ரைட் சகோதரர்கள்

கண்டுபிடிப்பாளர்கள்
(ரைட் சகோதரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் (19 ஆகத்து 1871 – 30 சனவரி 1948), வில்பர் ரைட் (16 ஏப்ரல் 1867 – 30 மே 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர்.[1][2][3] முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.[4][5][6][7] 1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது.

ரைட் சகோதரர்கள்
ஓர்வில் ரைட்
வில்பர் ரைட்
1903 இல்
பிறப்புஓர்வில் ரைட்: (1871-08-19)ஆகத்து 19, 1871

, டேட்டன், ஒகையோ
வில்பர் ரைட்: (1867-04-16)ஏப்ரல் 16, 1867

, மில்வில், இந்தியானா.
இறப்புஓர்வில் ரைட்: சனவரி 30, 1948(1948-01-30) (அகவை 76)

, Dayton
வில்பர் ரைட்: மே 30, 1912(1912-05-30) (அகவை 45)

, டேட்டன், ஒகையோ
இனம்செருமனியர், டச்சு, ஆங்கிலேயர்
பணிஓர்வில் ரைட்: பதிப்பாளர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/ விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர்
வில்பர் ரைட்: இதழாசிரியர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர்
வாழ்க்கைத்
துணை
இல்லை (both)

இளமை

தொகு
வில்பர் ரைட்
ஓர்வில் ரைட்
1876 இல்

மில்டன் ரைட் என்ற ஆங்கிலேய-டச்சுக்காரருக்கும் சுசான் கேத்ரின் என்ற ஜெர்மன்-ஸ்விஸ் பெண்மணிக்கும் பிறந்தவர்கள் ஏழு பேர். அவர்களில் வில்பர் 1867 இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்திலும், ஓர்வில் ஒஹையோவின் டேட்டன் என்ற இடத்தில் 1871-இலும் பிறந்தனர்.[8] இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. ரியூச்லின் (1861–1920), லோரின், கேத்தரின் ரைட் (1874–1929), இரட்டையர்களான ஓட்டிசு மற்றும் இடா ஆகியோர் இவர்களது மற்ற குழந்தைகளாவர். இவர்கள் 1870 இல் பிறந்து குழந்தைகளாக இருக்கும்போதே இறந்துவிட்டனர். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார்.[9]

1878 இல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர், பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர்.[10] அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர்.[11]

ஆய்வுகளும் பணிகளும்

தொகு
 
Wright brothers' home at 7 Hawthorn Street, Dayton about 1900. Wilbur and Orville built the covered wrap-around porch in the 1890s.

இரு சகோதரர்களும் உயர்கல்வி வரை பயின்றனர் ஆனால் அதற்கான பட்டயங்கள் எதுவும் பெறவில்லை.[N 1] 1884 இல் ரைட் குடும்பம் இந்தியானாவிலிருந்து ஒஹையோவிலுள்ள டேட்டனுக்குக் குடிபெயர்ந்தது. இங்கு 1870 வரை இருந்தனர்.

1885 இல் வில்பர் ரைட் ஒருமுறை பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட காயத்தால் தனது முன்பற்களை இழந்தார். அதன்பிறகு அவர் முரட்டுத்தனமானவராக மாறினார். எனவே விளையாடச் செல்லாமல் வீட்டிலிருக்கத் தொடங்கினார். சில வருடங்கள் வீட்டில்ருந்த வில்பர் என்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாருக்கு உதவியாக இருந்தார். அச்சமயம் தனது தந்தையின் நூலகத்தில் இருந்த புத்தகங்களைப் படித்துத் தேர்ந்தார். சில நேரஙக்ளில் தனது தந்தைக்கு உதவியாகப் பிரெத்திரென் சபையில் உதவிகள் செய்தார்.[12][13]

