ரெசுல் பூக்குட்டி

ரெசுல் பூக்குட்டி (Resul Pookutty (மலையாளம்: റസൂല്‍ പൂക്കുട്ടി ) (பிறப்பு: மே 30, 1971)[2] இந்தியத் திரைப்பட ஒலி வடிவமைப்பாளர், ஒலித் தொகுப்பாளர் மற்றும் ஒலிக்கலவை கலைஞர் ஆவார்.[3][4] சிலம்டாக் மில்லியனயர் திரைப்படத்தில் ஒலிக்கலவை கலைஞராக பணியாற்றியதற்காக ரிச்சர்டு பிரைக் மற்றும் இயன் டப் ஆகியோருடன் இணைந்து அகாதமி விருது பெற்றார்.[5] இவர் ஹாலிவுட், பாலிவுட், தமிழகத் திரைப்படத்துறை, மற்றும் மலையாளத் திரைப்படத் துறை போன்றவற்றில் பணிபுரிந்துள்ளார்.

பத்மசிறீ மருத்துவர். ரெசுல் பூக்குட்டி
Resul Pookutty.jpg
பிறப்பு 1971 (அகவை 51–52)
அஞ்சல், கொல்லம், கேரளம், இந்தியா
தொழில் ஒலிக்கலவை கலைஞர்
நடிப்புக் காலம் 1997 - தற்போதுவரை
துணைவர் ஷாதியா[1]
இணையத்தளம் http://www.resulpookutty.in

ஆரம்ப வாழ்க்கைதொகு

கேரளாவின் கொல்லம் நகரத்திலிருந்து சுமார் 58 கிமீ தொலைவில் உள்ள அஞ்சல் என்னும் பகுதியின் விளாக்குபரா என்ற ஊரில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். வறுமையான குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்தார். பள்ளிக்கூடத்திற்கு 6 கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். மேலும் இவர் பயின்ற காலத்தில் இவரின் ஊருக்கு மின்சார வசதி இல்லாததால் மண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பயின்றார்.[6][7]

காயம்குளத்தில் உள்ள எம் எஸ் எம் கல்லூரியில் 1987-1990 ஆம் ஆண்டுகளில் இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[8] திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1995 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றார். சட்டம் பயில்வது தனது தந்தையின் விருப்பமாக இருந்ததாகத் தெரிவித்தார்.[4]

சொந்த வாழ்க்கைதொகு

பூக்குட்டியின் மனைவியின் பெயர் சாதியா. இவருக்கு ரயான் என்கிற ஒரு மகனும் சல்னா என்னும் ஒரு மகளும் உள்ளனர்.[9]

பணியாற்றிய திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2004 முஷாபிர் இந்தி
2007 டிராபிக் சிக்னல் இந்தி
2007 காந்தி மை பாதர் இந்தி
2007 சாவரியா இந்தி
2007 தஸ் கஹானியன் இந்தி
2009 சிலம்டாக் மில்லியனயர் (திரைப்படம்) ஆங்கிலம்
2009 கேரள வர்மா பழசி ராஜா மலையாளம்
2010 எந்திரன் (திரைப்படம்) தமிழ்
2011 ரா ஒன் இந்தி
2011 அதமின்டே மலையாளம்
2012 நண்பன் (2012 திரைப்படம்) தமிழ்
2012 தெ பெஸ்ட் எக்சோடிக் மேரிகோல்ட் ஹோட்டல்ஆங்கிலம்
2013 குஞ்ஜனன்தே கதா மலையாளம்
2014 கோச்சடையான் (திரைப்படம்) தமிழ்
2014 அன்கோன் தேகி
ஹைவே
2014 யான் தமிழ்
2015 அன்பிரீடம்
2015 பதேமாரி மலையாளம்
2016ரெமோ (திரைப்படம்)தமிழ்
2016நிருட்டுராகன்னடம்
20172.0 (திரைப்படம்)தமிழ், இந்தி
2017 காபில் இந்தி
2017 ஒரு கத சொல்லட்டுமா சார் இந்தி
2018 கம்மர சங்கமம் மலையாளம்
2018 சங்கமித்ரா தமிழ் [10]

விருதுகள்தொகு

குறிப்புதவிகள்தொகு

  1. It's been an unbelievable ride' தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, January 24, 2009.
  2. http://www.bollywoodlife.com/news-gossip/resul-pookutty-happy-42nd-birthday/
  3. 3.0 3.1 "Resul – the other Indian Oscar nominee". NDTV Movies. 14 பிப்ரவரி 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 ஜனவரி 2009 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 K.K. GOPALAKRISHNAN (23 September 2005). "Directing sound". Chennai, India: The Hindu. Archived from the original on 14 செப்டம்பர் 2006. https://web.archive.org/web/20060914103949/http://www.hindu.com/thehindu/fr/2005/09/23/stories/2005092300770300.htm. பார்த்த நாள்: 23 January 2009. 
  5. "The 81st Academy Awards (2009) Nominees and Winners". oscars.org. 22 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  6. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
  7. Tough journey for sound wizard Resul Pookutty எகானாமிக் டைம்ஸ் , பிப்ரவரி 24, 2009.
  8. [1]
  9. [2]
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-08-05 அன்று பார்க்கப்பட்டது.
  11. "There is no award like a National Award: Resul Pookutty". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 September 2010. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/There-is-no-award-like-a-National-Award-Resul-Pookutty/articleshow/6560487.cms. பார்த்த நாள்: 16 September 2010. 
  12. "Mohanlal, Pookutty get D.Litt.". கொச்சி: தி இந்து. 17 March 2010. Archived from the original on 2 ஏப்ரல் 2010. https://web.archive.org/web/20100402033817/http://www.hindu.com/2010/03/17/stories/2010031760500700.htm. 
  13. "Nobel laureate Venky, Ilayaraja, Rahman, Aamir to receive Padma awards". The Hindu. Archived from the original on 28 ஜனவரி 2010. https://web.archive.org/web/20100128041052/http://beta.thehindu.com/news/national/article94584.ece. பார்த்த நாள்: 28 January 2010. 
  14. "Bahadur Award 2009 for Resul". 2011-07-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-10 அன்று பார்க்கப்பட்டது.
  15. ["http://entertainment.gaeatimes.com/2009/12/04/resul-pookutty-wins-chakkulathamma-swaravarsha-puraskaram-66879/ "Chakulathamma Swarvarsha Puraskaram for Resul"] Check |url= value (உதவி).
  16. "Pazhassi Raja selected as best film". திருவனந்தபுரம்: தி இந்து. 4 January 2010. Archived from the original on 6 ஜனவரி 2010. https://web.archive.org/web/20100106052709/http://www.hindu.com/2010/01/04/stories/2010010450860200.htm. 
  17. "Resul - the other Indian Oscar nominee". NDTV Movies. 14 பிப்ரவரி 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 January 2009 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசுல்_பூக்குட்டி&oldid=3652510" இருந்து மீள்விக்கப்பட்டது