ராஜு நாரிசெட்டி
ராஜு நாரிசெட்டி (Raju Narisetti; பிறப்பு 1966) ஒரு தொழில் முறை பத்திரிகையாளரும் முக்கிய சர்வதேச செய்தித்தாள்களில் முன்னாள் ஆசிரியரும் ஆவார். இவர் 2020 முதல் மெக்கின்சி & நிறுவனத்தில் உலகளாவிய வெளியீட்டு இயக்குநராக பணியாற்றியுள்ளார். [1] ஜூலை 2018 முதல் டிசம்பர் 2019 வரை, கொலம்பியா பலகலைகழகத்தின் இதழியல் பள்ளியில்தொழில்முறை பயிற்சிப் பேராசிரியராகவும், நைட்-பேக்ஹாட் நிதியுதவித் திட்டத்தின் இயக்குநராகவும் இருந்தார். [2] [3] அக்டோபர் 2017 இல், நாரிசெட்டி விக்கிமீடியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டார். [4] உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார் [5]
ராஜு நாரிசெட்டி | |
---|---|
2015இல் பெருகியாவில் நடந்த சர்வதேச ஊடகவியலாளர்களின் திருவிழாவில் ராஜு நாரிசெட்டி | |
பிறப்பு | 26 ஜூன் 1966 ஐதராபாத்து, இந்தியா |
கல்வி | இந்தியானா பல்கலைக்கழகம் |
தொழில்
தொகுநாரிசெட்டி உசுமானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், ஊரக மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும், புளூமிங்டனின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். [2] இவர் டேடன் டெய்லி நியூஸ் என்ற பத்திரிக்கையில் தனது அமெரிக்க வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவில் தி எகனாமிக் டைம்ஸில் பத்திரிகையாளராகத் தொடங்கினார். அங்கு 1991 முதல் 1994 வரை பணியாளர் நிருபராக இருந்தார். [2]
1994 இல் உலகளாவிய ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளின் போக்குகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிருபராக இவர் முதலில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் சேர்ந்தார்; அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில், இவர் அமெரிக்க பதிப்பின் துணை தேசிய ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்; தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஐரோப்பாவின் நிர்வாக ஆசிரியர் (2003-2004) மற்றும் ஆசிரியர் (2004-2006); மற்றும் துணை நிர்வாக ஆசிரியர் (2005-2006) செய்தித்தாளின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகியநாடுகளுக்கு பொறுப்பாகவும் இருந்தார். [2] 2006 முதல் 2009 வரை மின்ட்டின் நிறுவன ஆசிரியராக இருந்த போது அதனை இந்தியாவின் இரண்டாவது பெரிய வணிகப் பத்திரிகையாக வெளிவருவதற்கு உதவினார். இது எச்டி மீடியாவிற்கு சொந்தமானது. இது ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையையும் வெளியிடுகிறது. [2]
2012 இல் தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ( தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் டிஜிட்டல் நெட்வொர்க்கின் தலைவராக) மீண்டும் சேர்வதற்கு முன்பு 2009 முதல் 2012 வரை தி வாஷிங்டன் போஸ்டின் டிஜிட்டல் ஆசிரியராக நாரிசெட்டி இருந்தார். [6] [7] 2013 முதல் 2016 வரை நியூஸ் கார்ப்பரேஷனின் வளர்ச்சி மற்றும் மூலோபாயத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்த இவர், குறிப்பாக ஆசியாவில் புதிய வருவாய் வாய்ப்புகளை வளர்ப்பதற்கு ஊடகக் குழுவிற்கு உதவினார். [8]
செப்டம்பர் 2016 இல் யூனிவிஷன் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து கிஸ்மோடோ மீடியா குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். [9] ஏப்ரல் 2018 வரை இவர் அந்தப் பதவியில் இருந்தார் [10] [11] [12] தி டெய்லி பீஸ்ட்செய்தியின்படி, ஊழியர்களை வெளியேற்றும் நிகழ்வுகளுக்கு மத்தியில் யூனிவிஷனால் வெளியேற்றப்பட்டார்.
சான்றுகள்
தொகு- ↑ "Biz journalist Narisetti joins McKinsey & Co". Talking Biz News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Raju Narisetti பரணிடப்பட்டது 2019-12-23 at the வந்தவழி இயந்திரம், Columbia Journalism School, Columbia University in the City of New York (Accessed: June 6, 2019)
- ↑ "Columbia Journalism Taps Editor and Media Executive Raju Narisetti As Professor of Professional Practice and Director Knight-Bagehot Business Fellowships Program | School of Journalism". journalism.columbia.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2023-07-09. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
- ↑ "On the year where "a very fundamental human right—the right to access information" was challenged: Raju Narisetti, Wikimedia Foundation Board member". Wikimedia Foundation. 10 January 2018. பார்க்கப்பட்ட நாள் 6 June 2019.
- ↑ "Community". The Forum of Young Global Leaders (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
- ↑ Bell, Melissa (20 January 2012). "Raju Narisetti, Post managing editor, to rejoin Wall Street Journal – Ask The Post". The Washington Post.
- ↑ "Narisetti leaves DC to join Wall Street Journal". The Wall Street Journal. 20 January 2012.
- ↑ "Raju Narisetti Named Senior Vice President & Deputy Head of Strategy for New News Corporation". Business Wire. 25 February 2013.
- ↑ "News Corp SVP Raju Narisetti Named Gawker Media CEO". The Daily Beast (in ஆங்கிலம்). 2016-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
- ↑ "Univision Communications Inc Names Raju Narisetti CEO of Gizmodo Media Group". Univision. 2016-09-21. பார்க்கப்பட்ட நாள் 2017-03-15.
- ↑ Stelter, Brian (2016-09-21). "Raju Narisetti named CEO of what was Gawker Media". CNNMoney. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
- ↑ "Gizmodo Media Group CEO Raju Narisetti Steps Down" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ராஜு நாரிசெட்டி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.