ஆலிவர் ரைட் தனது படிப்பை இடையில் நிறுத்தி 1889 இல் தனது சகோதரர் வில்பரின் உதவியுடன் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். பிறகு இருவரும் இணைந்து ஒரு வார இதழைத் தொடங்கினார்கள். 'மேற்கத்திய செய்திகள்' (West Side News) என்ற பெயரில் வெளிவந்த இவ்விதழுக்கு ஆர்வில் வெளியிடுவோராகவும் வில்பர் ஆசிரியராகவும் இருந்தனர். 1890 இவ்விதழை நாளிதழாக மாற்றி 'தி ஈவினிங் ஐடெம்' என்ற பெயரில் வெளியிட்டனர். நான்கு மாதங்கள் வெளிவந்த இவ்விதழ் பிறகு நின்று போனது. அதன்பிறகு வணிக நோக்கிலான அச்சகமாக மாறியது. தனது நன்பர்கள் மற்றும் தன்னுடன் பயின்ற மாணாக்கர்களை தங்களது அச்சகத்தின் வாடிக்கையாளர்களாகப் பெற்றனர். அவர்களில் புகழ்பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான 'பால் லாரன்சு டன்பர்' என்பவரும் ஒருவர். அதன் பிறகு டன்பர் ஆசிரியராகப் பணியாற்றிய 'டேட்டன் டாட்லெர்'(Dayton Tattler) என்ற வார இதழ் ஒன்றை நீண்ட நாட்கள் அச்சிடட்டனர்.[14]

அச்சுத்தொழில் நொடிந்த நிலையில் 1892 இல் ஒரு மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை நிலையத்தைத் தொடங்கினர்.இங்கு பழைய சைக்கிள்களைப் பரிமாற்றவும் செய்தனர். இது பின்னர் ரைட் மிதிவண்டி நிறுவனமாக மாறியது. 1896 இல் இந்நிறுவனம் தனது மிதிவண்டிகளை சொந்தமாகத் தயாரிக்கவும் செய்தது.[15]

இதிலிருந்து அவர்களது பேராவலாகிய வானப் பயன ஆய்வுக்குத் தேவையான பணம் கிடைத்தது. 1890 இல் அவர்கள் ஒரு முறை நாளிதழ் செய்தி ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒட்டோ லிலியந்தால் என்பவர் தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர். இதே ஆண்டில் அக்டேவ் சான்யூட், சாமுவேல் பி. லாங்லீ ஆகியோர் கிளைடர் விமானப் பயணம் பற்றிய முயற்சிகளையும் ஆர்வமுடன் படித்தனர்.[16] பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது ஒட்டோ லிலியந்தால் ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை.[16] சிமித்சோனியன் என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.[17] ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் சாமுவேல் பி. லாங்க்லீ ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.[18] ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர். 1899 இல் அவர்களே வானில் பறப்பது பற்றிய வேலைகளைத் தொடங்கினர். 4 ஆண்டு உழைப்புக்குப் பிறகு 1903 டிசம்பரில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது.

இதற்குத் தேவையான எந்திர திறன்களை அவர்கள் தங்களுடைய அச்சுக்கூடம், மிதிவண்டி, மோட்டார்கள், மற்ற இயந்திரங்கள் மூலம் பெற்றனர். பறக்கும் எந்திரம் போன்ற ஒரு நிலையற்ற வாகனத்தைப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தி சமநிலையில் நிறுத்தலாம் என்ற நம்பிக்கை மிதிவண்டியுடன் வேலை செய்யும்போது அவர்களுக்கு ஏற்பட்டது. 1900 முதல் 1903 வரை தங்களின் முதல் பறக்கும் விமானம் வரை, அவர்கள் பல மிதவை வானூர்திகளைச் சோதனை செய்தனர். அதன்மூலம் தங்களின் விமானிக்கான திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். அவர்களுடைய மிதிவண்டி கடையில் ஊழியரான 'கியார்கு கெய்லே' என்பவரும் அவர்களுடைய முதல் வானூர்தியை அமைப்பதில் அவர்களுடன் இணைந்து முக்கிய பங்குவகித்தார்.

