ரோக்சானா (Roxana) என்பவர் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் நடு ஆசியப் பகுதியில் உள்ள சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் ஆளுநர் ஆக்சியாதெஸ் மகள் ஆவார்.[1][2][3]

ரோக்சானா
பேரரசர் அலெக்சாந்தர் - ரோக்ஸானா திருமணம்
பிறப்புகிமு 340
சோக்தியானா அல்லது பாக்திரியா
இறப்புகிமு 310
மாசிடோனியா, பண்டைய கிரேக்கம் [
துணைவர்பேரரசர் அலெக்சாந்தர்
குழந்தைகளின்
பெயர்கள்
நான்காம் அலெக்சாண்டர்
தந்தைஆக்சியாதெஸ்
மதம்சொராட்டிரிய நெறி

பாரசீகத்தின் இறுதி அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் தாராவை வென்ற அலெக்சாந்தர் அவரது மகளான ரோக்சானாவை மணந்தார். இவர் பிறந்த தேதி சரியாகத் தெரியவில்லை, ஆனால் பேரரசர் அலெக்சாந்தர் உடனான திருமணத்தின் போது இவர் பதின்ம வயதின் பிற்பகுதியில் அல்லது இருபதுகளின் துவக்கத்தில் இருந்திருக்கலாம். ரோக்சானா கிமு 310-இல் நான்காம் அலெக்சாந்தரைப் பெற்றெடுத்தார். [2]

அலெக்சாந்தரும், ரோக்சானாவும், சித்திரம், ஆண்டு, 1756
அலெக்சாந்தர்-ரோக்சானா திருமண விழா சித்திரம்

வரலாறு

தொகு

பாரசீக இளவரசி ரோக்சானா கிமு 340-இல் சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் மாகாண ஆளுநரான ஆக்சியாதெஸ் எனும் பிரபுவிற்கு பிறந்தார். ஆக்சியாதெஸ் பாரசீகத்தின் இறுதி அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் தாராவைக் கொன்று, தன்னை சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் மன்னராக அறிவித்துக் கொண்டார். அலெக்சாந்தர் சோக்தியானா-பாக்திரியா பகுதிகளை வென்ற பின்னர். ரோக்சானா மீது அலெக்சாந்தர் கண்டவுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது. பின் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை பாரசீக மற்றும் கிரேக்கப் படைத்தலைவர்கள் முழுமனதாக ஏற்கவில்லை. எனவே ரோக்சானாவை பாபிலோன் அருகே உள்ள சூசா நகரத்தில் பத்திரமாக வைத்து காத்தார். அலெக்சாந்தர் சூசா நகரத்திற்கு திரும்பிய போது ரோக்சானாவின் சகோதரரை ஒரு குதிரைப்படைத் தலைவராக நியமித்தார். இந்தியாவை கைப்பற்றுவதற்கு ஏதுவாக ரோக்சானாவின் தந்தையான ஆக்சியாதெசை இந்து குஷ் பகுதிகளின் ஆளுநராக அலெக்சாந்தர் நியமித்தார். பாரசீகர்கள் தனது அரசாங்கத்தை நன்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், அலெக்சாந்தர்ர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாரசீக மன்னர் மூன்றாம் தாராவின்ன் மகளான ஸ்டேடிரா என்பவரையும் மணந்தார்.[4]

