ரிங்கு சிங்

ரிங்கு சிங் (Rinku Singh) ஓர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் உத்தரபிரதேசத்திற்காகவும் விளையாடுகிறார். இவர் ஒரு இடது கை மட்டையாளர். 9 ஏப்ரல் 2023 இல் இவர் தனது ஆட்டத்தினால் மிகவும் பிரபலமானார். இவர் தனது அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், போட்டியின் கடைசிப் பந்துப் பரிமாற்றத்தின் கடைசி 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 ஆறு ஓட்டங்களை அடித்துக் குஜராத் டைட்டன்ஸை தோற்கடிக்க உதவினார். [1]

ரிங்கு சிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிங்கு சிங்
பிறப்பு12 அக்டோபர் 1997 (1997-10-12) (அகவை 27)
அலிகார், உத்தரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை உட்சுழல்
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014–தற்போதுஉத்தரப் பிரதேசம்
2017கிங்ஸ் XI பஞ்சாப்
2018–கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 40 50 78
ஓட்டங்கள் 2875 1749 1392
மட்டையாட்ட சராசரி 59.89 53.00 26.76
100கள்/50கள் 7/19 1/16 0/6
அதியுயர் ஓட்டம் 163* 104* 79
வீசிய பந்துகள் 486 228 66
வீழ்த்தல்கள் 6 7 3
பந்துவீச்சு சராசரி 44.66 21.28 38.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/11 2/26 1/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
30/– 24/– 41/–
மூலம்: Cricinfo, 9 April 2023

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

5 உடன்பிறந்தவர்களில் மூன்றாவதான ரிங்கு சிங், எரிவாயு விநியோக நிறுவனத்தில் பணிபுரிந்த கான்சந்திர சிங்கிற்கு மகனாக ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள அலிகார் மைதானத்தின் அருகில் தனது தந்தையின் முதலாளிகளால் வழங்கப்பட்ட 2 அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் சிறுவயதைக் கழித்தார்.

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

சிங் உத்தரப் பிரதேசத்தை 16 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான நிலைகளிலும், மத்திய மண்டலத்தை 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] இவர் தனது 16 வயதில் மார்ச் 2014 இல் உத்தரப் பிரதேசத்திற்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் அதிக ஓட்டங்களான 83 ஓட்டங்களைப் பெற்றார். [3] இவர் 2016-17 பருவகாலத்தில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் 5 நவம்பர் 2016 அன்று உத்தரப் பிரதேசத்திற்காக தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார் [4]

2018-19 ரஞ்சிக் கோப்பை குழு நிலைப் போட்டிகளில் இவர் ஒன்பது போட்டிகளில் 803 ஓட்டங்களுடன் உத்தரபிரதேச அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்தார். [5] அந்தப் பருவகாலத்தில் பத்து போட்டிகளில் 953 ஓட்டங்களைப் பெற்றார். [6]

இந்தியன் பிரீமியர் லீக்

தொகு

பிப்ரவரி 2017 இல், இவர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். [7] சனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் 80 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். [8]

9 ஏப்ரல் 2023 அன்று, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரிங்கு சாதனை படைத்தார், இறுதி ஓவரில் 5 ஆறு ஓட்டங்களை அடித்து 29 ஓட்டங்களை வெற்றிகரமாக அடைய உதவினார். இது போட்டியின் வரலாற்றில் கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cricketer Rinku Singh Biography in Hindi: How did the son of the person who delivered the gas cylinder hit 5 sixes in the IPL". Yugantar Pravah. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  2. "Teams Rinku Singh played for". CricketArchive. Archived from the original on 25 December 2015. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
  3. "Central Zone: Uttar Pradesh v Vidarbha at Jaipur, Mar 5, 2014". ESPNcricinfo. Archived from the original on 25 December 2015. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
  4. "Ranji Trophy, Group A: Punjab v Uttar Pradesh at Hyderabad (Deccan), Nov 5-8, 2016". ESPN Cricinfo. Archived from the original on 9 November 2016. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
  5. "From irresistible Rajasthan to inconsistent Karnataka". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2021.
  6. "Ranji Trophy, 2018/19 – Uttar Pradesh Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". Cricinfo. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2021.
  7. "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. Archived from the original on 20 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  8. "List of sold and unsold players". ESPN Cricinfo. Archived from the original on 28 January 2018. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  9. "31 Runs scored by Knight Riders in the last over, the highest any team has managed in the 20th over to win a men's T20 chase". ESPN Cricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 10 April 2023. பார்க்கப்பட்ட நாள் 9 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிங்கு_சிங்&oldid=3846697" இலிருந்து மீள்விக்கப்பட்டது