தொழில்நுட்பம்

தொகு

வானில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது, ரைட் சகோதரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றதற்கு மூன்று தொழில்நுட்பங்கள் உதவின. முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் 'முன்னுந்தல்' (Thrust), 'மேலெழுச்சி'(Lift), 'திசைதிருப்பி'(Rudder) எனப்படும் 'முப்புற உந்தல் கட்டுப்பாடு 'என்ற நுணுக்கத்தை ரைட் சகோதரர்கள் கையாண்டனர். ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெயிலியங்கும் எரிபொருள் இயந்திரத்தைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில்ரைட், வில்பர்ரைட் இருவரும் [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.[19]

முயற்சிகளும் வெற்றியும்

தொகு
 
வாஷிங்டன் டி. சி யில் உள்ள தேசிய வானாய்வு அருங்காட்சியகக் கூடத்தில்(National Air and Space Museum in Washington, D.C)வைக்கப்பட்டுள்ள 1903 இல் ரைட் சகோதரர்கள் பறந்த விமானம்.

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina]1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட, 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது [19]

இறுதி நாட்கள்

தொகு

வில்பர்

தொகு

விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே ரைட் சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.[20] 1912 இல் ஒரு முறை தொழில்முறைப் பயணமாகப் போஸ்டன் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது.[21] டேய்டனுக்குத் திரும்பிய பிறகு டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன்நினைவின்றி பல நாட்கள் இருந்தார். இறுதியாகத் தனது 45 ஆம் வயதில் தமது இல்லத்தில் 1912, மே 30 இல் காலமானார்.[N 2]

ஆர்வில் ரைட்

தொகு
 
ஆர்வில் ரைட், 1928.

வில்பர் ரைட் இறந்த பிறகு ரைட் நிறுவனத்தை ஆர்வில் ரைட் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் 1915 இல் ரைட் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமலேயே தமக்கு உதவியாக இருந்த தமது தங்கை காத்ரீன் ரைட் மற்றும் தனது தந்தையுடனும் ஒஹையோவில் ஓக்வுட் எனுமிடத்திற்குக் குடியேறினார். 1917 இல் ஆர்வில்லின் தந்தை தூங்கும்போதே இறந்து போனார். ஆர்வில் 1911 இல் தயாரிக்கப்பட்ட 'மாடல் பி' என்ற விமானத்தைக் கடைசியாக 1918 இல் ஓட்டினார். அதன் பிறகு தொழிலில் இருந்து ஓய்வுபெற்றார். நாசா உள்ளிட்ட பல்வேறு வானாய்வு நிறுவனங்களில் முன்னனி ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

1926 இல் தங்கை காத்ரீன் தனதுடன் பயின்ற தோழரான ஹென்றி ஆஸ்கெல் என்பவரை மணந்தார். இது ஆர்விலை மிகவும் பாதித்தது. இந்தத் திருமணத்தில் ஆர்வில் கலந்து கொள்ளவில்லை. அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவுமில்லை. இறுதியாக 1929 இல் காத்ரின் இறப்புக்கு சற்று முன்னரே அவரைப் பார்க்க ஒப்புக்கொண்டார்.

1948, ஜனவரி 30 இல் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு ஆர்வில் ரைட் காலமானார். இவருடைய உடல் ஒஹையோவின் டேய்ட்டனில் உள்ள இவருடைய குடும்பத்திற்குச் சொந்தமான வுட்லாண்ட் இடுகாட்டில் வில்பர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கருகில் அடக்கம் செய்யப்பட்டது.[23][N 3]