கிமு 323-இல் அலெக்சாந்தர் பாபிலோனில் நோய்வாய்ப்பட்டு திடீரென்று இறந்தார்.[5] அலெக்சாந்தரின் இறப்பிறகுப் பின் ரோக்சானா அலெக்சாந்தரின் மற்ற விதவை மனைவிகளான ஸ்டேடிரா மற்றும் ஸ்டேடிராவின் சகோதரி ட்ரைபெடிஸ்[6] மற்றும் அவரது உறவினரான இரண்டாம் பாரிசாடிஸ் (அலெக்ஸாண்டரின் மூன்றாவது மனைவி) ஆகியோரைக் கொன்றதாக நம்பப்படுகிறது. 317 வாக்கில், நான்காம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்ட ரோக்சானாவின் குழந்தை, பிலிப் அர்ஹிடேயஸின் மனைவி இரண்டாம் யூரிடிசால் செய்யப்பட்ட சூழ்ச்சிகளால் அரசனாகும் உரிமையை இழந்தான்.[4] பின்னர் ரோக்சனாவும் அவரது மகனும் மாசிடோனியாவில் அலெக்சாந்தரின் தாயார் ஒலிம்பியாசால் பாதுகாக்கப்பட்டனர்.[7] கிமு 316 இல் ஒலிம்பியாஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரோக்ஸானா மற்றும் அலெக்சாண்டர் IV ஆம்பிபோலிஸ் கோட்டையில் கசாண்டர் சிறையில் அடைக்கப்பட்டார்.[8] கிமு 315 இல் மாசிடோனிய தளபதி ஆன்டிகோன்னாஸ் இவர்கள் சிறை வைக்கப்பட்டதைக் கண்டித்தார்.[9] கிமு 311 இல் ஆன்டிகோனசுக்கும் கசாண்டருக்கும் இடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை நான்காம் அலெக்சாந்தரின் அரசாட்சியை உறுதிப்படுத்தியது. ஆனால் கசாண்டரே அவனது பாதுகாவலனாக இருந்தார்.[9] அதைத் தொடர்ந்து மாசிடோனியர்கள் அவரை விடுவிக்கக் கோரினர்.[10] இருப்பினும், அலெக்சாந்தரையும் ரோக்சானாவையும் கொல்லுமாறு கசாண்டர் கிளாசியாசுக்கு உத்தரவிட்டார்.[11] கி.மு. 310 வசந்த காலத்தில் இவர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது, ஆனால் இவர்களின் மரணம் கோடை காலம் வரை மறைக்கப்பட்டது.[12]

கொரவங்கள்

தொகு

சிறுகோளான 317 ரோக்சானா என்ற பெயர் இவரது நினைவாக இடப்பட்டது.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. Ahmed, S. Z. (2004). Chaghatai: the Fabulous Cities and People of the Silk Road. West Conshokoken: Infinity Publishing. p. 61.
    - Strachan, Edward; Bolton, Roy (2008). Russia and Europe in the Nineteenth Century. London: Sphinx Fine Art. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907200-02-1.
    - Ramirez-Faria, Carlos (2007). Concise Encyclopedia of World History. New Delhi: Atlantic Publishers & Distributors. p. 450. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-269-0775-4.
  2. 2.0 2.1 Christopoulos, Lucas (August 2012). Victor H. Mair. ed. "Hellenes and Romans in Ancient China (240 BC – 1398 AD)". Sino-Platonic Papers (Chinese Academy of Social Sciences, University of Pennsylvania Department of East Asian Languages and Civilizations) (230): 4. பன்னாட்டுத் தர தொடர் எண்:2157-9687. https://www.sinoptic.ch/textes/publications/2012/201208_Christopoulos.Lucas_Hellenes.and.Romans.in.Ancient.China-en.pdf. 
  3. "Roxana". Encyclopædia Britannica. (6 November 2019). 
    - Schmitt, Rüdiger (20 July 2002). "OXYARTES". Encyclopædia Iranica.  
    - Strabo 11.11.4.
    - Rawlinson, Hugh G. (1912). Bactria, the History of a Forgotten Empire.[page needed]
  4. 4.0 4.1 Badian, Ernst. "Welcome to Encyclopaedia Iranica". iranicaonline.org (in அமெரிக்க ஆங்கிலம்). Encyclopedia Iranica. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. அலெக்சாந்தரின் மர்ம மரணம்: இந்தியா வந்தவரை முடக்கிய நரம்பியல் குறைபாடு
  6. Plutarch. Alex. 77.4
  7. Anson, Edward M. (14 July 2014), p.106
  8. Anson, Edward M. (14 July 2014), p.116
  9. 9.0 9.1 Simpson, R. H. (1954). "The Historical Circumstances of the Peace of 311". The Journal of Hellenic Studies 74: 28. doi:10.2307/627551. பன்னாட்டுத் தர தொடர் எண்:0075-4269. https://www.jstor.org/stable/627551. 
  10. Thirlwall, Connop (1840). A History of Greece (in ஆங்கிலம்). Longmans. p. 318.
  11. Thirlwall, Connop (1840), p.319
  12. Anson, Edward M. (14 July 2014), p.149
  13. Schmadel, Lutz D. (2007). "(317) Roxane". Dictionary of Minor Planet Names – (317) Roxane. இசுபிரிங்கர் பதிப்பகம். p. 42. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-29925-7_318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரோக்சானா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோக்சானா&oldid=3931355" இலிருந்து மீள்விக்கப்பட்டது