ரெட்டி சாந்தி

இந்திய அரசியல்வாதி

ரெட்டி சாந்தி (Reddy Shanthi)(பிறப்பு c. 1969 ) ஆந்திரப் பிரதேசத்தின் சிறீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிறீகாகுளம் மாவட்டத்தின் பாதப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2019ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார்.

ரெட்டி சாந்தி
சட்டமன்ற உறுப்பினர் Member
பாதபட்டினம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்கல்மாதா வெங்கட ராமண்ணா
உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1969
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

அரசியல்

தொகு

ரெட்டி சாந்தி 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் ஸ்ரீகாகுளம் தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபுவிடம் 1,27,572 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி சார்பில் பதப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.[1]

வாழ்க்கை

தொகு

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் ரெட்டி சாந்தி. இவரது தந்தை பலவலச ராஜசேகரம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும், தாத்தா பாட்டி பாலவலச சங்கம் நாயுடு மற்றும் ருக்மிணம்மா ஆகியோர் ஆந்திராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தனர். இவர் இந்திய வனப் பணி அதிகாரியான ரெட்டி நாகபூஷண ராவை மணந்தார்.[2] இவர்களது மகள் வேதிதா ரெட்டி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டி_சாந்தி&oldid=3882431" இலிருந்து மீள்விக்கப்பட்டது