முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரொட்ரிகோ துதெர்த்தெ

ரொட்ரிகோ ரோடி ரோவா துதெர்த்தெ (Rodrigo "Rody" Roa Duterte[2], பிறப்பு மார்ச் 28, 1945), விளிப்பெயர் டிகொங், பிலிப்பீனிய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். பிலிப்பீன்சில் மிக நீண்ட காலம் மேயராகப் பணியாற்றியவர்களில் ஒருவராவார். மிண்டனாவோ தீவில் 1,449,296 மக்கள் வாழும் டவாவோ நகரத்தின் மேயராக ஏழு முறை, 22 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளார். முன்னதாக துணை மேயராகவும் நாடாளுமன்றத்தில் டவாவோ நகரத்தின் சார்பான உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ரொட்ரிகோ துதெர்த்தெ
Rodrigo Duterte
Rodrigo Duterte (2009).jpg
டவாவோ நகரத் தந்தை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூன் 30, 2013
முன்னவர் சாரா துதெர்த்தெ
பதவியில்
சூன் 30, 2001 – சூன் 30, 2010
முன்னவர் பெஞ்சமின் சி. டெ குசுமான்
பின்வந்தவர் சாரா துதெர்த்தெ
பதவியில்
பெப்ரவரி 2, 1988 – மார்ச் 19, 1998
முன்னவர் சாக்கின்டோ டி. ருபில்லார்
பின்வந்தவர் பெஞ்சமின் சி. டெ குசுமான்
டவாவோ நகரத் துணை மேயர்
பதவியில்
சூன் 30, 2010 – சூன் 30, 2013
முன்னவர் சாரா துதெர்த்தெ
பின்வந்தவர் பவலோ துதெர்த்தெ
பதவியில்
மே 2, 1986 – நவம்பர் 27, 1987
பொறுப்பில்
முன்னவர் கார்னெலியோ பி. மாசுகரினோ
பின்வந்தவர் கில்பெர்ட் ஜி. அபெல்லாரா
டவாவோ நகர நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 1998 – சூன் 30, 2001
முன்னவர் பிராசுப்ரோ நோகிரேலெசு
பின்வந்தவர் பிராசுப்ரோ நோகிரேலெசு
தனிநபர் தகவல்
பிறப்பு ரொட்ரிகோ ரோவா துதெர்த்தெ
மார்ச்சு 28, 1945 (1945-03-28) (அகவை 74)
மாசின், பிலிப்பீன்சு
அரசியல் கட்சி பிடிபி–லபான் (தேசிய)
அக்பாங் ச டவோங் லுங்சோட் (உள்ளூர்)
வாழ்க்கை துணைவர்(கள்) எலிசபெத் சிம்மர்மேன் (1973–1998)
Domestic partner சியெலடோ "ஹனிலெட்" அவான்செனா[1]
பிள்ளைகள் பவலோ
சாரா
செபாஸ்டியன்
வெரொனிகா
படித்த கல்வி நிறுவனங்கள் பிலிப்பீன்சு பல்கலைக்கழக லைசியம்
சான் பெடா சட்டக் கல்லூரி
இணையம் பரப்புரை வலைத்தளம்

குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக (சூன்ய சகிப்பு) உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றுள்ளார். டைம் இதழ் இவரை "தண்டிப்பவர்" என பெயரிட்டுள்ளது. துதெர்த்தெயுடன் தொடர்புள்ள காப்புக்குழுக்கள் போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கும்பல் உறுப்பினர்களு மற்றும் பிற சட்டவிரோத குழுக்களை தண்டனைக் கொலை செய்ததாக கருதப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் துதெர்த்தெ டவாவோ நகரத்தை "பிலிப்பீன்சின் கொலைத் தலைநகரம்" என்பதிலிருந்து “தென்கிழக்காசியாவின் மிகவும் அமைதியான நகரமாக” மாற்றியுள்ளார்.[3][4][5]

பிலிப்பீன்சு குடியரசுத் தலைவராகப் போட்டியிட பலமுறை வேண்டுகோள் விடப்பட்டும்[6] 2015 வரை தவறான அரசமைப்பு எனக் கூறியும் குடும்ப எதிர்ப்பு காரணமாகவும் துதெர்த்தெ செவிமடுக்கவில்லை.[7] இருப்பினும், நவம்பர் 21, 2015இல் 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். மே 2016 தேர்தல் முடிவுகளில் முன்னணியில் உள்ளார்.[8]

மேற்சான்றுகள்தொகு

  1. Duterte’s common-law wife joins him in Manila events – Rappler.
  2. Personal Data from i-site.ph. URL last accessed 2006-10-14.
  3. "The Punisher". TIME.com (19 July 2002). பார்த்த நாள் 15 April 2016.
  4. "The Punisher: ‘I am 100 per cent terrorist’". NewsComAu (30 June 2014). பார்த்த நாள் 15 April 2016.
  5. "The Punisher - Eye For an Eye". பார்த்த நாள் 15 April 2016.
  6. [1]
  7. [2]
  8. Oliver Holmes. "Philippines election: 'Punisher' Rodrigo Duterte in lead as polls close". the Guardian. பார்த்த நாள் 9 May 2016.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொட்ரிகோ_துதெர்த்தெ&oldid=2218255" இருந்து மீள்விக்கப்பட்டது