மேற்கோள்கள்

தொகு
குறிப்பு
  1. The diploma was awarded to Wilbur on April 16, 1994, his 127th birthday. See Wilbur Wright entry at Facts/History WayNet
  2. Quote: Dayton, Ohio. Following a sinking spell that developed soon after midnight, Wilbur Wright, aviator and aeroplane builder, died of typhoid fever at 8:15 am to-day. Wright had been lingering for many days and though his condition from time to time gave some hopes to members of his family, the attending physicians, Drs. D.B. Conkihn and Levi Spitler, maintained throughout the latter part of his sickness that he could not recover."[22]
  3. Quote: "Dayton, Ohio, October 30, 1948, Orville Wright, who with his brother, the late Wilbur Wright, invented the airplane, died here tonight at 10:40 in Miami Valley Hospital. He was 76 years old.
மேற்கோள்கள்
  1. "The Wright Brothers & The Invention of the Aerial Age." பரணிடப்பட்டது 2015-08-13 at the வந்தவழி இயந்திரம் Smithsonian Institution. Retrieved: September 21, 2010.
  2. Johnson, Mary Ann. =On the Aviation Trail in the Wright Brothers' West Side Neighborhood in Dayton, Ohio பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம் Wright State University, 2001.
  3. "Flying through the ages." BBC News, March 19, 1999. Retrieved: July 17, 2009.
  4. "Inventing a Flying Machine - The Breakthrough Concept" பரணிடப்பட்டது 2015-01-17 at the வந்தவழி இயந்திரம் The Wright Brothers and the Invention of the Aerial Age, Smithsonian Institution. Retrieved March 5, 2013
  5. "Wagging Its Tail" The Wright Story - Inventing the Airplane. wright-brothers.org. Retrieved March 5, 2013
  6. "Aviation: From Sand Dunes to Sonic Booms" National Park Service. Retrieved March 5, 2013
  7. Padfield, Gareth D., Professor of Aerospace Engineering, and Ben Lawrence, researcher.. "The Birth of Flight Control: An Engineering Analysis of the Wright Brothers’ 1902 Glider." (PDF format) The Aeronautical Journal, Department of Engineering, The University of Liverpool, UK, December 2003, p. 697. Retrieved: January 23, 2008.
  8. "www.americanheritage.com Wright Brothers". Archived from the original on 2010-03-15. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
  9. Wallechinsky and Wallace 2005, p. 12.
  10. "The Wright Family." பரணிடப்பட்டது 2005-04-12 at the வந்தவழி இயந்திரம் U.S. Centennial of Flight Commission, 2003. Retrieved: September 21, 2010..
  11. Crouch 2003, pp. 56–57.
  12. Jakab 1997, p. 164.
  13. Crouch 2003, p. 130.
  14. "What Dreams We Have." nps.gov. Retrieved: September 21, 2010.
  15. "The Van Cleve Bicycle that the Wrights Built and Sold." பரணிடப்பட்டது 2012-10-08 at the வந்தவழி இயந்திரம் U.S. Centennial of Flight Commission, 2003. Retrieved: September 21, 2010.
  16. 16.0 16.1 Crouch 2003, Chapter 10, "The Year of the Flying Machine" and Chapter 11, "Octave Chanute".
  17. "Wilbur Wright May 30, 1899 Letter to Smithsonian." பரணிடப்பட்டது 2009-06-26 at the வந்தவழி இயந்திரம் Smithsonian Scrapbook: Letters from the Archives. Retrieved: September 21, 2010.
  18. Howard 1988, p. 30.
  19. 19.0 19.1 "ரைட் சகோதரர்கள்". ஆக்கம்: எம்.எச்.எம் அர்ஸாத் (MA(R),BA, SLTS). அறிவுக்களஞ்சியம். சனி, 10 நவம்பர், 2012. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  20. Crouch 2003, p. 118.
  21. Maurer, Richard (2003). The Wright Sister: Katherine Wright and her Famous Brothers. Macmillan. pp. 88–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0761315469. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
  22. "Wilbur Wright Dies of Typhoid Fever. Ill More Than Three Weeks, the End Came at 3:15 o'clock Thursday Morning." த நியூயார்க் டைம்ஸ், May 30, 1912. Retrieved: July 21, 2007.
  23. "Orville Wright, 76, is Dead in Dayton; Co-Inventor With His Brother, Wilbur, of the Airplane Was Pilot in First Flight." த நியூயார்க் டைம்ஸ், January 31, 1948. Retrieved: July 21, 2007.
துணை நூல்கள்

காப்புரிமை

தொகு

அருங்காட்சியகம்

தொகு

படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wright brothers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைட்_சகோதரர்கள்&oldid=3719366" இலிருந்து மீள்விக்கப்பட்டது