புளூமிங்டன், இந்தியானா
புளூமிங்டன் (Bloomington) என்பது அமெரிக்க மாநிலமான இந்தியானாவின் மத்தியப் பகுதியில் உள்ள மன்ரோ மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். [2] இது இந்தியானாவின் ஏழாவது பெரிய நகரமாகவும், இண்டியானாபொலிஸ் பெருநகரப் பகுதிக்கு வெளியே நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. மன்ரோ மாவட்ட வரலாற்று மையத்தின் கூற்றுப்படி இது "இந்தியானாவின் தெற்கு நுழைவாயில்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் 1818 ஆம் ஆண்டில் கென்டக்கி, டென்னசி, கரோலினாஸ் மற்றும் வர்ஜீனியாவிலிருந்து குடியேறியவர்களின் குழுவால் நிறுவப்பட்டது. அவர்கள் "பூக்களின் புகலிடத்தால்" ஈர்க்கப்பட்டனர். அவர்கள் அதை புளூமிங்டன் என்று அழைத்தனர். [3]
புளூமிங்டன், இந்தியானா | |
---|---|
இந்தியானாவின் மன்ரோ மாவட்டத்தில் புளூமிங்டனின் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 39°09′44″N 86°31′45″W / 39.16222°N 86.52917°W | |
நாடு | ஐக்கிய அமெரிக்க மாநிலம் |
மாநிலம் | இந்தியானா |
மாவட்டம் | மன்ரோ மாவட்டம் |
நகரியம் | புளூமிங்டன், பெரி,ரிச்லான்ட், வான் புரென் |
அரசு | |
• வகை | மாநகர நிர்வாக அமைப்பு |
• நகரத்தந்தை | ஜான் ஹாமில்ட்டன் (மக்களாட்சிக் கட்சி) |
பரப்பளவு | |
• மாநகரம் | 60.69 km2 (23.43 sq mi) |
• நிலம் | 60.22 km2 (23.25 sq mi) |
• நீர் | 0.48 km2 (0.18 sq mi) |
ஏற்றம் | 235 m (771 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மாநகரம் | 79,168 |
• அடர்த்தி | 1,314.72/km2 (3,405.08/sq mi) |
• பெருநகர் | 1,75,506 |
நேர வலயம் | ஒசநே−5 (கிழக்கு நேர வலயம் ) |
• கோடை (பசேநே) | ஒசநே−4 (கிழக்கு நேர வலயம் ) |
சிப் குறியீடு | 47401–47408 |
இடக் குறியீடு | 812 & 930 |
கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் குறியீடு | 18-05860 |
இடைமாநில நெடுஞ்சாலை முறை | |
Major State Roads | |
இணையதளம் | www |
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 79,168 ஆகும். [4]
புளூமிங்டன் இந்தியானா பல்கலைக்கழகத்தின் தாயகமாகும். இது 1820 இல் நிறுவப்பட்டது, செப்டம்பர் 2021 நிலவரப்படி பலகலிக்கழகம் 45,328 மாணவர்களைக் கொண்டுள்ளது. மேலும் இது இந்தியானா பல்கலைக்கழகத்தின் அசல் மற்றும் மிகப்பெரிய வளாகமாகும். பெரும்பாலான வளாக கட்டிடங்கள் இந்தியானா சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளன.
புளூமிங்டன் 1984 ஆம் ஆண்டு முதல் ஒரு மர நகரமாக நிறுவப்பட்டுள்ளது. [5] [6] இந்தியானா பல்கலைக்கழகத்தின் வருடாந்திர சிறிய 500 மிதிவண்டிப் பந்தயத்தின் மறுவடிவமைப்பைக் கொண்ட 1979 ஆம் ஆண்டு வெளியான பிரேக்கிங் அவே திரைப்படம் அகாதமி விருதைப் பெற்றது.
வரலாறு
தொகுபபுளூமிங்டன் அமைந்துள்ள பகுதியில் முன்பு டெலாவேர், பொட்டாவடோமி, மியாமி மற்றும் ஈல் நதி மியாமி ஆகிய மக்கள் வசித்து வந்தனர். [7]
புளூமிங்டன் 1818 இல் மனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 1825 [8] ஆண்டு முதல் புளூமிங்டனில் ஒரு தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புளூமிங்டன் 1827 இல் இணைக்கப்பட்டது.
தற்போதைய நகரத்தின் சின்னம் சனவரி 6, 1986 அன்று பபுளூமிங்டன் பொது நிர்வாக மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [9] இது பியோனி மற்றும் திரௌட் லில்லி ஆகியவற்றின் கலவையாகும். இது 19 ஆம் நூற்றாண்டில் பிராந்திய நாட்டுப்புற கலைஞர்களால் பயன்படுத்தப்பட்ட குயில் வடிவங்கள் மற்றும் டவுன்டவுன் சதுக்கத்தின் வடிவத்தால் ஈர்க்கப்பட்டது. [9]
சான்றுகள்
தொகு- ↑ "2020 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் March 16, 2022.
- ↑ "Find a County". National Association of Counties. Archived from the original on May 31, 2011. பார்க்கப்பட்ட நாள் June 7, 2011.
- ↑ Monroe County History Center. "A Short History of Bloomington & Monroe County". City of Bloomington, Indiana. பார்க்கப்பட்ட நாள் July 6, 2017.
- ↑ "US Census QuickFacts". US Census. பார்க்கப்பட்ட நாள் August 13, 2021.
- ↑ "2015 Tree City USA Communities in Indiana". Arbor Day Foundation. பார்க்கப்பட்ட நாள் November 7, 2016.
- ↑ "Bloomington Recognized by The Arbor Day Foundation as a Tree City of the World". City of Bloomington. பார்க்கப்பட்ட நாள் February 9, 2022.
- ↑ "ArcGIS Web Application". usg.maps.arcgis.com.
- ↑ "Monroe County". Jim Forte Postal History. பார்க்கப்பட்ட நாள் September 5, 2015.
- ↑ 9.0 9.1 To Approve and Adopt a New Logo for the City of Bloomington, Bloomington Common Comm.
வெளி இணைப்புகள்
தொகு- City of Bloomington, Indiana website
- Greater Bloomington Chamber of Commerce
- Tourism Website
- "Bloomington". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 4. (1911). Cambridge University Press. 86-87.