km/h)
வரம்பு:4,000 mi (6,400 km) at 18 knots (33 km/h)
2,600 மைல்கள் (4,200 km) at 30 knots (56 km/h)
பணிக்குழு:320 (35 அதிகாரிகளையும் சேர்த்து)
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
Navigation; 2 x வோல்கா (நேட்டோ: டான் கே) radar at I-band frequency,
Air; 1 x MP-500 Kliver (NATO: Big Net-A) radar at C-band or 1 x Bharat RAWL (Dutch Signaal LW08) radar at D-band (installed on INS Ranjit),
Air/Surface; 1 x MR-310U Angara (NATO: Head Net-C) radar at E-band,
Communication; Inmarsat,
Sonar; 1 x hull mounted Vycheda MG-311 (NATO: Wolf Paw) sonar, 1 x Vyega MG-325 (NATO: Mare Tail) variable depth sonar
போர்க்கருவிகள்:8 x பிரமோஸ் அதிவேக ஏவுகணைகள்,
1 x 76.2 மிமீ முதன்மைத் துப்பாக்கி,
4 x 30 mm எகே-230 துப்பாக்கிகள் அல்லது 4 x 30 mmஎகே-630எம் துப்பாக்கிகள் (replaced by Barak SAM in some vessels),
2 x S-125M (NATO: SA-N-1) நிலத்திலிருந்து வான் தாக்கும் ஏவுகணையின் இரட்டை twin ஏவுகலன்கள்,
1 x 533 mm PTA 533 quintuple torpedo tube launcher,
2 x RBU-6000நீர்முழ்கி எதிப்பு mortars,
1 x தனுஷ் (ஏவுகணை) (ஐஎன்எஸ் ராஜ்புட் உடன் சேர்க்கப்பட்டது)
காவும் வானூர்திகள்:1 x கேஏ-28 அல்லது எச்ஏஎல் சீடாக் உலங்கு வானூர்தி

பிரமோஸ் அதிவேக ஏவுகணை முறைமை நிறுவப்பட்ட முதல் இந்தியக் கடற்படை கப்பல்கள் ராஜபுதன வகுப்பு அழிகலன்கள் ஆகும். இந்த ஏவுகணை அமைப்பு, இக்கப்பல்களின் நடுக்கால புதுப்பித்தலின் போது நிறுவப்பட்டன. இந்த ஏவுகணை அமைப்பில் எட்டு ஏவுகணைகள் வில் போன்ற ஏவும் அமைப்புடன் உள்ளன. [1]

ஐஎன்எஸ் ரன்விஜய் அழிகலனில் பிரமோஸ் ஏவுகணைகளுக்காக மேம்படுத்தப்பட்ட செங்குத்து ஏவுகலன்கள் நிறுவப்பட்டுள்ளது.[2]

இந்தியக் கடற்படை ராஜபுதன வகுப்பு கப்பல்களின் உந்துவிசையை (propulsion), முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட காவேரி வாயு விசையாழி இயந்திரத்தை கொண்டு மேபடுத்த திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) வாயு விசையாழி ஆராய்ச்சி அமைப்பு இந்த இயந்திரத்தை உருவாக்கி வருகிறது, மேலும் இது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. [3]

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் தொகு

இவ்வகுப்பைச் சேர்ந்த கப்பல்கள் தொகு

 பெயர்   Pennant   உருவாக்குனர்   முதன்மைத் துறைமுகம்   செயல்பாட்டுக்கு வந்தது   நிலைமை 
ஐஎன்எஸ் ராஜ்புட் (டி51) டி51 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை விசாகப்பட்டினம் 30 செப்டெம்பர் 1980 செயல்பாட்டில் உள்ளது
ஐஎன்எஸ் ராணா (டி52) டி52 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை விசாகப்பட்டினம் 28 ஜூன் 1982 செயல்பாட்டில் உள்ளது
ஐஎன்எஸ் ரஞ்சித் (டி53) டி53 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை விசாகப்பட்டினம் 24 நவம்பர் 1983 செயல்பாட்டில் உள்ளது
ஐஎன்எஸ் ரன்வீர் (டி54) டி54 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை விசாகப்பட்டினம் 28 அக்டோபர் 1986 செயல்பாட்டில் உள்ளது
ஐஎன்எஸ் ரன்விஜய் (டி55) டி55 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை விசாகப்பட்டினம் 15 ஜனவரி 1988 செயல்பாட்டில் உள்ளது

மேற்கோள்கள் தொகு

  1. Indian Navy: INS Rajput, 8 Other Warships To Deploy Brahmos Cruise Missiles
  2. "BrahMos all set to cruise into Kerala". Archived from the original on 2007-11-24. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  3. Modified Kaveri Engine to Propel Indian Navy Rajput Class Ships
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபுதன_வகுப்பு_அழிகலன்&oldid=3569722" இலிருந்து மீள்விக்கப்பட்டது